மேஷ ராசிக்கு புத்தாண்டு பலன் 2025 : தொழில் சிறக்கும், ஏப்ரலில் நிதி ஆதாயம்

மேஷ ராசிக்காரர்களே 2025ஆம் ஆண்டு உங்களுக்கு வளர்ச்சியும், சவாலும் கலந்த ஆண்டாக இருக்கும். மார்ச் மாதத்தில் நிகழும் சனி பெயர்ச்சியால் செலவுகளை நிர்வகிப்பதில் கவனம் திரும்பும். அதே நேரம் வியாழனின் தாக்கத்தால் தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான வளர்ச்சியை பெறுவீர்கள்.
image

மேஷ ராசிக்கு 2025ஆம் ஆண்டு வாய்ப்புகளும், சவால்களும் கலந்ததாக பயணிக்கும். மார்ச் மாதத்தில் 11ஆம் வீட்டில் இருந்து 12ஆம் வீட்டிற்கு சனி பெயர்ச்சி அடைகிறது. இதனால் நிதி சேமிப்பில் இருந்து செலவுகளை சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். எனினும் வியாழனின் பெயர்ச்சியால் வாழ்க்கையில் தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்றம் காண்பீர்கள். மேஷ ராசிக்கான 2025ஆம் ஆண்டு புத்தாண்டு ராசிபலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

aries horoscope 2025

மேஷ ராசியின் தொழில், நிதி நிலைமை

11ஆம் வீட்டில் சனி இருப்பதால் ஆண்டின் தொடக்கத்தில் நிதி நிலைமை சிறப்பாக அமையும். நீண்ட நாள் இலட்சியங்களை அடைவீர்கள். மார்ச் மாதத்தில் சனி 12ஆம் வீட்டிற்கு பெயர்வதால் எதிர்பாராத செலவினங்கள் உண்டாகும். எனினும் கவலைப்பட தேவையில்லை. 2ஆம் வீட்டில் உள்ள வியாழன் காரணமாக உங்களின் வளங்களை கொண்டு செலவினங்களை திறம்பட சமாளித்துவிடுவீர்கள். மே மாதத்தில் வியாழன் 3ஆம் வீட்டில் இருப்பதால் கூட்டுமுயற்சி காரணமாக தொழிலில் நீடித்த வெற்றி கிடைக்கும்.

2025ல் ஆரோக்கியம்

ஆண்டு முழுவதும் உடல்நிலை சீராக இருக்கும். எனினும் 12ஆம் வீட்டில் சனி இருப்பதால் மார்ச் மாதத்திற்கு பிறகு சோர்வு, மன அழுத்தம் ஏற்படலாம். ஓய்வு, உணவுமுறைக்கு முக்கியத்துவம் தாருங்கள். தேவையான நேரங்களில் சுறுசுறுப்பு காட்டவும். ஆண்டின் முதல் பாதியில் ஆரோக்கியம் பற்றி பெரிதளவில் கவலை தேவையில்லை. அதன் பிறகு புத்துணர்வு தேவைப்படலாம்.

மேஷ ராசிக்கு காதலும், உறவும்

2025ல் உறவுகள் மேம்படும். வியாழன் சாதகமான நிலையில் இருப்பதால் குடும்பத்தில் நல்லிணக்கம் தொடரும். உணர்வு ரீதியாக ஆதரவு கிடைக்கும். எனினும் சனி 12ஆம் வீட்டிற்கு பெயரும் போது உறவுகளிடம் இருந்து விலகி இருப்பது போல தோன்றும். அர்த்தமுள்ள விவாதங்கள் மூலம் நீங்கள் உறவுகளை மேம்படுத்தலாம். புதிய உறவுகள் உண்டாகலாம். ஆண்டின் இரண்டாம் பாதியில் வியாழன் 3ஆம் வீட்டிற்கு பெயர்வதால் இந்த வாய்ப்பு கிடைக்கிறது. ஆண்டின் இரண்டாம் பாதியில் நட்பு வட்டாரம், சமூக தொடர்பு விரிவடையும்.

மேலும் படிங்கராசிபலன் 2025 : மிதுன ராசிக்கு வளர்ச்சி, வாய்ப்புகளில் நிறைவு; ஆரோக்கியத்தில் கவனம் தேவை

மேஷ ராசிக்கு முக்கிய குறிப்புகள்

காதலும், உறவும்

ஆண்டின் முதல் பாதியில் குடும்பத்தில் நல்லிணக்கம் தொடரும். வியாழனின் தாக்கம் உணர்வு ரீதியான விலகலை ஏற்படுத்தும். எனினும் இரண்டாம் பாதியில் சாதுர்யமான பேச்சுகள் அன்பை வளர்க்கும்.

தொழில் & நிதி

ஆண்டின் தொடக்கத்தில் லாபம் இருக்கும். மார்ச் மாதத்திற்கு பிறகு செலவுகள் அதிகரிக்கும். எனினும் கூட்டுமுயற்சியால் நீடித்த வெற்றியை பெறுவீர்கள்.

ஆரோக்கியம்

ஆண்டின் இரண்டாம் பாதியில் ஏற்படக் கூடிய மன அழுத்தத்தை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.

2025ல் சிறந்த மாதங்கள்

ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரலில் நிதி ஆதாயம் உண்டு

2025ல் சவாலான மாதங்கள்

சனி பெயர்ச்சி காரணமாக மார்ச், டிசம்பர்

மேஷ ராசியின் பலவீனம்

பொறுமை இழப்பு, விவாத மனநிலை, வாய் சவடால்

2025ஆம் ஆண்டு ராசிபலன் கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP