மகள் / மகன் யாராக இருந்தாலும் தந்தையின் நோக்கம் ஒன்றே. நன்றாக படிக்க வைத்து உயரிய இடத்தில் பணியமர்த்தி பெரிய ஆளாக்கி அழகு பார்க்க வேண்டும். தாயின் அன்பை நேரடியாக காணும் நாம் குடும்ப நலுனுக்கு தந்தையின் செயல்களை எளிதில் புரிந்துகொள்வதில்லை. ஆண்கள் தந்தை ஸ்தானத்திற்கு மாறும் போதும் பெண்கள் கணவனை தந்தை ஸ்தானத்தில் பார்க்கும் போதும் தம் தந்தை எதிர்கொண்ட சிரமங்களை எண்ணி பார்க்கின்றனர். மகள் / மகன் இருவரது வாழ்விலும் மறைமுக தூணாக விளங்குவது தந்தையே. பிள்ளைகளுக்காக எண்ணற்ற தியாகங்கள் செய்யும் தந்தையை போற்றி கொண்டாடுவது இந்த நாளின் நோக்கம். மேற்கத்திய நாடுகளில் இதன் கொண்டாட்டம் தொடங்கினாலும் தற்போது உலகளவில் பரவலாக கடைபிடிக்கப்படுகிறது.
தந்தையர் தினம் 2025
ஒவ்வொரு ஆண்டும் தந்தையர் தின கொண்டாட்டம் மாறக்கூடும். ஏனெனில் ஜூன் மாத மூன்றாவது வார ஞாயிற்றுக்கிழமை தந்தை தினம் கொண்டாடப்படும். மகளிர் தினம் போல் குறிப்பிட்ட தேதியில் அமைவதில்லை. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தந்தையர் தினத்திற்கு பெரியளவு வரலாற்று தரவுகள் கிடையாது. அன்னையர் தினம் மே மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக ஜூன் மாதத்தில் தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தந்தையர் தினத்தின் பின்னணி
1908ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிலக்கரி சுரங்கத்தில் 361 ஆண்கள் விபத்தில் உயிரிழந்தனர். அதில் பெரும்பாலானோர் தந்தை என்பதால் உள்ளூர் சர்ச்சில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. எனவே தந்தையர் தினம் தொடக்கத்தில் கொண்டாட்ட நாளாக கருதப்படவில்லை. அதன் பிறகு 1910ல் சோனோரா ஸ்மார்ட் டாட் என்ற பெண் காரணமாக தந்தையர் தினத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது. அன்னையர் தினம் போலவே தந்தையும் கெளரவம் செய்யப்பட வேண்டுமென சோனோரா ஸ்மார்ட் கருதினார். அவருடைய தந்தை வில்லியம் ஜாக்ஸன் ஸ்மார்ட் ராணுவத்தை சேர்ந்தவர். மனைவியின் மறைவுக்கு பிறகு ஆறு குழந்தைகளை ஒற்றை மனிதராக வளர்த்து உயர்த்தினார். ஜூன் 5ஆம் தேதி அவருடைய பிறந்தநாளில் தந்தையர் தினம் கொண்டாட்ட சோனோரா விரும்பினார். ஆனால் சில சிக்கல்கள் ஏற்படவே முதல் தந்தையர் தினம் 1910ல் ஜூன் 19ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த நாளில் தந்தைக்கு பரிசளிப்பதை விட அவர் குடும்பத்திற்காக செய்த தியாகங்களையும், குழந்தை வளர்ப்பில் காட்டிய அர்ப்பணிப்பையும் நினைத்து பார்க்க வேண்டும்.
1972ல் தந்தையர் தினம் விடுமுறையாக அறிவித்து அப்போதைய அமெரிக்க அதிபரால் சட்டம் இயற்றப்பட்டது. இந்த நாளில் தந்தைக்கு பரிசளிப்பது முக்கியமல்ல. வாழ்நாளில் பெரும்பாலான நேரத்தை குடும்ப நலனுக்காக அர்ப்பணித்த தந்தையின் அன்பை உணர்ந்தால் போதும்.
மேலும் படிங்கதந்தையர் தினம் : தோளில் சுமந்த வாழ்க்கை வழிகாட்டிக்கு தந்தையர் தின வாழ்த்துகள்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation