காதல் என்று சொல்லும்போது அதில் எப்போதும் அழகான தருணங்கள் மட்டுமே இருக்காது. சண்டை, கோபம், அழுகை, வெறுமை, பிடிவாதம், அன்பு, நட்பு போன்ற பல விஷயங்கள் கலந்த ஒரு அழகான அனுபவம் தான் காதல். காதல் உறவு எல்லோருக்கும் எளிதாக இருப்பதில்லை. காதல் தோல்வி அடைந்து விட்டால் நம் நண்பர்கள் "என்ன ராசியோ போ, உனக்குலாம் லவ் செட் ஆகாது" என்று கேலியாக கூறுவதை கேட்டிருப்போம். அது ஒரு விதத்தில் உண்மை தான் போல. ஜோதிடத்தின்படி சில ராசிகள் தங்கள் குணாதிசயங்கள், எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளால் காதலில் அடிக்கடி தோல்வியை சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த கட்டுரையில், காதல் உறவுகளில் அதிகம் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் 5 ராசிகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
மேஷ ராசி ஆட்கள் தைரியமானவர்கள் மற்றும் தலைமை தாங்கும் இயல்புடையவர்கள். ஆனால், காதல் உறவில் அவர்களின் ஆதிக்கம் மற்றும் கோபம் பெரும்பாலும் பிரச்சனைகளை உருவாக்கும். அவர்கள் தங்கள் காதலரின் கருத்துக்களை கேட்காமல், தங்கள் வழியில் செயல்படுவதால் உறவுகள் முறிந்துவிடும்.
கடக ராசி ஆட்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்கள் மற்றும் பாதுகாப்பு தேடுபவர்கள்.
அவர்கள் தங்கள் காதலரை மிகவும் நம்பியிருப்பதால், சிறிய சண்டைகளில் கூட மனம் உடைந்துவிடுகிறார்கள். மேலும் அவர்களின் பொறாமை மற்றும் சந்தேகப் போக்கு உறவுகளை பாதிக்கிறது.
துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் இரண்டு மனதுடன் செயல்படுகிறார்கள். காதல் வாழ்க்கையில் அவர்களின் தயக்கம் மற்றும் முடிவெடுக்க இயலாமை பெரும்பாலும் காதலரை எரிச்சலூட்டுகிறது. மேலும், அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக சொல்வதில் பின்தங்கியிருப்பதால், உறவுகள் சரியாக வளர்வதில்லை.
விருச்சிக ராசி ஆட்கள் மிகவும் ஆழமான உணர்வுகளை கொண்டவர்கள், ஆனால் அவர்களுக்கு அதிகப்படியான பொறாமை மற்றும் சந்தேகம் உள்ளது. அவர்கள் தங்கள் காதலரின் ஒவ்வொரு செயலையும் கண்காணிக்கும் பழக்கம் கொண்டிருப்பதால், உறவுகளில் நம்பிக்கை இழப்பு ஏற்படுகிறது. இதனால், அவர்களின் காதல் உறவுகள் நீண்டகாலம் நீடிப்பதில்லை.
கும்பம் ராசி ஆட்கள் தனிமையை விரும்புபவர்கள் மற்றும் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருப்பவர்கள். காதல் உறவுகளில் அவர்கள் தங்கள் காதலரிடம் திறந்து பேசாமல் இருப்பதால், உறவு பலவீனமடைகிறது. மேலும், அவர்களின் சுதந்திரமான மனப்பான்மை காதலரை வெறுப்படையச் செய்கிறது.
இந்த ராசிகள் தங்கள் குணங்களால் காதல் உறவுகளில் சவால்களை எதிர்கொள்கின்றன. ஆனால் தன்னை மேம்படுத்திக் கொண்டு, தவறுகளை சரிசெய்ய முயற்சித்தால், நல்ல உறவுகளை வளர்க்க முடியும். காதல் என்பது புரிதல் மற்றும் பொறுமை தான்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com