2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் தொடங்கிட பலரும் பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்று வீட்டை அலங்கரிக்க கோலம் போடுவது. தினமும் வீட்டின் முன் வெள்ளை நிறத்தில் கோலமிட்டாலும் பண்டிகைகளின் போது வண்ணமயமான ரங்கோலி கோலங்களை போடுவது சிறப்பு வாய்ந்தது. எந்த பண்டிகையாக இருந்தாலும் வீட்டின் வாசல் முன் வண்ண பொடிகளால் அழகழகாய் கோலமிட்டு பண்டிகையை வண்ணமயமாக வரவேற்பது இந்திய கலாச்சாரத்தின் முக்கிய அங்கங்களில் ஒன்று. அப்படி 2025 புத்தாண்டை வண்ணமயமாக தொடங்க, அழகான ரங்கோலி கோலம் டிசைன்கள் இதோ.
கோலம் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்க இந்த கோலம் சரியாக இருக்கும். முதலில் ஒரு சதுரத்தை வரைந்து, அதன் நடுவில் ‘இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என்று தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதுங்கள். இறுதியாக சதுரத்தை சுற்றி பூ வடிவ டிசைன்களை வரையவும். சதுரத்தை சுற்றி பூ டிசைன் தான் வரைய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு விருப்பமான டிசைன்களை சதுரத்தை சுற்றி வரையலாம்.
மேலும் படிக்க: மார்கழி மாதம் வீட்டு வாசலில் கம்பி கோலம் போடுவதின் முக்கியத்துவம்
ஆரஞ்சு நிறத்தில் பூ மற்றும் பச்சை இலைகளை கொண்ட இந்த ரங்கோலியை உங்கள் வீட்டின் முன் வரைந்தால் அழகாக தெரியும். இந்த மலர் ரங்கோலியை வரைய உங்களுக்கு 5-7 வண்ண பொடிகள் தேவை. முதலில் அரை வட்டம் வரைந்து அதனுள் நீல நிறத்தை நிரப்பி, 2025 புத்தாண்டு என வெள்ளை நிற கோலப் பொடியில் எழுதுங்கள். அதன் பின் வட்டத்தை சுற்றி உங்களுக்கு பிடித்தமான மலர் மற்றும் இலைகளை வரையவும். இறுதியாக வட்டத்தின் மேல் ஐந்து சுருள் வடிவத்தை வரையவும்.
நீங்கள் புதிதாக கோலமிட கற்றுக்கொள்பவராக இருந்தால் வருகிற 2025 புத்தாண்டுக்கு இந்த 14 X 2 புள்ளி புத்தாண்டு வாழ்த்து கோலத்தை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணுங்க. ‘NEW YEAR’ என்று நேராகவும், செங்குத்தாகவும் குறுக்கே எழுதுங்கள். அதன் பின் இறுதியாக ‘NEW YEAR’ என்ற சொல்லுக்கு வெளியே நான்கு திசைகளிலும் புள்ளி வைத்து புகைப்படத்தில் உள்ளவாறு வரையவும். இந்த கோலத்தை வரைந்து உங்கள் புத்தாண்டை தொடங்குவது புது அனுபவமாக இருக்கும்.
மேலும் படிக்க: 21 புள்ளிகள் வைத்து 4 வகையான மார்கழி மாத கோலங்கள்
உங்கள் வீட்டு வாசலில் இடம் குறைவாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் இந்த விளக்கு வடிவ ரங்கோலியை வரையலாம். இது உங்கள் வீட்டின் ஜொலிக்க செய்யும். முதலில் மூன்று முகங்கள் உடைய விளக்கை வரைந்து அதன் பின் கீழே அரை வட்டத்தை வரைந்து அதனுள் 2025 என்று எழுதுங்கள். இறுதியாக வட்டத்தின் வெளியே பூ வரைந்தால் எளிதாக இந்த ரங்கோலியை முடிக்கலாம்.
நீங்கள் ரங்கோலி போடுவதில் வல்லமை வாய்ந்தவர் என்றால் 2025 புத்தாண்டுக்கு உங்கள் வீட்டின் முன் வரைய இந்த ரங்கோலி சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ரங்கோலிக்கு 8-10 வண்ணங்கள் தேவைப்படும். இதனை வரைய கடின உழைப்பு தேவைப்பட்டாலும், வரைந்து முடித்தவுடன் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.
நீட் அண்ட் சிம்பிளாக இருக்க வேண்டும் அதே சமயம் பார்ப்பவர்களை கவர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்றவாறு இந்த ரங்கோலி உள்ளது. இந்த ரங்கோலியில் பிரதானமாக உள்ள ஆரஞ்சு, மஞ்சள் நிறம் மற்றும் சதுரத்தை சுற்றியுள்ள வெள்ளை நிறம் வீட்டின் வாசலில் புத்தாண்டன்று புதுப் பொலிவை தரும்.
Image Credit: Instagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com