போகி தமிழகத்தில் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் தமிழர்கள் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். பொதுவாக ஜனவரி 13 அல்லது 14 தினத்தில் கொண்டாடப்படுகிறது. பரவலாகப் போகிப் பண்டிகை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகையில் காலையில் பழைய பொருட்களை எறித்துவிட்டு, வீட்டு வாசலில் அழகிய கோலம் போடுவார்கள். நீங்களும் போகி பண்டிகைக்கு கோலம் தேடுகிறீர்கள் என்றால், லேட்டஸ்ட் கோலம் சிலவற்றைப் பார்க்கலாம்.
மேலும் படிக்க: மார்கழி மாதத்தை அழகுபடுத்தும் சூப்பரான 5 படிக்கோலம்
இந்த வண்ணமயமான போகி ரங்கோலி கோலத்தில் முதல் பெரிய வட்ட வடிவத்தை வரைய வேண்டும். வட்ட வடிவத்தில் உங்களுக்கு பிடித்த வண்ணங்களைக் கொண்டு நிறப்புவும், நீங்கள் வட்ட வடிவத்தில் நிரப்பும் வண்ணம் உள்ளே வரையப்படும் போகி வண்ணங்களின் மாறுபட்ட வண்ணங்களாக இருக்க வேண்டும். பெரிய, சிறிய என அடுத்தடுத்து வெறகு கட்டைகளை வரைய வேண்டும், கட்டைகளுக்கு மேல் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் கொண்டு தீ போன்ற வடிவத்தை வரையவும். போகி தீக்கு ஒருபுறம் மத்தளம் மற்றும் கரும்பு வரைந்து கொள்ளுங்கள், மறுபுறம் நாதஸ்வரம், நெல் மணிகளை வரைந்துகொள்ளுங்கள். இவைகள் அனைத்திற்கும் பொருந்தக்கூடிய வண்ணங்களை கொண்டு ரங்கோலியை அழகாகத் திட்வும். வட்டத்திற்கு மேல் முக்கோணம் வடிவத்தைச் சுற்றி வரைந்து கோலத்தை முழுமைப்படுத்தவும்.
Image Credit: Pinterest
இந்த இரண்டாவது போகி ரங்கோலி கோலத்தில் பெரிய வட்டம் வரைந்து கொள்ளவும், வட்டத்திற்குச் சிறு இடைவெளி விட்டு வட்டத்திற்கு மேல் இன்னொரு வட்டம் வரையவும். இந்த ரங்கோலி வட்டத்தின் வெளிப்புறத்தின் அடிப்பகுதியில் விறகு கட்டை வரைந்து வண்ணங்கள் தீட்டவும். ரங்கோலி கோலத்தின் உள்ளே ரோஜா போன்ற பூக்களை வரைந்து பூவின் மேல் பொங்கல் பானை வரைந்து வண்ணங்கள் பூசவும். பானையின் ஒருபுறம் கரும்பு மறுபுறம் அழகிய இலைகளைக் கொண்டு வடிவமைக்கவும். ரங்கொலியிம் மேல் புரத்தை சுற்றி இலைகளை வரைந்து முழுமைப்படுத்தவும்.
Image Credit: Pinterest
ஒரு வட்ட வடிவத்தை வரைந்து உங்களுக்கு பிடித்த வண்ணங்களை இடவும். வட்டத்திற்குள் வறகும், மேல் பகுதியில் தீயும் வரையவும். விறகுக்கு அடியில் பூஜைக்கு உடைத்த தெங்காய் வரைந்து அழகு சேர்க்கவும். வட்டத்தைச் சுற்றி பூக்கள் மற்றும் கரும்பு வரைந்து அழகு படுத்தலாம். தீக்கு இரண்டு பக்கமும் காற்றாடி வரைந்து முழுமைப்படுத்தவும்.
Image Credit: Pinterest
வீட்டு வாசலில் முழுவதும் செவ்வகம் வடிவத்தை வரையவும், செவ்வகம் வடிவத்தை இரண்டாக பிரத்து வண்ணங்கள் நிரப்பவும். இரண்டு வண்ணங்களுக்கு இடையில் போகி நெருப்பு, நெருப்புக்கு ஒருபுறத்தில் மத்தளம் கரும்பு, மறுபுறத்தில் லட்டு மற்றும் நெல்மணிகள் வரைந்து ரங்கோலி கோலத்தை அழகு படுத்தவும். செவ்வக வடிவத்தை முழுமைப்படுத்தப் பூக்கள், நடத்திரம். நில ,மற்றும் புல்கள் போன்றவை வரைந்து போகியை இனிதே வரவேற்கவும்.
Image Credit: Pinterest
மேலும் படிக்க: புத்தாண்டை இனிதே வரவேற்கப் பாரம்பரியத்தை வெளிப்பதும் தமிழ் ரங்கோலி கோலங்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com