ஏகாதசி விரதம் குறித்து சிவபெருமானிடம் பார்வதி தேவியிடம் கேட்ட போது அதற்கு அவர் பல விளக்கங்களை கூறி இருக்கிறார். ஒரே வார்த்தையில் கூறினால் அஸ்வமேத யாகம் செய்த பலன் ஒருத்தருக்கு கிடைத்திட அவர் இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் நடக்கும். இந்த விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும், வறுமை நீக்கும், செல்வம் சேரும் வாழ்க்கையில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். நாம் எதை வேண்டும் என நினைத்து விரதத்தை கடைபிடிக்கிறோமோ அது நிச்சயமாக நடக்கும். அதுமட்டுமல்ல வாழ்க்கைக்கு பிறகு வைகுண்டத்தில் இடத்தை பெற்றுத் தரக்கூடிய வழிபாடு என்றால் அது இந்த ஏகாதசி வழிபாடு தான். வாழ்க்கைக்கு பிறகு எல்லோரும் எதிர்பார்ப்பது இந்த வைகுண்ட பதவி. அந்த வைகுண்ட பதவியை பெற்றுத் தரும் உன்னதமான வழிபாடு இந்த ஏகாதசி வழிபாடு. மொத்தம் 25 ஏகாதசிகள் உண்டு. ஒரு மாதத்திற்கு இரண்டு ஏகாதசி வருகிறது. 25 நாட்கள் யார் இந்த வழிபாட்டை கடைபிடிக்கிறார்களோ அவர்களுக்கு மேற்கண்ட அனைத்து பலன்களும் கிடைக்கும்.
இந்த விரதத்திற்கு தனி வரலாறே உள்ளது. சுருக்கமாக சொன்னால் முதல் நாள் தசமி அன்று மதியத்தோடு சமைத்த சாப்பாட்டை நிறுத்தி இரவு ஏதாவது பழம், பால் சாப்பிட வேண்டும். அடுத்த நாள் ஏகாதசி. காலையில் எழுந்து நீராடி பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்து கோயிலுக்கு சென்று வந்த பிறகு அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். எதையும் சாப்பிடக் கூடாது. அது தான் ஏகாதசியின் சிறப்பு. அர்ச்சனை செய்ய பயன்படுத்தும் துளசியை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்.
விரதத்தை கடைபிடிப்பது அவசியம் என நினைக்கும் சில பழம், பால் சாப்பிடலாமா என நினைக்கின்றனர். வயதானவர்கள், கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களை சாப்பிடக் கூடாது என கட்டாயப்படுத்த முடியாது. அதையும் பெருமாளுக்கு நெய் வேத்தியம் செய்த பிறகு தான் சாப்பிட வேண்டும் அல்லது உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லையென்றால் நாள் முழுவதும் எதையுமே சாப்பிட வேண்டாம்.
தண்ணீரில் கூட துளசி போட்டு குடிப்பது விசேஷமானது. அடுத்த நாள் காலையிலேயே துவாதசியன்று எழுந்து குளித்து சமைத்து சாமிக்கு நெய் வேத்தியம் செய்து சாப்பிடுவதற்கு பாரணை என்று பெயர். இப்படி மூன்று நாளோடு தொடர்புடைய இந்த விரதத்தை யார் கடைபிடிக்கிறார்களோ அவர்களுக்கு கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும். எதை வேண்டுகிறோமோ அது கிடைக்கும் உன்னதமான வழிபாடே இந்த ஏகாதசி வழிபாடு.
ஒரு ஏகாதசியை முழுமையாக கடைபிடித்தால் கூட பலன் கிடைக்கும். 25 ஏகாதசிக்கும் தனித்தனி வரலாறு இருக்கிறது. அதனால் பலன் பெற்றவர்களின் வரலாறும் நீண்டு கொண்டே இருக்கிறது. வாய்ப்பு இருக்கும் நபர்கள் இதை கட்டாயமாக கடைபிடித்து நாராயணனின் அருளை பெறவும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com