herzindagi
image

கொசு தொல்லைக்கு கம்பெனி கிரீம்கள் வேண்டாம்; இந்த 2 வீட்டு பொருட்கள் போதும் கொசுக்கள் ஒழியும்

கொசு கடியில் இருந்து தப்பிக்க பலரும் கெமிக்கல் கலந்த க்ரீமக்களை தடவி தூங்குவார்கள். இது உங்கள் சருமத்திற்கும் கேடு விளைவிக்கும். 
Editorial
Updated:- 2025-06-26, 21:10 IST

கொசுக்கடியால் தூங்க முடியலையா? மழைக்காலம் துவங்கிய நிலையில் கொசு தொல்லையும் துவங்கி விட்டது. இரவு நேரத்தில் கொசு கடிப்பதால் நம் தூக்கம் பாதிக்கப்படும். அது மட்டுமில்லாமல் இந்த மழைக்காலத்தில் கொசு கடித்தால் டெங்கு மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த கொசு கடியில் இருந்து தப்பிக்க பலரும் கெமிக்கல் கலந்த க்ரீமக்களை தடவி தூங்குவார்கள். இது உங்கள் சருமத்திற்கும் கேடு விளைவிக்கும். குறிப்பாக வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த கெமிக்கல் க்ரீம்கள் பயன்படுத்துவது நல்லது இல்லை. அந்த வரிசையில் கொசு கடிக்காமல் இருக்க வீட்டிலேயே தயாரிக்கும் ஒரு எளிய க்ரீம் குறித்து இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

 

  • தேங்காய் எண்ணெய்
  • பூண்டு - 10 பல்

coconut oil garlic

செய்வது எப்படி?


அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அந்த கடாய் சூடான பிறகு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். மறுபுறம் 10 பல் எடுத்து தோல் உரித்து நசுக்கி எடுத்து கொள்ளுங்கள். இப்போது தேங்காய் எண்ணெய் சூடான பிறகு அதில் இந்த பூண்டுகளை சேர்க்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று நிமிடம் குறைந்த தீயில் இதை வைக்க வேண்டும். மெதுவாக இந்த பூண்டு நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து விடலாம். இந்த எண்ணெய் சூடு குறைந்த பிறகு ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

garlic oil

எப்படி பயன்படுத்த வேண்டும்?


தினமும் இரவு தூங்க செல்லும் முன்பு, இதை உங்கள் உடலில் கொசு கடிக்கும் இடங்களில் அதாவது கை கால்களில் தடவ வேண்டும். சிறிய அளவு எடுத்து தடவினால் போதுமானது. உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் இதை தடவலாம். அவர்கள் இதை வாயில் வைத்தால் கூட பிரச்சனை இல்லை. இதில் கெமிக்கல் எதுவும் இல்லை. மேலும் இது நம் சருமத்திற்கு இயற்கை முறையில் ஈரப்பதம் வழங்கும். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: எவ்வளவு தேய்த்தாலும் கறை போகலையா? ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை சுத்தம் செய்ய டிப்ஸ் இதோ

சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் பயன்கள்:


தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகின்றன. இது வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். தேங்காய் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவும். அதே போல தேங்காய் எண்ணெய் காயம் குணப்படுத்துவதை வேகப்படுத்த உதவுகிறது. மேலும் தேங்காய் எண்ணெய் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com