வீட்டு வாசலில் போடப்படும் கோலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு பாரம்பரிய வண்ணமயமான வழியாகும். புள்ளிகள் வைத்துப் போடப்படும் இந்த பாரம்பரிய வடிவம் ஒரு கலைப்படைப்பாகும், இதில் பல பெண்கள் முழுமையாக தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வழியாக இனைக்கிறார்கள். மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் இந்தியக் குடியரசு தினம், ஜனவரி 26 ஆம் தேதி வெளிப்படுத்தலாம். சில அழகான குடியரசு தின புள்ளிக்கோலங்களை இட்டு மகிழ்ச்சியைப் பெருக்கலாம், இந்தக் கட்டுரை குடியரசு தினத்திற்கு வரைய மிகவும் உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க: மார்கழி மாதத்தை அழகுபடுத்தும் சூப்பரான 5 படிக்கோலம்
குடியரசு தினத்திற்குப் போட சிறந்த புள்ளிக்கோலம் பட்டியலைப் பார்க்கலாம். இந்த கோலம் வடிவமைப்புகளை முயற்சிக்கவும்.
இந்த கோலத்தில் மையப்பகுதியில் 13 புள்ளிகள் கொண்டு தொடங்க வேண்டும். 7 புள்ளிகளில் கோலத்தை முடிக்கவும். மையப்பகுதியில் நட்சத்திரம் கொண்டு தொடங்கலாம், இந்த நட்சத்திர வடிவத்திற்கு நிலம், பச்சை மற்றும் காவி வண்ணங்கள் கொண்டு அழகுபடுத்தவும். கோலத்தைச் சுற்று மூவர்ணக் கொடியை வரைந்து 26வது குடியரசு தினத்தை வரவேற்கலாம். இரண்டு கொடியின் மையப்பகுதியில் மயில் வரைந்து மேலும் அழகு சேர்க்கலாம்.
இந்த கோலத்திற்கு 13 புள்ளிகளில் தொடங்கி 7 புள்ளிகளில் முடிக்க வேண்டும். கோலத்தின் மையப்பகுதியில் 6 இதழ்களைக் கொண்ட பூக்கோலத்தை வரைய வேண்டும். இதழ்களின் மையப்பகுதியில் தொடங்கி கொடி வரையவும். பூ மற்றும் கொடி இரண்டிற்கும் வண்ணங்களை நிரப்பி முழுமைப்படுத்தவும். இரண்டு கொடிக்கு இடையில் தாமரை வரைந்து இந்த கோலத்தை முழுமைப்படுத்தவும்.
இந்த கோலத்தை 5 புள்ளிகளில் தொடங்கி 3 புள்ளிகளில் முடிக்க வேண்டும். கோலத்தின் மையப்பகுதியில் வட்டம் வரைந்து மூன்று பிரிவுகளாகப் பிரித்து மூவர்ணத்தைத் தீட்டவும். வட்டத்தைச் சுற்றி 6 பறவைகளை வரைந்து, அதற்கும் காவி மற்றும் பச்சை வண்ணங்கள் கொண்டு அழகுபடுத்த வேண்டும்.
6 புள்ளிகளில் தொடங்கி 6 புள்ளிகளில் முற்றுப்பெறும் அழகிய கொடி கோலம். 6 புள்ளிகளின் மையப்பகுதியில் 4 புள்ளிகளுக்கு மட்டும் கட்டத்தை வரைய வேண்டும். கட்டத்தில் மூவர்ணத்தை நிரப்பி அழகுபடுத்தவும். கட்டத்தைச் சுற்றி வளைவுகளை வரைந்து கோலத்தை முழுமைப்படுத்தவும்.
இந்த ரங்கோலி கோலத்திற்கு முதலில் வட்ட வடிவத்தை வரைந்து மூவர்ணக் கொடியைப் போட்டு, வண்ணங்கள் இட்டு முழுமைப்படுத்தவும். வட்டத்தைச் சுற்றி நட்சத்திரம் வரைந்து காவி மற்றும் பச்சை வண்ணங்கள் போட்டு அழகுபடுத்தவும். இந்த கோலம் வரைய எளிமையாக இருக்கும்.
மேலும் படிக்க: 7 புள்ளிகள் கொண்டு எளிமையாகப் போடப்படும் மார்கழி மாத சிக்கு கோலங்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com