ஏப்ரல் 2025 ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த மாதம் எப்படி இருக்க போகிறது?

சிங்கம் போல் வாழும் சிம்ம ராசி காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் சிரமங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். தனுசு ராசியினருக்கு ஏப்ரல் மாதம் வெற்றிகரமான மாதமாக இருக்க போகிறது. இது போன்று 12 ராசிகளுக்கும் இந்த மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்.
  • Alagar Raj
  • Editorial
  • Updated - 2025-03-29, 09:58 IST
image

மார்ச் மாதம் 29 ஆம் தேதி சனி பெயர்ச்சியை தொடர்ந்து ஏப்ரல் மாதம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏப்ரல் 3 ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஏப்ரில் 14 ஆம் தேதி சித்திரை 1 தமிழ் புத்தாண்டன்று சூரியன் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இந்த கிரகங்களின் பெயர்ச்சிகள் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் இயல்பான மாதமாகவே இருக்கும். தொழிலில் அதிக அலைச்சல் உண்டாக வாய்ப்புண்டு. இதனால் மன அழுத்தம் ஏற்படலாம். பண விஷயத்தில் மிகவும் கவனம் தேவை. மாணவர்களுக்கு வெளியூர் சென்று படிக்கும் கனவு நனவாகும். குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகள் மற்றும் அதிருப்தி நிலவலாம். உடல்நலத்தை பொறுத்தவரை கண் சம்பந்தமான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடனான தொடர்பு நன்மை பயக்கும். உங்கள் ராசியில் சுக்கிரன் உச்சத்தில் இருப்பதால் திடீர் பண வரவு கிடைக்கும். காதல் உறவில ஈகோ காரணமாக மோதல்கள் அதிகரிக்கக்கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். இந்த மாதம் நீங்கள் வயிறு தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசி காரர்களுக்கு ஏப்ரல் மாதம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அலுவலகத்தில் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. நீதிமன்றம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரலாம். இந்த மாதம் உங்கள் குடும்பத்தினரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள், மேலும் நிதி விஷயங்களில் மிகப்பெரிய நன்மைகளைப் பெறுவீர்கள். போட்டி தேர்வுகளை சந்திக்கும் மாணவர்களுக்கு ஆரோக்கியதால் சிக்கல்கள் வரலாம்.

மேலும் படிக்க: திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் அவசியமா? ரஜ்ஜு பொருத்தம் முக்கியமா?

கடகம்

கடக ராசியினருக்கு ஏப்ரல் மாதம் முழுவதும் சாதகமாகவே இருக்கும். அலுவலகத்தில் உங்கள் மூத்த அதிகாரிகளால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். புதிய முதலீடு செய்வதற்கு முன் ஆவணங்களை கவனமாக சரிபார்க்கவும். இந்த மாதம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இந்த மாதம் எந்த பாதிப்புகளும் ஏற்படாது.

சிம்மம்

சிங்கம் போல் வாழும் சிம்ம ராசி காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் சிரமங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் பணியை தக்க வைக்க பல போராட்டங்களில் ஈடுபட வேண்டிய சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் சிதறலாம். குடும்ப உறுப்பினரின் உடல்நலம் கவலைக்குரிய விஷயமாக மாறக்கூடும். உங்கள் ராசியில் ராகு மற்றும் சனியின் நிலையால் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசி அன்பர்களுக்கு ஏப்ரல் முழுவதும் பரபரப்பாக இருக்க போகிறது. தொழிலில் இந்த மாதம் முழுவதும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். நீண்ட நாட்களாக உங்களுக்கு வர வேண்டிய தொகை இம்மாதம் உங்கள் கைகளுக்கு வரலாம். என்ன தான் வாழ்க்கை பரபரப்பாக இருந்தாலும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இந்த மாதம் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

துலாம்

துலாம் ராசி காரர்கள் இந்த மாதம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கு. பணியிடத்தில் எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த நேரிடும். உங்கள் சேமிப்பு பணத்தை கவனமாக கையாள வேண்டும். மாணவர்கள் உடல்நல பிரச்சனையால் தங்கள் படிப்பில் பல தடைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக புகைந்த பிரச்சனைகள் இந்த மாதம் பூதாகரமாக வெடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பெரிய பாதிப்புகளும் வராது.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இந்த மாதம் முழுவதும் கவலைகள் வாட்டி வைத்துக்கும். தொழில்முறை சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் நிதிநிலை தொடர்ந்து சரிவை சந்திக்கும். மாணவர்களுக்கு பெற்றோர் வழியாக சிக்கல்கள் உண்டாகும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இந்த மாதம் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு ஏப்ரல் மாதம் வெற்றிகரமான மாதமாக இருக்க போகிறது. பணியிடத்தில் பணி உயர்விற்கான வாய்ப்பு தேடி வரும். பல நாள் கஷ்டத்திற்கான பலன் பணமாக கிடைக்கும். மாணவர்களுக்கு நினைத்த முடிவுகள் வரும். இந்த மாதம் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இருந்த சகோதர சகோதரிகளின் பிரச்னைகள் முடிவுக்கு வரும். இந்த மாதம் மன ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

மேலும் படிக்க: எப்போது ஜாதகம் பார்க்க வேண்டும்? எப்போது பார்க்க கூடாது?

மகரம்

மகர ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்தில் செழிப்பாக இருக்க போகிறார்கள். பணியிடத்தில் உங்கள் ஆதிக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் மீதான மரியாதை உயரும். புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மாணவர்களுக்கு கல்வியில் நேர்மறையான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்கு இருக்கும். ஆரோக்கியத்தில் கால் தொடர்பான பிரச்சனைகளில் அலட்சியம் கூடாது.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் அனைத்தும் கைகூடி வரும். தொழிலில் சிறந்த முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் தொழில் புதிய உயரங்களை எட்டும். நிதி விஷயங்களில் லாபமும் முன்னேற்றமும் நிறைந்ததாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. உடல் மற்றும் மன ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மீனம்

மீன ராசி காரர்களுக்கு சகிப்புத்தன்மை நிறைந்த மாதமாக ஏப்ரல் இருக்க போகிறது. பணியிடத்தில் சக ஊழியர்களால் உங்களுக்கு பிரச்சனைகள் உருவாகும். நிதி விஷயங்களில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தள்ளிப்போகும். மாணவர்கள் நினைத்ததை சாதிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் உடன்பிறந்தவர்களுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் விட்டுக் கொடுப்பது நல்லது. மோசமான ஆரோக்கியத்தால் பணம் விரயமாக வாய்ப்புள்ளது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP