நம்மில் பலரும் காரில் அல்லது பஸ்ஸில் அதிக நேரம் பயணம் செய்யும்போது நமக்கு கை, கால் மரத்துப்போவது போல உணர்கிறோம். அதாவது நாம் ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தால் நம் உடலில் உள்ள இரத்த ஓட்டங்கள் தடைபடும். இதன் காரணமாக இந்த மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மரத்து போகும் பிரச்சனை என்பது ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் மட்டும் ஏற்படுவது இல்லை என்றும் இன்னும் பல காரணங்களும் இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.
அடிக்கடி கை கால்கள் மரத்து போவதற்கு காரணங்கள் இதுதான் :
முதுகுத்தண்டு பிரச்சனை:
உடலில் உள்ள உறுப்புகள் மரத்துப் போவது என்பது ஒரு நோய் இல்லை என்றாலும், பிற நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக நம் உடலில் எங்கயாவது மரத்து போனால் அது நம் மூளை, முதுகுத்தண்டு பகுதியில் ஏதோ ஓர் பிரச்சனை என்ற அறிகுறியாகும்.
மேலும் படிக்க: உடலில் உள்ள நச்சுக்களை நீக்க இதை ட்ரை பண்ணுங்க!
மரபணு கோளாறு:
பல ஆண்டுகளாக ஒரு நபருக்கு இந்த மரத்துப்போதல் பிரச்சனை இருந்தால் அது அவர் உடலில் உள்ள மரபு அணுக்களின் கோளாறாக கூட இருக்கலாம்.
மாத்திரைகள்:
ஏதேனும் ஆன்டிபயாடிக் மாத்திரை அல்லது புற்று நோயை குணப்படுத்தும் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து கொண்டிருந்தாலும் உங்களுக்கு கை, கால்கள் அடிக்கடி மரத்து போகும் பிரச்சனை ஏற்படும். நம் உடலில் உள்ள தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தாலும் இந்த கை, கால்கள் மரத்து போகும் பிரச்சனை ஏற்படக்கூடும்.
உடல் பருமன்:
உடல் எடை அதிகரிக்கும்போது அல்லது உடலில் அதிகளவு கொழுப்புகள் சேர்ந்தாலும் இந்த கால், கை மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.
வைட்டமின் குறைபாடு:
உங்கள் உடலில் வைட்டமின் B12 குறைபாடுகள் இருந்தாலும் இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும். எனவே உங்கள் உடலுக்கு தேவையான அளவிற்கு வைட்டமின் B12 சத்துக்கள் நிறைந்துள்ள இறைச்சி உணவுகளை சாப்பிடலாம்.
தொழுநோய் பாதிப்பு:
அதேபோல தொழுநோயால் பாதிக்க பட்டவர்களுக்கும் இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் தொழு நோய் உள்ளவர்கள் மீது சூடான தண்ணீர் ஊற்றினால் கூட அவர்களுக்கு உணர்ச்சிகள் இருக்காது. எனவே தொழு நோய் உள்ளவர்கள் தங்கள் தோலை மருத்துவ பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சை முறைகளை பின்பற்றுவது அவசியம்.
இரத்த சர்க்கரை அளவு:
நீரிழிவு நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் அவர்களது கை, கால்கள் மரத்து போகாமல் இருக்க விரும்பினால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் உடல் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக இவர்களுக்கு கால்களில் ஏதாவது காயங்கள் ஏற்பட்டால் உடனே அவர்களது நரம்புகளும் அதிகளவு பாதிக்கப்படும்.
மதுப்பழக்கம்:
குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கை கால்கள் அடிக்கடி மரத்து போனால் அவர்களின் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்ற அறிகுறியாகும் என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகிறது.
பக்கவாதம்:
சில நபர்களுக்கு அடிக்கடி தலை ஒரு பக்கம் மட்டும் மரத்து போய்விடும். இது பக்கவாதத்திற்கான அறிகுறிகள் ஆகும். எனவே அவர்கள் நரம்பியல் மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை மேற்கொள்வது அவசியம் ஆகும்.
மேலும் படிக்க: பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்தா உடனே நிறுத்திடுங்க!
யாருக்கெல்லாம் இந்த பிரச்சனை ஏற்படும்?
இந்த பிரச்சனை அதிக நேரம் கணினியில் அமர்ந்து வேலை செய்யும் பெண்களுக்கு, அதிகமாக குடி பழக்கம் உள்ளவர்களுக்கு, அதிக பாத்திரம் சுத்தம் செய்பவர்களுக்கு, தங்களது மணிக்கட்டுகளுக்கு அதிக வேலை தருபவர்களுக்கு மற்றும் உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கும் அடிக்கடி இந்த கை, கால்கள் மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க டிவி பார்க்கும்போது, சாய்வாக அமர்ந்து டிவி பார்ப்பதை விட, நேராக நிமிர்ந்து உட்கார்ந்து டிவி பார்க்க வேண்டும். நாம் சில நேரங்களில் உட்கார்ந்திருக்கும் நிலைகளினால் கூட இந்த மரத்து போகும் பிரச்சனை ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி கை, கால்கள் மரத்து போகும் பிரச்சனை உள்ளவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பதை தவிர்த்து, கொஞ்சமாவது உடலுக்கு அசைவுகள் தரலாம். அவ்வப்போது நேரம் கிடைத்தால் எழுந்து கொஞ்ச தூரம் நடந்துவிட்டு பிறகு வேலையை தொடர்ந்து செய்யலாம்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation