
நம்மில் பல பேர் உடல் எடையைக் குறைக்க பாடுபடுகிறோம். ஆனால் எவ்வளவு எடை இருந்தால் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், உயரத்திற்கு ஏற்ப எவ்வளவு எடையில் இருக்கலாம் என்பது பலருக்கும் ஒரு அடிப்படையான கேள்வியாகும். இந்தக் கட்டுரையில் BMI எனும் BODY MASS INDEX, நமது உயரத்திற்கு ஏற்ப எவ்வளவு எடையில் இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உயரத்திற்கு ஏற்ற எடை குறித்து கணக்கிட அறிவியல் ரீதியான வழிகள் இருந்தாலும் சிலர் அரை குறையாகத் தெரிந்து கொண்டு கதை அடிப்பது உண்டு. உதாரணமாக சிலர் தங்களுக்கு பிடித்தமான ஆடைகளை அணியும் அளவிற்கு உடல்எடை இருக்க வேண்டும் என நினைப்பர். அதுமட்டுமின்றி அந்த ஆடையை அணிந்த பிறகு ஃபிட்டாக இருப்பதாக நண்பர்களிடம் கூறுவதுண்டு.
சிலர் தோராயமாக கண்ணாடி முன் நின்று கொண்டு நாம் சரியான எடையில் தான் இருக்கிறோம் என நினைப்பர். ஒரு வேளை நீங்கள் 100 கிலோ எடை கொண்ட நபராக இருந்தால் 70 கிலோவுக்கு வந்துவிடுங்கள் என நண்பர்கள், உறவினர்கள் கூறுவதை கேட்டு 70 கிலோ தான் சரியான உடல் எடை என்று நினைப்போம். இது எதுவுமே உண்மை கிடையாது.

வீட்டின் சுவற்றை ஒட்டியபடி நின்று கொண்டு ஒரு இன்ச் டேப் கொண்டு உங்கள் உயரத்தை அளக்கவும். அதில் இருந்து 100 குறைக்கவும். அதாவது நீங்கள் 173 சென்டிமீட்டர் உயரம் என்றால் அதனுடன் 100 குறைத்து கொள்ளுங்கள். நீங்கள் 73 கிலோவுக்குள் இருந்தால் ஆரோக்கியமான உடல் எடை என அர்த்தம்.
மேலும் படிங்க பொறித்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாமா ? கூடாதா ?
உடல் எடையை / (உயரம்) வர்க்க மூலம் = இதுவே சரியான வழி
இதில் உங்கள் BMI அளவு 18.5 கீழ் இருந்தால் குறைந்த எடை என அர்த்தம். 18.5 முதல் 25 வரை இருந்தால் இயல்பான BMI, 25 முதல் 29.9 வரை இருந்தால் அதிக எடை, 30க்கு மேல் இருந்தால் உடல் பருமன் ஆகும்.
உடல் எடை அதிகமாக இருந்தாலே உடனடியாகப் பயிற்சி செய்து குறைக்க வேண்டும் என நினைக்காதீர்கள். அதேபோல தனக்கு உடலில் எலும்பு எடை பிறரை விட அதிகம் என்று நினைக்க வேண்டாம். அனைவருக்கும் உடலில் எலும்பின் எடை ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்.
மேலும் படிங்க சத்தம் போட்டு கத்தாதீங்க! உடல்நலன் பாதிக்கப்படும்
ஒரு நபருக்குத் தசை அதிகமாக இருந்தால் உடல் பருமன் என அர்த்தம் கிடையாது. உடலில் அதிக கொழுப்பு இருந்தால் தான் உடல் பருமனாகும். அதேபோல WAIST HIP RATIO தெரிந்திருக்க வேண்டும்.
உங்கள் இடுப்பு சுற்றளவை வயிற்று சுற்றளவால் வகுக்க வேண்டும். வகுத்த பிறகு ஆண்களுக்கு 0.9க்கு குறைவாகவும், பெண்களுக்கு 0.85க்கு குறைவாகவும் இருந்தால் நல்லது. வயிற்று கொழுப்பு அதிகமாக இருந்தால் தான் பிரச்சினையாகும். இந்த அளவை கணக்கிட்டு உடலில் கொழுப்பு அளவை குறைக்க முயற்சிக்கலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com