monsoon foods:மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

இஞ்சி டீ முதல் முளைக்கட்டிய பயிறுகள் வரை மழைக்காலத்திற்கு ஏற்ற உணவுகள்

rainy food    Copy

வடகிழக்கு பருவமழையும், வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலும் தமிழகத்தைப் பாடாய் படுத்திவருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் மக்களுக்கு பருவ கால தொற்று நோய்கள், செரிமான பிரச்சனைகள் மற்றும் அழற்சி போன்றவை ஏற்படக்கூடும். இவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான உணவுகளை நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்:

சூப்:

மழைக்காலங்களில் குளிருக்கு இதமாக சூடான பானங்களை சாப்பிட வேண்டும் என்று அனைவரும் நினைப்பதுண்டு. டீ, காபியை விட அதற்கு மாற்றாக நீங்கள் சூடான சூப் வகைகளை முயற்சி செய்துப்பார்க்கலாம். காய்கறிகளைக் கொண்டு தயார் செய்யப்படும் சூப்களில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு உதவியாக இருக்கும். மழைக்காலங்களில் ஏற்படும் செரிமான பிரச்சனைக்கும் தீர்வாக அமையும்.

முளைக்கட்டிய பயறு வகைகள்:

மழைக்காலங்கள் முதல் அனைத்து காலநிலைக்கும் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தாக உள்ளது முளைக்கட்டிய பயறு வகைகள். பச்சை பயறு, கம்பு போன்ற முளைக்கட்டிய பயறு வகைகளை காலை உணவு அல்லது சிற்றுண்டியாக நீங்கள் உட்கொள்ளும் போது உஙகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. குறிப்பாக மழைக்காலங்களில் தொற்று நோய் கிருமிகளுடன் எதிர்த்துப் போராட உதவுகிறது.

இஞ்சி டீ/ துளசி டீ:

மழைக்காலத்தில் உங்களின் சிறந்த நண்பராக விளங்குவது மூலிகை தேநீர் தான். சளி, இருமலல், காய்ச்சல் போன்றவற்றிலிருந்து உங்களைக் காத்துக்கொள்வதற்கு பேருதவியாக இந்த இஞ்சி அல்லது துளசி டீ அமைகிறது. இதை நீங்கள் மழைக்காலங்களில்பருகும் போது உடலை சூடாகவும், பாதுகாப்பதற்கும் வைத்திருக்க உதவுகிறது.

மஞ்சள் பால் :

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்கக்கூடிய மூலிகைகளில் ஒன்று தான் மஞ்சள். எந்த பருவ காலத்திற்கும் ஏற்ப உங்களது உணவு முறையில் இதை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். மழைக்காலத்தில் சூடான பாலுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து பருகலாம். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உங்களது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி தொற்று நோய் பாதிப்பைக் குறைக்கிறது. மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க, படுக்கைக்குச் செல்வதற்கு முன் தினமும் இரவில் ஒரு கிளாஸ் சூடான மஞ்சள் பால் குடிக்கவும்.

புரோபயாடிக்குள் நிறைந்த உணவுகள்:

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே நம்மில் பலர் சளி பிடித்துவிடும் என்பதற்காக தயிர், மோர் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்திவிடுவோம். இது முற்றிலும் தவறான செயல். தயிர், மோரில் தான் அதிக புரோபயோடிக்குள் உள்ளது. இவை ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு உதவும் பல்வேறு நுண்ணுயிரிகைகளைக் கொண்டுள்ளதோடு, குடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை தரக்கூடியதாக உள்ளது. எவ்வித அச்சமும் இன்றி மழைக்காலங்களில் நீங்கள் தயிரை உபயோகிக்கலாம்.

எலுமிச்சை:

பருவமழை என்பது தொற்றுநோய்கள் அதிகம் ஏற்படும் காலம் என்பதால் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்ச் போன்ற உணவுகளை அதிகளவில் உட்கொள்ள வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

நட்ஸ்கள்:

எந்தவொரு பருவ காலங்களிலும் நீங்கள் பேரிச்சம்பழம், பாதாம், வால் நட், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவியாக இருக்கும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP