அந்துருண்டையை துணி, மரச்சாமான்களுக்கு அடியில் வைப்பது ஏன் ? எதற்காக பயன்படும் தெரியுமா ?

நம் வீட்டில் கோலி குண்டு சைஸில் சில உருண்டைகளை எப்போதும் வைத்திருப்பார்கள். இதை நாம் தொட்டால் அம்மாவிடம் இருந்து அடி விழும். எதற்காக இந்த அந்துருண்டை ? இதன் பயன்பாடு என்ன ? துணிக்கு அடியில், மரச்சாமான்களின் கீழ், பாத்ரூமில் அந்துருண்டையை பயன்படுத்துவது எதனால் ? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
image

அந்துருண்டை எனும் பாச்சை உருண்டை ஒரு விதமான பூச்சி கொல்லி ஆகும். அந்துருண்டையின் வாசனையால் அந்துப்பூச்சி ஈர்க்கப்பட்டு அங்கேயே செத்து மடியும். கடந்த காலங்களில் அந்துருண்டையின் பயன்பாடு மாறியுள்ளது. இதை துணி, மரச்சாமான்களின் கெட்ட வாசனையை நீக்க பயன்படுத்தி வருகிறோம். அந்துருண்டை துணி, மரச்சாமான்கள், கட்டில் மற்றும் மெத்தை பொருட்களை அந்துப்பூச்சி மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து தடுக்கும்.

moth balls

துணிக்கு அடியில் அந்துருண்டை

வீட்டின் பீரோவில் பட்டு துணி, உயர் ரக அடைகளுக்கு கீழ் அந்துருண்டை இருப்பதை பார்த்திருப்போம். ஒரு சில மாதங்களில் அந்துருண்டை காணாமல் போயிருக்கும். அந்துருண்டை காற்றில் கொஞ்சம் கொஞ்சமாக கறைந்து அதன் வேலையை காட்டும். அந்துருண்டையின் முக்கிய பண்பு அந்துப்பூச்சி, கரப்பான் பூச்சிகளிடம் இருந்து துணிகளை பாதுகாப்பதே. அதனால் தான் சில நேரங்களில் துணிக்கு அருகே கரப்பான் பூச்சி செத்து கிடக்கும்.

அந்துருண்டையின் பயன்கள்

  • விலை உயர்ந்த துணி, பண்டிகை காலத்தில் மட்டுமே அணியும் பீரோவிற்குள் இருக்கும் துணியை பாதுகாக்க அந்துருண்டை வைக்கலாம்.
  • துணியை பத்திரமாக பாதுகாத்திட அந்துருண்டையுடன் பிளாஸ்டிக் கவரில் போட்டு வைக்கவும்.
  • தலையணை, கட்டிலுக்கு அடியில் இந்த அந்துருண்டையை வைக்கலாம்.
  • அந்துருண்டையை அடிக்கடி பயன்படுத்தும் ஆடைகளுக்கு அடியில் வைக்க கூடாது. ஏனெனில் அந்த ஆடைகளை நாம் இரண்டு - மூன்று நாட்களுக்கு ஒரு முறை துவைத்து விடுவோம்.
  • பழைய புத்தங்கள், செய்தித் தாழ்களுக்கு அடியிலும் அந்துருண்டையை வைத்து அவை சேதமடைவதை தடுக்கலாம்.
  • வீட்டில் பூச்சித் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுவது செடிகளே. பூத்தொட்டிக்கு அருகில் அந்துருண்டை வைப்பதால் பூஞ்சை தொற்றுகளில் இருந்து செடிகாளை பாதுகாக்கலாம்.
  • வீட்டில் கழித்த பழைய பொருட்களை வைக்கும் இடத்தில் அந்துருண்டை வைக்கலாம். ஏனெனில் அங்கு பல பூச்சிகள் குடியேறும். அதே போல ஷூ ராக் அருகிலும் அந்துருண்டை பயன்படும்.
  • இதை சிலர் எலி விரட்டியாகவும் பயன்படுத்துவது உண்டு.
  • அந்துருண்டை வாங்கினால் அதை பயன்படுத்தும் வரை இறுக்கமான பாத்திரங்களில் வைக்கவும். ஏனெனில் அதிலிருந்து வெளியாகும் நச்சு உடலுக்கு தீங்கு விளைவிக்கும். குழந்தைகளுக்கு எட்டும் தூரத்திலும், வீட்டில் வளர்க்கும் உயிரினங்களுக்கு அருகிலோ இந்த அந்துருண்டையை வைக்காதீர்கள்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP