சும்மா இருந்த ரசிகர்களை உசுப்பிவிட்டது போல நடிகர் சிம்பு அக்டோபர் 19ஆம் தேதி தனது அடுத்த படம் தம், மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா கலவையில் இருக்கும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களை அடுத்து பிரேக் எடுத்த சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது அஷ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இது சிம்புவிற்கு 49வது படமாகும். இப்படத்தை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 50 படத்தில் வித்தியாசமான ரோலில் நடிக்கவுள்ளார்.
தம், மன்மதன், வல்லவன், விண்ணைத் தாண்டி வருவாயா கலவையாக இருக்கும் என சிம்பு அறிவித்தவுடன் வா தலைவா வா என அவரது ரசிகர்கள் ஃபையர் விட்டனர். அடுத்த நாளில் 2K கிட்ஸை வம்புக்கு இழத்து 90ஸ் பாணியில் சரியாக 6.06 மணிக்கு வருவேன் என்று அறிவித்தார். சிம்புவின் அடுத்தடுத்த பதிவுகள் அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தின. இந்த நிலையில் ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் சிம்பு 49 படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தம், வல்லவன், மன்மதன் படங்களில் கையில் வயர் கட்டி தோன்றியது போலவே இந்த போஸ்டரிலும் கழுத்தில் பிளேடு, கையில் வயர், பைக் செயின் மாட்டிக் கொண்டு கட்டம் கட்டி கலக்குறோம் பாடலில் வருவது போன்ற சைகையுடன் போஸ்டர் வெளியிடப்படுள்ளது. திறமையான மற்றும் தன்னுடைய ரசிகரான இளம் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவுடன் சிறந்த பொழுதுபோக்கு படத்திற்காக இணைவது மிகுந்த மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.
Dum + Manmadhan + Vallavan + Vtv
— Silambarasan TR (@SilambarasanTR_) October 19, 2024
in Gen Z mode = NAMBA NEXT !!! ❤️🔥
Dei 2k kids , 90’s mood la nalaiku sharp ah 6.06 pm ku varen 🧨
— Silambarasan TR (@SilambarasanTR_) October 20, 2024
அஷ்வத் மாரிமுத்து ஏற்கெனவே அஷோக் செல்வன், ரித்திகா சிங்கை வைத்து ஓ மை கடவுளே படத்தை இயக்கியவர். தற்போது பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து டிராகன் படத்திற்கு பணியாற்றி வருகிறார். இந்த படம் ஏறக்குறைய நிறைவடைந்துவிட்ட நிலையில் அடுத்ததாக சிம்பு உடன் இணைகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com