பிரசவத்திற்கு பிறகு கொடுக்கப்படும் பத்திய உணவில் தொடங்கி, புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பல விதமான பராமரிப்பு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. கர்ப்ப காலம் முதல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது வரை ஒரு பெண்ணின் உடலில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்நிலையில் உடலை முறையாக பராமரிக்க தவறினால் எதிர்காலத்தில் பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
கர்ப்ப காலத்தில் கருவில் வளரும் குழந்தையின் சரியான வளர்ச்சிக்காக, பெண்களின் கருப்பை, தசைகள், தசைநார்கள் மற்றும் வயிற்றை சுற்றி உள்ள தோல் பகுதிகள் விரிவடைகின்றன. இந்த மாற்றங்களால் பிரசவத்திற்கு பிறகு தொப்பையை குறைக்கவும், ஃபிட்டான உடல் வடிவத்தை பெறவும் அதிக நேரமாகலாம். இன்றைய பதிவில், பிரசவத்திற்கு பிறகு பெல்ட் அணிய வேண்டியதன் அவசியத்தை மகப்பேறு மருத்துவரான அர்ச்சனா பதக் அவர்களிடம் இருந்து தெரிந்துகொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கு வயது ஒரு தடை அல்ல, 30 வயதிலும் ஈஸியா எடையை குறைக்கலாம்!
பிரசவத்திற்கு பிறகு ஒரு பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. விரிவடைந்த கருப்பை மற்றும் தசைகள் யாவும் இயல்பு நிலைக்கு திரும்பும் பொழுது பல ஹார்மோன் மாற்றங்களும் நடைபெறுகின்றன. இதனால் சிறுநீர், பிறப்புறுப்பு வெளியேற்றம் மற்றும் வியர்வை மூலமாக அதிக திரவம் வெளியிடப்படுகிறது. இருப்பினும் பழைய இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கும், அடிவயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கும் நேரமாகலாம்.
பிரசவத்திற்கு பிறகு அணியப்படும் இந்த பெல்டை மெட்டர்னிட்டி பெல்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இது புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களின் வயிறு மற்றும் கீழ் முதுகு பகுதியை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீட்சியின் காரணமாக வயிறு மற்றும் கீழ் முதுகின் தசைகள் பலவீனமடைகின்றன. எனவே பிரசவத்திற்குப் பிறகு, அடிவயிற்றைச் சுற்றியுள்ள பகுதியை ஆதரிக்க பெல்ட் அணிவது அவசியமாகிறது.
பெல்ட் அணிவதால் தசைகள் மீதான அழுத்தம் மற்றும் வலி குறையும், இதனால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம். மேலும் உள் உறுப்புகளையும் அவற்றின் இயல்பு நிலையில் நிலைநிறுத்த உதவுகிறது. இதை அணிவதால் பெண்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் உடல் விரைவில் பழைய நிலைக்கு திரும்பும் என்ற உறுதியும் கிடைக்கிறது.
பெல்ட்டை எப்போது மற்றும் எவ்வளவு நேரம் அணிந்திருக்க வேண்டும் போன்ற தகவல்களையும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஒரு சில பெண்களுக்கு பெல்ட் அணிவதால் அழுத்தம், வலி அல்லது அசௌகரியங்கள் ஏற்படலாம். மேலும் சிசேரியன் மூலம் குழந்தை பிறந்து இருந்தால், பெல்ட்டின் அழுத்தம் அறுவை சிகிச்சை காயங்களையும் பாதிக்கலாம். எனவே காயம் குணமடைந்தவுடன், பெல்ட் அணிவது நல்லது. எல்லோருடைய உடல் அமைப்பும் ஒரே மாதிரியாக இருபதில்லை, எனவே பெல்ட் அணிவதற்கு முன் கட்டாயமாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.
இந்த பதிவும் உதவலாம்: குறைவான தூக்கம் இதய நோய்களின் ஆபத்தை அதிகரிக்குமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com