இயற்கை அன்னை நமக்கு பல பொருட்களை பரிசாக அளித்துள்ளது, அவை ஒவ்வொரு உறுப்புக்கும் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குவதற்காக உட்கொள்ளலாம். அவற்றில் ஒன்று மரவள்ளிக்கிழங்கு. இது மாவுச்சத்து நிறைந்த நிலைத்தன்மையைக் கொண்ட ஒரு வேர் காய்கறி. இதைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மிகவும் பிரபலமான பொருள் சிப்ஸ் ஆகும். இருப்பினும், இந்தியாவில், சப்பாத்தி அல்லது வேறு வகைகளிலும் சாப்பிட பயன்படுத்தப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கு பல ஆரோக்கிய நன்மைகளால் நிரம்பியுள்ளது, அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது
உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறை காரணமாக, உடலில் தேவையற்ற கொழுப்பு சேரத்தொடங்குகிறது, கொழுப்புகள் சேர எண்ணெய் நிறைந்த உணவுகள் சாப்பிடுவது முக்கிய காரணமாகும். இது நம் சுவை மொட்டுகளை திருப்திப்படுத்தினாலும், குப்பை உணவுகள் வயிற்றில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதில் உள்ள நிறைவுற்ற எண்ணெய் நமது செரிமானத்தை சீர்குலைக்கிறது, இதனால் உணவை உடைத்து எளிதில் ஜீரணிக்க கடினமாகிறது. மரவள்ளிக்கிழங்கு நார்ச்சத்துள்ள உணவுப் பொருள் என்பதால் செரிமான செயல்முறையை மேம்படுத்த உதவுகிறது. இது நச்சுகளை உறிஞ்சுவதை எளிதாக்குகிறது, குடல் இயக்கங்களை சீராக்க உதவுகிறது.
கண் பார்வையை மேம்படுத்துகிறது
பெரியவர்கள் மட்டுமல்ல, இன்றைய குழந்தைகள் கூட நாள் முழுவதும் திரையின் முன் அமர்ந்திருக்கிறார்கள். வேலை மற்றும் படிப்புக்கு கணினி, போன் அவசியமானது, இதனால் அதிகம் திரையை பார்ப்பதால் கண்பார்வை சேதமடையலாம். வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் பார்வையை மேம்படுத்த பரிந்துரைக்கப்படுகின்றன. மரவள்ளிக்கிழங்கில் இந்த கலவை ஏராளமாக உள்ளதால் பார்வைக் குறைபாட்டை தடுக்கிறது.
மேலும் படிக்க: பல மருத்துவ குணங்களை கொட்டி கொடுக்கும் தண்ணீர் முட்டான் கிழங்கை இனி உணவில் சேர்க்க மறக்காதீர்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் பல நோய்களால் பாதிக்கப்படுவதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. நோயெதிர்ப்பு அமைப்பு உடலைத் தாக்கி, பலவீனமாகவும், நோய்வாய்ப்பட்டதாகவும் மாற்றும் பாக்டீரியா, வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இவற்றை வலுப்படுத்த, ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி மரவள்ளிக்கிழங்கில் அதிகம் நிறைந்துள்ளது. இதில் நல்ல அளவு ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றுகிறது.
தலைவலியை சமாளிக்க உதவுகிறது
தலைவலி இருந்தால் வேலைகள் செய்யவிடாமல் தடுக்கிறது. பலருக்கு, தலைவலி மனதைத் திசைதிருப்பும்போது வேலையில் கவனம் செலுத்துவது சாத்தியமற்றதாக மாரும். நீங்கள் அடிக்கடி தலைவலியால் அவதிப்பட்டால், முதலில் செய்ய வேண்டியது மருத்துவரை அணுகுவதுதான். இது தவிர மரவள்ளிக்கிழங்கு சேர்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மரவள்ளிக்கிழங்கு வேர்களை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அதை ஒரு பிளெண்டரில் அரைத்து சாறு தயாரிக்கவும். சிறந்த முடிவுகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்.
மேலும் படிக்க: செரிமானத்திற்கு மட்டுமல்ல மூச்சுவிடுவதில் சிரமத்தை தரக்கூடிய ஆஸ்துமா நோய்க்கும் பெருங்காயம் நன்மை பயக்கும்
எடை இழப்புக்கு சிறந்தது
உலகம் முழுவதும் உடல் பருமன் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறி வருகிறது. குறைவான உடல் உழைப்பு மற்றும் அதிக கலோரி உணவுகளை உட்கொள்வது இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நீங்கள் எடை இழக்க சிரமப்படுகிறீர்கள் என்றால், உங்கள் அன்றாட உணவில் மரவள்ளிக்கிழங்கைச் சேர்க்கலாம். இதில் அதிக நார்ச்சத்து உள்ளதால் உடலில் தேங்கிய கொழுப்பைக் குறைக்க உதவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation