சுட்டெரிக்கும் கோடை காலம் வந்துவிட்டது வெயிலில் தாக்கத்திலிருந்து விடுபட பலரும் காலை இரவு என இரண்டு நேரங்களில் குளித்து வருகிறார்கள் அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஒரு சிலர் பொதுவாகவே இரண்டு நேரமும் குளிர்ந்த நீரில் குளிக்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் எப்போதுமே வெந்நீரில் மட்டுமே குளிக்கும் வழக்கத்தை வைத்துள்ளார்கள்.
கோடையில் தினமும் குளிர்ந்த நீரில் குளித்தால் என்ன நடக்கும்? குளிப்பது நல்லதா? குளிர்ந்த நீரில் குளித்தால் முடி கொட்டுமா? போன்ற விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க: உங்கள் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற கிராம்பு, பிளாக் டீ போதும்!
கோடைக்காலத்தில் மழைக் குளியல் செய்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்றும், தினமும் மழைக் குளியல் எடுப்பது மிகவும் நல்லது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். குளிர்ந்த நீரில் குளிப்பது உடலில் வீக்கம் மற்றும் தசை வலியைக் குறைப்பதோடு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும், மன உளைச்சல் குறைந்து ஆரோக்கியமாக, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்போம்.
கோடை காலத்தில் தொடர்ந்து குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் உடல்நல பிரச்சனைகள் வரும் என்று பல்வேறு கருத்துக்கள் உள்ளன. குளிர்ந்த நீரில் நாம் குளிக்கும் போது நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது என்று மருத்துவ ஆய்வுகள் உள்ளன. இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல்கள் பெறப்படும். மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியை குறைக்க கோடை காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது மூத்த மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
தினமும் கோடை காலத்தில் ஐந்து நிமிடம் குளிர்ந்த நீரில் குளித்தால் மனச்சோர்விலிருந்து நிவாரணம் கிடைக்கும் மேலும் இது நல்ல எண்டோர்பின் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
கோடை காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் இதயத்துடிப்பு சரியாகி ரத்த அழுத்தம் குறையும் மேலும் இவ்வாறு குளிப்பதால் ஆக்சிஜனை சரியாக எடுத்துக் கொள்ள முடியும். மேலும் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கோடை காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது மிகவும் நல்லது.
குளிர்ந்த நீரில் குளிப்பது உடலில் உள்ள லூக்கோசைட்சை தூண்டுகிறது. இவை நம் உடலில் வரும் பொதுவான நோய்களிலிருந்து நம்மை காக்க உதவும். குளிர்ந்த தண்ணீர் குளியல் எடுப்பது சருமத் துளைகளை இறுக்கமாக்கி உடலில் வரும் சரும எண்ணெய் உற்பத்தியை குறைக்கிறது. கோடை காலங்களில் தோல் மற்றும் வறட்சியில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
மேலும் படிக்க: முட்டையின் வெள்ளைக்கரு முதல் வாழைப்பழம் வரை முகத்தின் தோலை இறுக்கும் ஃபேஸ் பேக்குகள்!
image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com