Republic Day Wishes 2025: தாய் மண் செழிக்க பாடுபடும் சக இந்தியனுக்கு குடியரசு தின நல்வாழ்த்துகள்

76வது குடியரசு தினம் கொண்டாடப்படும் ஜனவரி 26ஆம் தேதி தேசம் மீது பற்று, பாசம், நேசம் கொண்ட சக இந்தியனுக்கு அனுப்ப வேண்டிய குடியரசு தின வாழ்த்து, கவிதை, குறுஞ்செய்தி இந்த பதிவில் பகிரப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்காலத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம் என குடியரசு தின நன்நாளில் உறுதி ஏற்போம்.
image

இந்தியா அரசியலமைப்பு ஏற்றிக் கொண்டதை நாம் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். நவம்பர் 26ஆம் தேதி 1949ல் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் ஜனவரி 26ஆம் தேதியே அரசியலமைப்பு அமலுக்கு வந்தது. இதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா ? ஜனவரி 26ஆம் தேதி 1930ல் நேரு தலைமையில் பூர்ண ஸ்வராஜ் இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க இதுவும் ஒரு முக்கிய காரணம். இதற்கு முழு தன்னாட்சி சாற்றல் என அர்த்தம். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர்நீத்தவர்களையும், தியாகிகளையும், நாட்டின் எதிர்காலத்திற்காகவும் சமூக முன்னேற்றத்திற்காகவும் அரசியலமைப்பை உருவாக்கியவர்களை நினைவு கூர்ந்து இந்த குடியரசு தினத்தை கொண்டாடுவோம். இந்த தினத்தில் நாட்டின் மீது நேசம் கொண்ட உள்ளங்களுக்கு அனுப்ப வேண்டிய குடியரசு தின வாழ்த்து, கவிதை, குறுஞ்செய்தி இங்கே பகிரப்பட்டுள்ளது.

republic day 2025

குடியரசு தின வாழ்த்து

  • இந்தியன் என்பது நம் பெருமை, வேற்றுமையில் ஒற்றுமை என்பது நம் மகிமை, நம்மை பிரித்து சிறுமைப்படுத்தும் தீய சக்திகளை வேரறுத்து இந்தியன் என்று பெருமை கொள்வோம்… குடியரசு தின நல்வாழ்த்துகள்
  • அரசியலமைப்பு நமக்கு வழங்கி இருக்கும் சுதந்திரத்தின், அதிகாரத்தின், உரிமைகளின் உண்மையான மதிப்பை அறிந்து ஒற்றுமையுடன் கடமையாற்றுவோம்… குடியரசு தின நல்வாழ்த்துகள்
  • ஜனநாயகம் மலர்ந்த இன்நன்னாளில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்
  • வேற்றுமையில் ஒற்றுமையும் பன்முக கலாச்சாரமும் நமது தேசத்தின் இருவிழிகளாக இருக்கின்றன. அவற்றை பாதுகாப்பதே நமது நோக்கம் என உறுதிமொழி ஏற்போம்… குடியரசு தின வாழ்த்துகள்
  • சுதந்திரம் மற்றும் உரிமைகளை வழங்கிய அரசியலமைப்பை மதிப்போம். பெருமைமிக்க இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!
  • எத்தனை மொழி, எத்தனை மதம், எத்தனை பிரிவுகள் இருந்தாலும் நாம் அனைவரும் பாரத்தாயின் பிள்ளைகள் தான். வாழ்க மக்கள் வளர்க பாரதம்… குடியரசு தின நல்வாழ்த்துகள்
  • அமைதியும் அன்பும் நிறைந்து வழியட்டும் நம் பாரத தேசத்தில்… அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்
  • தாய் மீதான பாசம் போன்ற தாய் நாட்டின் மீதான பாசமும். தாயை நேசிப்போம்! தாய் நாட்டை மூச்சாய் சுவாசிப்போம்… வந்தே மாதரம்… குடியரசு தின நல்வாழ்த்துகள்
  • இந்த குடியரசு தினத்தில் நம் நாடு செழித்து பிரகாசிக்கட்டும். சக இந்தியர்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்
  • செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் கொண்ட அழகான நாட்டில் வாழ்வதற்கு நன்றியுணர்வுடன் இருப்போம்… குடியரசு தின வாழ்த்துகள்
  • குடியரசு தினத்தன்று நம் நாட்டின் பொன்னான வரலாறு மற்றும் பாரம்பரியத்தை நினைவில் கொள்வோம். இந்த நாளில் நம் தேசத்தை பற்றி பெருமைப்படுவோம்… குடியரசு தின வாழ்த்துகள்
  • எண்ணங்களில் சுதந்திரமும்… இதயத்தில் அமைதியும்… நினைவுகளில் வரலாறும் நிறைந்திருக்கும் இத்தருணத்தில் தாய் மண்ணை வணங்குகிறேன்
  • சமத்துவம் தொடர்ந்து, சம உரிமை நீடித்து, பாரதம் செழித்து, மக்கள் வாழ்வு சிறக்க… குடியரசு தின நல்வாழ்த்துகள்
  • அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சகிப்புத்தன்மையுள்ள சமுதாயத்தை நோக்கி உழைப்போம்... தேசம் மீது நேசம் கொண்ட அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்
  • இந்த குடியரசு தினத்தில் பெருமைமிக்க இந்தியர்களாக ஒன்று கூடி தேசத்தின் மகத்தான வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்போம்.
  • குடியரசு தினத்தில் வலிமையான தேசத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் உறுதி ஏற்போம். நமது பலத்தை கண்டு உலகம் நம்மை எதிர்நோக்கட்டும். குடியரசு தின வாழ்த்துகள்
  • அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்! நமது தேசம் தொடர்ந்து முன்னேறி உலக நம்பிக்கைக்கான கலங்கரை விளக்கமாக நிற்கட்டும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP