ஆரோக்கியமான விதைகளில் ஆளி விதை மற்றும் சியா விதை மிக மிக முக்கியமானது. இந்த இரண்டு விதைகளும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. நார்ச்சத்து, ஒமேகா -3, புரதங்கள் மற்றும் கொழுப்புகள் இவற்றில் சரியான அளவில் உள்ளன. சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் இரண்டும் சிறந்த செரிமானத்திற்கும் உதவுகின்றன. இவைகள் சில வகையான புற்றுநோய்களுக்கு எதிராகவும் போராடுகின்றன.
முக்கிய வேறுபாடு என்னவென்றால், இவை சுவை மற்றும் தோற்றத்தில் மட்டுமே மாறுபடுகின்றன. மற்றப்படி இரண்டும் ஒரே வகையான ஊட்டச்சத்துகள் மற்றும் நன்மைகளை வழங்குகின்றன. சியா விதைகள் சிறிய, கருப்பு அல்லது வெள்ளை, ஓவல் வடிவ விதைகள். அதே சமயம் ஆளி விதைகள் சியா விதைகளை விட தட்டையாகவும் பெரியதாகவும் இருக்கும். சியா மற்றும் ஆளி விதைகள் இரண்டும் வெவ்வேறு வகையான உணவுகளில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இவை அதிகமாக வெயிட் லாஸ், கொழுப்புகள் கரைக்க உதவுகின்றன. ஏனெனில் இவை ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தின் சிறந்த மூலமாகும், இது இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், தமனிகளில் பிளேக் வளர்ச்சியைக் குறைத்தல், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைத்தல்,போன்ற பல ஆரோக்கிய நன்மைகளுக்கு உதவுகின்றன. நார்ச்சத்து தவிர, ஒமேகா -3 மற்றும் கொழுப்புகள், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் ஆகியவை நிறைந்துள்ளன.
இவை நல்ல புரதத்திற்கு சான்றாக உள்ளன. காலை நேரத்தில் வெறும் வயிற்றில் ஆளி விதைகளை எடுத்து கொள்ளலாம். வறுத்து சாப்பிடலாம் அல்லது பொடியாக அரைத்தும் எடுத்து கொள்ளலாம். அதே போல் ஸ்மூத்திகளிலும் கலந்து சாப்பிடலாம். ஆளி விதைகள் வெயிட் லாஸ், சீராத ரத்த ஓட்டத்துக்கு உதவுகின்றன.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com