காணும் பொங்கல் என்பது பொங்கல் பண்டிகையில் கடைசி மற்றும் நான்காவது நாள் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் என்பது குடும்பத்தினர் ஓய்வு மற்றும் மகிழ்ச்சிக்கான நாளாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் உறவினர் வீட்டிற்குச் செல்வதன் மூலம் நேரத்தைச் செலவிடுகிறார்கள். குடும்பமாகச் சேர்ந்து இந்தநாளில் வெளியே சென்று பல இடங்களைச் சுற்றிப்பார்த்து நேரத்தைச் செலவழிக்கும் இனிமையான நாளாகக் கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகைக்கு அனைவரின் வீடுகளில் சுத்தம் செய்து காணும் பொங்கலுக்கு உறவினர்கள் வந்தால் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பார்கள். வீட்டு வாசலில் அழகான கோலம் போட்டு உறவினர்களை நண்பர்களை அழைக்கும் நாளாகக் காணும் பொங்கல் இருக்கிறது. காணும் பொங்கலுக்கு வீட்டு வாசலில் போடப்படும் கோளங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
மேலும் படிக்க: மாட்டுப் பொங்கலுக்கு வீட்டு வாசலில் புள்ளிவைத்து எளிமையாகப் போடப்படும் சில கோலங்கள்
நட்சத்திரம் பூ கோலத்தை 15 புள்ளிகளில் தொடங்கி, இடுக்கு புள்ளிகள் வைத்து 8 புள்ளிகளில் முடிக்கவும். கோலத்தை மையப்பகுதியிலிருந்து தொடங்கவும். நடுப்பகுதியில் நட்சத்திரத்தை வரைந்து வண்ணங்கள் இட்டு அழகுப்ப்டுத்தவும். நட்சத்திரத்தை ஒட்டியது போல் சங்கு வடிவத்தை வரையவும். புள்ளிகளை நிரப்ப 6 நட்சத்திரத்தை வரைந்து, அதன் இடைப்பகுதியில் சங்கு போன்ற வடிவத்தை வரைந்து முழுமைப்படுத்தவும்.
Image Credit: Pinterest
பறவை கோலத்திற்கு 15 புள்ளிகள் தொடங்கி 8 புள்ளிகள் வரை இடவும். கோலத்தின் மையப்பகுதியில் நட்சத்திரம் வரைந்துகொள்ளவும். ரோஜா இலைகள் மற்றும் பூக்களைப் புள்ளிகளைச் சரியாகப் பார்த்து வரைய வேண்டும்.ரோஜா வரைந்ததும் அதன் மேல் பறவை ஒன்றி அழகாக வரைந்து கோலத்தை முழுமைப்படுத்தவும். கோலத்திற்கு ஏற்ற வண்ணங்களைக் கொண்டு முழுமைப்படுத்தவும்.
Image Credit: Pinterest
இந்த கோலத்திற்கு 13 புள்ளிகளில் தொடங்கி ஏழு புள்ளிகளில் நிறைவு பெற வேண்டும். புள்ளிகளின் மையப்பகுதியில் சிறு பூக்களை வரைந்து வண்ணங்களை நிரப்பவும். கோலத்தைச் சுற்றி அழகிய சங்கு வடிவத்தை வரைந்து, சங்கின் மேல் பகுதியில் விளக்கு தீபத்தை வரைந்து கோலத்தை அழகு சேர்க்கவும். இரண்டு சங்குகளுக்கு நடுப்பகுதியில் தாமரை மேற்புறத்தை வளைத்துக் கொண்டு சிறு இலைகளை வரைந்துகொள்ளவும். இந்த கோலம் கண்டிப்பாகக் காணும் பொங்கலுக்கு ஏற்ற கோலமாக அமையும்.
Image Credit: Pinterest
13 புள்ளிகளில் தொடங்கி 7 புள்ளிகளில் முடியும் இந்த பூக்கோலம் காணும் பொங்கலை வரவேற்கும் விதமாக இருக்கும். கோலத்தின் மையப்பகுதியில் 6 இதழ் பூக்களை வரைந்து வண்ணங்கள் இடவும். கோலம் 6 இதழ்களின் மையப்பகுதியில் கொடிப்போல் வரைந்து இரண்டு இலைகள் மற்றும் பூக்களின் மொட்டுகளை வரைந்துகொள்ளவும். இரண்டு பூக்களின் மொட்டுகளின் இடைப்பகுதியில் 6 இதழ் பூக்களை வரைந்து கோலத்தை முழுமைப்படுத்தவும்.
Image Credit: Pinterest
மேலும் படிக்க: "பொங்கலோ பொங்கல்" என பொங்கலை வரவேற்க வீட்டு வாசலில் போடப்படும் அழகிய பானை ரங்கோலி கோலம்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com