herzindagi
image

2025 புத்தாண்டு ரிஷப ராசிபலன் : விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி; ஆசைகள் நிறைவேறும்

ரிஷப ராசிக்காரர்களே 2025ஆம் ஆண்டு உங்களை வாழ்க்கையில் வளர்ச்சியை நோக்கி பயணிக்க உதவும் ஆண்டாகும். வியாழன் மற்றும் சனி பெயர்ச்சி காரணமாக நிதி ஆதாயம், உறவுகளில் மகிழ்ச்சி, தனிப்பட்ட வாழ்க்கையில் நிலையான முன்னேற்றம் கிடைக்கும்.
Editorial
Updated:- 2024-12-31, 00:59 IST

2025ல் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிலையான வளர்ச்சி உறுதி. ஒன்றாம் வீட்டில் இருந்து 2ஆம் வீட்டிற்கு வியாழனின் பெயர்ச்சி மற்றும் 10ல் இருந்து 11க்கு சனி நகர்வதால் இந்த ஆண்டு முழுவதுமே சவால்களை நீங்கள் எப்படி வாய்ப்புகளாக மாற்றிக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தே அமைந்திடும். நிதி ஆதாயம், உறவுகளில் இணக்கம், தனிப்பட்ட வாழ்க்கையில் வளர்ச்சி உண்டு. 2025ல் ரிஷப ராசிக்கார்களுக்கு எப்படி அமையும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

taurus horoscope

ரிஷப ராசிக்கு காதலும், உறவும்

இந்த வருடம் காதல் கைகூடும், உறவுகள் வலுப்பெறும். இரண்டும் நேர்மறையாக உள்ளது. ஒன்றாம் வீட்டில் வியாழனின் ஆசிர்வாதத்தால் மே மாதம் வரை தனிப்பட்ட தொடர்புகள் நிலைக்கும். சிங்கிள் அல்லது காதல் எதுவாக இருந்தாலும் உங்களை சுற்றி உறவுகள் வலுப்பெறும். மே மாதத்திற்கு பிறகு வியாழன் 2ஆம் வீட்டிற்கு செல்கிறது. இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலே நிலவும்.

2025ல் ஆரோக்கியம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டில் உடல்நிலை சீராகவே இருக்கும். எனினும் மார்ச் மாதத்திற்கு பிறகு 11ஆம் வீட்டில் சனி இருப்பதால் வேலை அல்லது நிதி விஷயங்களில் கொஞ்சம் மன அழுத்தம் ஏற்படலாம். தொடர் உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுமுறையும் உங்களுடைய ஆரோக்கியத்திற்கு உறுதுணை. மன நலனுக்காக தியானம் செய்யவும். பொழுதுபோக்கு விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டால் அதிசயங்கள் நிகழும். இந்த ஆண்டில் கண் பார்வை ரீதியான பாதிப்பு ஏற்பட்டால் உடனடி கவனம் தேவை.

ரிஷப ராசியின் தொழில் & நிதி நிலைமை

தொழில் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் ரிஷப ராசிக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உண்டு. மார்ச் மாதம் வரை 10ஆம் வீட்டில் சனி தொடர்வதால் தொழிலில் வெற்றியும் அங்கீகாரமும் கிடைக்கும். மார்ச் மாதத்திற்கு பிறகு சனி 11ஆம் வீட்டிற்கு பெயர்வதால் ஆசைகள் நிறைவேறும், நிதி ஆதாயம் உண்டு. வியாழன் ஒன்றாம் வீட்டில் இருந்து 2ஆம் வீட்டிற்கு பெயர்வதால் பொருளாதார நிலைத்தன்மை வலுப்பெறும். இந்த ஆண்டு சேமிப்புகளுக்கும், முதலீடுகளுக்கும் சிறந்த ஆண்டாகும்.

மேலும் படிங்க மேஷ ராசிக்கு புத்தாண்டு பலன் 2025 : தொழில் சிறக்கும், ஏப்ரலில் நிதி ஆதாயம்

ரிஷப ராசிக்கு முக்கிய குறிப்புகள்

காதலும், உறவும்

மே மாதத்திற்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், உறவுகள் வலுப்பெறும். ஆண்டின் முதல் பாதியில் உணர்ச்சி ரீதியான பிணைப்புகள் வளரும்.

தொழில் & நிதி

2025ன் தொடக்கத்தில் தொழில் ரீதியாக ஆதிக்கம் செலுத்துவீர்கள். மார்ச் மாதத்திற்கு பிறகு நிதி ஆதாயம் உண்டு. ஆசைகளும் நிறைவேறும்.

ஆரோக்கியம்

மன அழுத்தத்தை உடற்பயிற்சி மற்றும் தியானம் மூலம் நிர்வகிக்கவும். கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடி கவனம் தேவை. ஆரோக்கியம் சீராகவே இருக்கும்.

2025ல் சிறந்த மாதங்கள்

ஏப்ரல், மே, ஆகஸ்ட்

2025ல் சவாலான மாதங்கள்

ஜனவரி, ஜூன், நவம்பர்

ரிஷப ராசியின் பலவீனம்

பிடிவாதம், சகிப்பற்ற தன்மை

2025ல் ரிஷப ராசிக்காரர்களின் தாரக மந்திரம்

பொறுமையும், விடாமுயற்சியும் பலனளிக்கும். தடைகளை தகர்த்து எறிய
உங்களுடைய திறன் மீது நம்பிக்கை கொள்ளவும்.

2025ஆம் ஆண்டு ராசிபலன் கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com