நாம் உள்ளிருந்து ஆரோக்கியம் பெறவில்லை என்றால், அது நம் முகத்தில் பிரதிபலித்து விடும். மூளை மற்றும் குடல் ஒன்றோடொன்று தொடர்பு உடையது. மூளைக்கு நம் வயிற்று பகுதியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி இருக்கிறது. நீங்கள் ஏதாவது ஒரு உணவை பற்றி சிந்திக்கும் போதே, நமது மூளையில் உற்பத்தி ஆகும் ஹார்மோன்கள் சாப்பிடும் ஆசையை தூண்டி விடும். இதனால் செரிமான நொதிகள் உற்பத்தியாக தொடங்கி விடும்.
உங்கள் குடலை நல்ல விதமாக பராமரிக்க நினைத்தால் ப்ரோபயாடிக் மூலம் சாத்தியம் ஆகும். ப்ரோபயாடிக்ஸ் என்பது நல்ல பாக்டீரியாக்களை கொண்டது. இது செரிமான சக்தியை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் மற்றும் நமது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நலம் பயக்கும். டாக்டர். விஷாகா என்பவர் புகழ் பெற்ற மருத்துவர், எழுத்தாளர் மற்றும் பதக்கங்களை வென்ற உணவியல் நிபுணர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடல் ஆரோக்கியம் பற்றியும் ப்ரோபயாடிக் பற்றிய தகவல்களையும் பகிர்ந்துள்ளார். இந்த கட்டுரையில் ப்ரோபயாடிக்ஸ் என்றால் என்ன, அது நமது குடலை எப்படி ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது என்று காண்போம்
இதுவும் உதவலாம் :வயிற்றுப் புண்களை விரைவில் ஆற்றும் ஆயுர்வேத வீட்டு வைத்தியம்
நம் குடல் பகுதியில் உள்ள நுண்ணுயிர்கள் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை காளான் உள்ளன. இவை அனைத்திலும் பாக்டீரியா தான் அதிகமாக இருக்கிறது. உங்கள் குடல் என்பது கிட்டத்தட்ட 300-500 பாக்டீரியா வகை கலவைகளின் உறைவிடமாக. இருக்கிறது.
ஆரோக்கியம் நிறைந்த நுண்ணுயிர்களை குடல் பகுதியில் வாழ வைக்க ப்ரோபயாடிக்ஸ் உதவுகிறது. நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களை சரியான விகிதத்தில் வைத்து கொள்ள உதவுகிறது
நமக்கு வெவ்வேறு காரணங்களால் ஏற்படும் வயிற்று போக்கின் தீவிரத்தையும் அபாயத்தையும் ப்ரோபயாடிக்ஸ் குறைக்கிறது. இத்துடன் சேர்ந்து, ப்ரோபயாடிக்ஸ் பல்வேறு பலன்களை நமக்கு தருகிறது, அவை
ப்ரோபயாடிக்ஸ் செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. வயிற்று போக்கு, வயிறு உப்புசம், அசிடிட்டி, ஐபிஎஸ் மற்றும் வயிறு சம்பந்தமான தொற்றுக்களில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது.
உடல் பருமன் உள்ளவர்களுடைய குடலில் நுண்ணுயிர்கள் இருக்கின்றன. இவை சாதாரண மக்களின் குடலில் உள்ள நுண்ணுயிர்களிடம் இருந்து வேறுபடுகிறது என்று பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற சூழலில், ப்ரோபயாடிக்ஸில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமான ஆரோக்கியத்தை சீராக வைத்து, உணவு சாப்பிடும் ஆசையையும் கட்டுபடுத்தி விடுகிறது.
வீக்கத்தை போக்க நல்ல பாக்டீரியாக்களால் மட்டுமே முடியும். வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் சிக்கல்கள் தான் நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள். இவ்விரண்டும் வீக்கம் காரணமாக உருவாகிறது. இவற்றை ப்ரோபயாடிக்ஸ் சரி செய்கிறது.
குடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்யம் ஒன்றோடொன்று தொடர்பு உடையது. இவை இரண்டும் தொடர்பில் இருப்பதால், ப்ரோபயாடிக்ஸ் உட்கொள்ள அது மனநல கோளாறுகளின் அறிகுறிகளை சீராக்கி விடுகிறது. மன அழுத்தம், கோபம், மனவுளைச்சல் மற்றும் ஞாபகமறதி ஆகிய மனநல பிரச்சனைகளுக்கு ப்ரோபயாடிக்ஸ் சிகிச்சை அளிக்கிறது.
இதுவும் உதவலாம் :தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
ப்ரோபயாடிக்ஸ் நம் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நன்மை செய்யும் என்று நிரூபிக்க பட்டு இருக்கிறது. இதனால் தொற்றிலிருந்து காக்கிறது. எனவே ப்ரோபயாடிக்ஸ் உட்கொள்வது நல்லது.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com