பெண்களுக்கு கல்வியறிவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ? அந்தளவிற்கு நிதி தொடர்பான விஷயங்களில் கல்வியறிவுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் குடும்பத்தின் வரவு செலவு கணக்குகளைக் கூட முறையாக நிர்வகிக்க முடியாது. வாழ்நாள் முழுவதும் பல சவால்களையும் எதிர்கொள்ள நேரிடும். இந்த சூழலில் நிதி பாதுகாப்பை அடையவும், தங்களுடைய வாழ்க்கையில் எவ்வித பணபிரச்சனைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் நிதி கல்வியறிவு கட்டாயம் இருக்க வேண்டும். இவற்றைக் கற்றுக்கொள்வதற்கு எந்த கல்வி நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே சில விஷயங்களை வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம் நிதி கல்வியறிவைப் பெற முடியும்.
பெண்களும் நிதி கல்வியறிவும்:
குடும்ப பட்ஜெட்:
பொதுவாக நிதி கல்வியறிவு என்பது பெண்களுக்கு எவ்வாறு வருமானத்தை பகுப்பாய்வு செய்து, செலவுகளை நிர்வகிக்க முடியும் என்பதை அறிந்துக்கொள்வதற்குப் பேருதவியாக இருக்கும். குடும்ப பட்ஜெட்டை பெண்கள் நிர்விகிக்க கற்றுக்கொள்ளும் போது, தங்களுடைய பணம் எங்கு செல்கிறது? எதில் அதிக செலவாகிறது? சேமிப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்பது குறித்து அறிந்துக் கொள்ள முடியும். கல்வி செலவுகள், மருத்துவ செலவுகள், குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய செலவுகள் மற்றும் இதர அவசர செலவுகளுக்கு எப்படி பணத்தை சேமிக்க வேண்டும்? என்பது குறித்து தெரிந்துக் கொள்ள முடியும்.
கடன் மேலாண்மை:
ஒவ்வொரு குடும்பத்திலும் கடன் மிகப்பெரிய மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். ஆண்களை விட பெண்கள் நிதியறிவுடன் இருக்கும் போது, எவ்வித கடன் பிரச்சனைகள் வந்தாலும் அதை திறம்ப கையாளக்கூடிய அறிவுத்திறனைப் பெருவார்கள். எனவே சிறிய தொகை பணத்தை எங்காயவது வாங்கியிருந்தாலும் அதற்குரிய வட்டி விகிதங்கள் என்னென்ன? எப்படி அதை திருப்பிச் செலுத்த முடியும்? என்பது குறித்த தகவல்களை அறிந்துக் கொள்வது அவசியம். இதோ கடன் வாங்கினால் அந்த தொகையை திருப்பிச் செலுத்தும் நடைமுறைகளையும் தெரிந்துக் கொள்வது நல்லது.
எதிர்கால முதலீடுகள்:
முதலீடு என்பது நீண்ட கால நிதித் திட்டமிடலின் இன்றியமையாத அங்கமாகும். பெண்களில் சிலர் அறியாமையால் சில விஷயங்களைத் தெரிந்துக் கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர். முறையாக தகவல் மற்றும் எந்த முதலீடு திட்டத்தில் பணம் செலுத்தினால் அதிக வட்டி விகிதத்தைப் பெற முடியும்? என்பது குறித்து கட்டாயம் அறிந்துக் கொள்வது அவசியம். குறிப்பாக சேமிப்புப் பத்திரம், தங்கப்பத்திர திட்டம், பரஸ்பர நிதிகள் மற்றும் எதிர்கால ஓய்வூதியத்திற்கு பயனளிக்கும் திட்டங்களில் கட்டாயம் முதலீடு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க:டீன் ஏஜ்ஜில் உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறதா? பெற்றோர்களே உஷாரா இருந்துக்கோங்க!
இதே போன்ற முறைகளைத் தொடர்ச்சியாக பின்பற்றினாலே பெண்கள் தங்கள் வீட்டு வரவு செலவுத் திட்டங்களைக் கட்டுப்படுத்தவும், அவர்களின் வரக்கூடிய பணத்தை வெற்றிக்கரமான நிர்வகிக்கவும் முடியும். குறிப்பாக பட்ஜெட், கடன் மேலாண்மை, முதலீடு மற்றும் வாழ்க்கை மாற்ற திட்டமிடல் போன்ற தலைப்புகளைப் புரிந்துகொள்வதன் மூலம் பெண்கள் தங்கள் நிதி நோக்கங்களை அடைய முடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
Image source - Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation