எந்த ஒரு பிள்ளையிடமும் முதல் சூப்பர் ஹீரோ எனக் கேட்டால் அப்பா என்பார்கள். எந்நேரமும் அப்பா அடிப்பார், கோபம் கொள்வார் என பயமுறுத்தியே அப்பா மீது நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் பிள்ளையை பெற்றெடுக்கும் தந்தைக்கு மகன் / மகள் யாராக இருந்தாலும் தன்னை வருத்திக்கொண்டு சிறந்த வாழ்க்கையை அமைத்து தர வேண்டும் என உழைக்கும் ஜீவன் அப்பா. இந்தாண்டு ஜூன் 15ஆம் தேதி கொண்டாடப்படும் தந்தையர் தினத்தில் அன்பு அப்பாவுக்கு அனுப்ப வேண்டிய வாழ்த்து, கவிதை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தந்தையர் தின வாழ்த்து 2025
- தோள் கொடுக்கும் முதல் தோழன்... பிள்ளைகளின் முதல் சூப்பர்ஹீரோ... நிகழ்கால கதாநாயகன்... அப்பா மட்டுமே... தந்தையர் தின வாழ்த்துகள்
- வழியும் வலியையும் வலிமையாக மாற்றி புது வழியை நம் கண்முன் காட்ட கூடியவரே தந்தை... தந்தையர் தின வாழ்த்துகள்
- சிறு வயதில் ஆசானாய்... வாலிப வயதில் தோழனாய்... வாழ்க்கை பயணத்தில் பாதையாய் வழிகாட்டு அன்புள்ள அப்பாவுக்கு தந்தை தின வாழ்த்துகள்
- தாய்க்கு பின் தாரம் உண்டு... ஆனால் தந்தைக்கு பின் எவருமில்லை... தந்தையர் தின வாழ்த்துகள்
- தலைக்கு மேல் சுமந்து அழகு பார்த்த அப்பாவை நாம் எந்நாளும் தலை குனியவிடக் கூடாது...
- வில்லன் போல் நீ நடித்ததெல்லாம் கவசம்போல் காத்திடவே என உணர்ந்தேன் அப்பா... இனிய தந்தையர் தின வாழ்த்துகள்
- நான் சிகரம் தொட தன்னை ஏணியாக்கிய அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்துகள்
- வயிற்றில் சுமக்கவில்லை என்றாலும் கூட குறை ஒன்றும் வைக்கவில்லை... இயற்கை கொடுத்தால் அந்த வலியையும் தாங்க தயாராகும் அப்பாவுக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துகள்
- நம் வாழ்க்கை விருட்சமாக தன்னை வேராக்கி கொண்ட தந்தைக்கு இந்நாளில் தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவிப்போம்
- இனிய தந்தையர் தின வாழ்த்துகள்
- உழைப்பால் தன்னை உருக்கி பிள்ளைகளை முந்தியிருக்கச் செய்து அறிவு, ஆற்றல், அன்பு, பண்பு, வளத்தைத் தந்ததால் அவரே அப்பா... இனிய தந்தையர் தின வாழ்த்துகள்
- அப்பா எனும் ஆலமர நிழல் இருந்தவரை வாழ்க்கையில் எனும் வெயில் நம்மை வாட்டுவது இல்லை...
- அப்பாவின் தோளில் ஏறி சாமியை பார்க்கும் போது உணரவில்லை.... சாமியின் தோள் மீறி தான் ஏறி இருக்கின்றேன் என்று... தந்தையர் தின வாழ்த்துகள்
- தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே... இனிய தந்தையர் தின வாழ்த்துகள்
- உடல், பொருள், ஆவி அனைத்தும் நல்கி பெற்ற மகனின் நலம் பேண தினம் உழைத்த தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துகள்
- உண்ணாமல், உறங்காமல், ஓய்வறியா உழைப்பினை நாளும் நல்கி பிள்ளைகள் வாழ்வின் இன்பமே எதிர்பார்த்து வாழும் அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்
- மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்...
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation