தற்போதைய நவநாகரீக காலத்தில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தலைமுடி நரைத்து வருகிறது. இந்த பிரச்சனை 35 வயதை கடந்த பெண்கள் இளைஞர்களுக்கு அதிகம் வருகிறது. இதனால் இன்றைய காலத்து இளைஞர்களும், பெண்களும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தலைமுடியை கருப்பாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் அது பலனளிப்பது இல்லை. தலை முடியை ஆரோக்கியமாக இயற்கையான முறையில் கருப்பாக மாற்ற சில எளிய வீட்டு வைத்திய முறைகள் உள்ளது. குறிப்பாக உங்கள் வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்களைக் கொண்டு தலையில் வரும் நரை முடியை எளிமையாக கருமையாக மாற்ற முடியும்.
தலையில் வரும் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற இயற்கையான பல வழிகள் உள்ளன. இதற்காக சந்தையில் செயற்கையான சில வழிகளை பல இளைஞர்களும் பெண்களும் பின்பற்றி வருகின்றனர். இருப்பினும் அத்தகைய முயற்சிகள் தலைமுடிக்கு ஆரோக்கியமாக இருக்காது. இதனால் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகளும் ஏற்படும். இதற்கு தீர்வாக வீட்டில் இருந்தபடியே சிம்பிள் டிப்ஸை பின்பற்றலாம்.
வெள்ளை முடியை கருப்பாக்க தேவையான பொருட்கள்
- கிராம்பு
- பிளாக் டீ
கிராம்பு
இது பாரம்பரிய மருத்துவ மூலிகை பொருளாகும். சமையலில் நறுமணப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே, ஆன்டி அதிகமாக காணப்படுகிறது. இது தலைமுடியின் தண்டை வலுப்படுத்தவும், தலைமுடி உடையாமல் காக்கவும் உதவுகிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் காரணமாக தலைமுடி சிறு வயதிலேயே நரைக்க கூடும். இளநரையை தடுக்க நினைப்பவர்கள் கிராம்பு தண்ணீர் பெரிதும் உதவும்.
பிளாக் டீ
பிளாக் டீயில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிக அளவில் இருக்கின்றன.இவை முடி உதிர்வை தடுத்து நிறுத்தி முடி வளர்ச்சியைத் தூண்டும். தலைக்கு குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு டீ டிக்காஷனை முடியின் வேர்க்கால்களில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து விடுங்கள். பின்பு அரை மணி நேரம் கழித்து குளித்தால் நரை முடி பிரச்சனை தீரும். இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் நரை முடி குறைந்து பளபளப்பாகவும் அழகாகவும் இருக்கும். தினமும் ப்ளாக் டீ கொண்டு தலையை அலசுவது உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
நரை முடியை கருப்பாக்க என்ன செய்ய வேண்டும்?
முதலில் இரண்டு கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் ஐந்து அல்லது ஆறு கிராம்புகளை அரைத்து போட்டு கொதிக்க விடவும். பின்னர் அதில் தேயிலை தூள் சேர்க்கவும். தொடர்ந்து அடுப்பில் ம்மில் வைத்து கொதிக்க வைக்கவும். ஊற்றிய இரண்டு கப் தண்ணீரை ஒரு கப் ஆகும் வரை கொதிக்க வைக்கவும். பின் அதை ஆறவைக்கவும்.
தலைமுடிக்கு தடவவும்
தயாரான இந்த மூலிகை தண்ணீரை நேரடியாக தலைமுடி வேரில் படும்படி முழுவதும் தடவவும். இதனால் நரை முடி கருப்பாக மாறுவது மட்டுமின்றி நீளமாக வளரும்.இந்த மந்திர தண்ணீரை எந்த வயதினர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் படிக்க:முட்டையின் வெள்ளைக்கரு முதல் வாழைப்பழம் வரை முகத்தின் தோலை இறுக்கும் ஃபேஸ் பேக்குகள்!
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation