குழந்தைகள் இரவு நேரத்தில் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஒரு இயற்கையான விஷயம். இது குழந்தைக்கு பெரும்பாலும் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் திறன் வளர்ச்சியடையாத காரணத்தால் நடக்கிறது. பொதுவாக 5 வயதுக்குப் பிறகு இந்தப் பழக்கம் தானாகவே குறைய வேண்டும். ஆனால் சில குழந்தைகளில் இது 10 வயதை கடந்தும் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் தூக்கத்தின்போது சிறுநீர் கழிக்கும் இந்த நிலை "நாக்டர்னல் என்யூரிசிஸ்" (Nocturnal Enuresis) என்று அழைக்கப்படுகிறது. இது மரபணு தொடர்பான காரணங்களால் ஏற்படலாம். இதற்கு உணவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். சில உணவுகள் சிறுநீர்ப்பையைத் தூண்டி, இந்தப் பிரச்சனையை அதிகரிக்கச் செய்யும். எனவே, குழந்தைகளின் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்துவது அவசியம். இரவில் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
குழந்தைகள் இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்சினையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். பிரைமரி பெட்வெட்டிங் (Primary Bedwetting) மற்றும் செகண்டரி பெட்வெட்டிங் (Secondary Bedwetting). முதலில் பிரைமரி பெட்வெட்டிங் பற்றி பார்க்கலாம். இது பெரும்பாலும் நரம்பு மண்டலம் மற்றும் சிறுநீர்ப்பையின் கட்டுப்பாட்டு இயக்கத்தில் ஏற்படும் பிரச்சினைகளால் ஏற்படுகிறது. அதே போல செகண்டரி பெட்வெட்டிங், இது சிறுநீர்த்தொற்று, கால்சியம் அதிகரிப்பு, சர்க்கரை நோய் அல்லது உணர்ச்சி சார்ந்த காரணங்களால் ஏற்படலாம்.
பொதுவாக, குழந்தைக்கு சிறுநீர்ப்பை நிரம்பியதும் மூளைக்கு சிக்னல் அனுப்பப்படுகிறது. இது குழந்தையை தூக்கத்தில் இருந்து எழுப்பி சிறுநீர் கழிக்கத் தூண்டுகிறது. ஆனால், சில குழந்தைகளில் இந்த சிக்னல் தாமதமாகவோ அல்லது சரியாக செயல்படாமலோ இருப்பதால், அவர்கள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிடுகிறார்கள். அதே போல இரவில் சிறுநீரின் அளவைக் கட்டுப்படுத்தும் வாசோப்ரெசின் (Vasopressin) என்ற ஹார்மோன் சரியான அளவில் சுரக்காதபோது, சிறுநீர் அதிகம் உற்பத்தியாகிறது. இதனால், சிறுநீர்ப்பை விரைவாக நிரம்பி, குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிக்க நேரிடுகிறது.
காஃபின் (Caffeine) சிறுநீர்ப்பையைத் தூண்டும். குளிர்பானங்கள், சாக்லேட், டீ மற்றும் கோகோ போன்றவற்றில் காஃபின் உள்ளது. இவை குழந்தைகளை இரவில் சிறுநீர் அதிகம் கழிக்க வழிவகுக்கும். எனவே, மாலை நேரத்தில் இவற்றைத் தவிர்க்கவும்.
அதிக சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகள் உள்ள உணவுகள் (கேக், குக்கீஸ், மிட்டாய்) சிறுநீர்ப்பையை அதிகம் வேலை செய்ய வைக்கின்றன. மேலும், இவை உடலில் நீர்ச்சத்தைக் குறைத்து, சிறுநீர் அடர்த்தியாக்கும்.
ஆரஞ்சு, தக்காளி, வினிகர் போன்ற புளிப்பு உணவுகள் மற்றும் காரமான சுவையுள்ள உணவுகள் சிறுநீர்ப்பையை எரிச்சலூட்டலாம். இதனால், இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்சினை ஏற்படலாம்.
மேலும் படிக்க: தாய்ப்பால் கட்டிக்கொண்டால் இந்த வீட்டு வைத்தியத்தை செய்யுங்க, உடனே வலி குறையும்
சில குழந்தைகளுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் (சீஸ், பனீர்) சிறுநீர்ப்பையைத் தூண்டலாம். குறிப்பாக, இரவு நேரத்தில் இவற்றைக் கொடுப்பதைக் குறைக்கவும்.
குழந்தைகள் இரவில் சிறுநீர் கழிப்பது பெரும்பாலும் தற்காலிகமானது மற்றும் வயது வந்தபடி தானாகவே சரியாகிவிடும். ஆனால், இது நீண்டகாலமாக தொடர்ந்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. உங்கள் குழந்தை இரவில் சிறுநீர் கழிப்பதைக் குறைக்க, மேலே குறிப்பிட்ட உணவுகளை மாலை நேரத்தில் தவிர்க்கவும். அதற்கு பதிலாக தண்ணீர் அளவாகக் கொடுத்து, உப்பு குறைந்த உணவுகளை சாப்பிட குடுக்கலாம். குழந்தையின் உணவுப் பழக்கம் சரியானால் போதும் இந்தப் பிரச்சனை குறையும்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com