herzindagi
image

Thyroid Effect Fertility: தைராய்டு பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு கருவுறுதலில் ஏற்படும் தாக்கம் பற்றி தெரியுமா?

தைராய்டு சுரப்பிகள் மந்தமாகவோ அல்லது அதிகமாகவோ செயல்படுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது பெண்களின் கருவுறுதலையும் பாதிக்க செய்கிறது. இதை நிர்வகிக்க சிறந்த வழி ஆரோக்கியமான வாழ்க்கை முறை பின்பற்றுவது.
Editorial
Updated:- 2025-06-18, 14:01 IST

இன்றைய காலகட்டத்தில் ஹார்மோன் தொடர்பான பல வகையான பிரச்சனைகள் பெண்களிடம் அதிகரித்து வருகின்றன. இவற்றில் PCOD மற்றும் தைராய்டு ஆகியவை முக்கிய பிரச்சனைகளாக இருக்கிறது. தைராய்டு சுரப்பி மந்தமாகவோ அல்லது அதிகமாகவோ செயல்படுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆண்களை விட பெண்களிடமே இந்தப் பிரச்சனை அதிகம் காணப்படுகிறது. எடை அதிகரிப்பு, மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, தைராய்டு ஹார்மோனின் அளவு ஏற்ற இறக்கமாக இருக்கலாம். தைராய்டில் இரண்டு வகைகள் உள்ளன, ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம். உடலில் இருக்கும் தைராய்டு சுரப்பி தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யத் தொடங்கும் போது, அவற்றை தைராய்டு என்று அழைக்கப்படுகிறது. தைராய்டு பெண்களின் மாதவிடாய் மற்றும் கருவுறுதலை பாதிக்கிறது. தைராய்டு பெண்களின் கருவுறுதலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

 

மேலும் படிக்க: பாமாயில் சமைப்பதன் மூலம் அஞ்சி நடுங்கக்கூடிய பல நோய்களை தடுக்க உதவுகிறது

ஹைப்போ தைராய்டிசம் ஏற்பட காரணம்

 

ஹைப்போ தைராய்டு நிலை பெண்களின் கருவுறுதலை பாதிக்கலாம். அதேசமயம், ஹைப்பர் தைராய்டிசத்தில், தைராய்டு சுரப்பியில் இருந்து வெளியாகும் ஹார்மோனின் அளவு அதிகரிக்கிறது. அதேசமயம், ஹைப்போ தைராய்டிசத்தில், தைராய்டு சுரப்பி குறைந்த அளவு தைராய்டு ஹார்மோனை வெளியிடுகிறது மற்றும் உடலில் தைராய்டு ஹார்மோனின் அளவு குறையத் தொடங்குகிறது.

Thyroid Effect Fertility 2

 

பெண்களின் கருவுறுதலில் தைராய்டு எந்த வகையில் தாக்குகிறது

 

  • உடலில் தைராய்டு ஹார்மோனின் அளவு குறையத் தொடங்கும் போது பெண்களின் கருவுறுதலை பாதிக்கிறது.
  • தைராய்டு அளவு குறையும் போது கருவுறுதலுடன் நேரடியாக தொடர்புடைய அண்டவிடுப்பை பாதிக்கிறது.
  • இதன் காரணமாக மாதவிடாய் ஒழுங்கற்ற முறையில் வர தொடங்குவதால் பெண்களின் கருவுறுதல் பாதிக்கப்படுகிறது.
  • ஹைப்போ தைராய்டிசம் இருக்கும் பெண்களுக்கு கருப்பையில் இருந்து முட்டைகள் வெளியேறுவதைத் தடுக்க செய்யலாம். வழக்கமான மாதவிடாய் காலத்தில், ஒவ்வொரு மாதமும் கருப்பையில் இருந்து முட்டைகள் வெளியிடப்படுகின்றன, ஆனால் ஹைப்போ தைராய்டிசம் உள்ள பெண்களின் கருப்பைகளில் இருந்து மாதம்தோறும் முட்டைகளை சரியாக வெளியிடுவதில்லை. இது கருவுற்ற முட்டையின் வளர்ச்சியை பாதிக்க செய்யும்.
  • தைராய்டு பிரச்சனை உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிகம் உணவு மற்றும் வாழ்க்கை முறையை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் அது குழந்தையின் வளர்ச்சியில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

Thyroid Effect Fertility 1

தைராய்டுக்கு 3 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்

 

ஹைப்போ தைராய்டிசத்தில் தைராய்டு அளவை சமநிலையில் வைத்திருக்க செலினியம், துத்தநாகம் மற்றும் அயோடின் அவசியம். எனவே, தைராய்டு அளவு குறைவாக உள்ள பெண்கள் செலினியம், துத்தநாகம் மற்றும் அயோடின் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

 

மேலும் படிக்க: கண்பார்வை இயற்கையாகவே பொலிவாகவும் தெளிவாகவும் கூர்மையாகவும் தெரிய உதவும் உணவுகள்

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com