இரவில் நேரத்தில் குழந்தைகளுக்குக் காய்ச்சல் வருகிறதா? பெற்றோர்கள் செய்ய வேண்டியது இவை தான்

வீடுகளில் ஓடி ஆடித் திரியும் குழந்தைகளுக்குக் காய்ச்சல் வந்தால் அவர்களை மட்டுமல்ல பெற்றோர்களையும் சோர்வடைய செய்துவிடும். அதுவும் இரவு நேரத்தில் வரக்கூடிய காய்ச்சல் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கக்கூடும்.  
image
image

பருவநிலை மாற்றம், தொடர்ச்சியாக ஆங்காங்கே மழை பெய்து வருவதால் வைரஸ் காய்ச்சல்கள் வேகமாக பரவிவருகிறது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை காய்ச்சலால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளுக்குச் சென்றால் கூட மற்ற நோய் பாதிப்பிற்காக சிகிச்சைக்கு வருகிறார்களோ? இல்லையோ? காய்ச்சல் பாதிப்பால் தான் அதிகம் சிகிச்சைக்காக வருகின்றனர். அதிலும் 80 சதவீதம் வரை குழந்தைகள் தான் என்பது வேதனைக்குரியது. காலை நேரத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று விடலாம். அதுவே இரவு நேரத்தில் காய்ச்சல் வந்தால் மிகவும் சிரமம். இந்த நேரத்தில் பெற்றோர்கள் கட்டாயம் கீழ்வரக்கூடிய வழிமுறைகளைப் பின்பற்றி குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும்.

இரவு நேரத்தில் வரக்கூடிய காய்ச்சலை சமாளிக்கும் வழிமுறைகள்:

குழந்தைகளுக்கு இரவு 10 மணிக்கு மேல் காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல முடியாது. இந்த நேரத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை. பெரியவர்களைப் போன்று குழந்தைகளுக்கு அதிகம் வியர்க்காது என்பதால் உடல் அதீத சூடாக இருக்கும். இதனால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஈரத்துணியை வைத்து உடல் சூடு அதிகம் உள்ள இடத்தில் ஒத்தனம் வைத்து எடுக்க வேண்டும்.

மருத்துகளைக் கொடுத்தல்:

குழந்தைகளுக்கு ஈரத்துணியால் ஒத்தனம் கொடுத்த பின்னதாக வீடுகளில் உள்ள காய்ச்சல் மருந்துகளைக் கொடுக்க வேண்டும். தற்போது 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் வருகிறது என்பதால் மருந்து சாப்பிட்டவுடன் அவர்களைத் தூங்க வைக்க வேண்டும்.

நீரேற்றத்துடன் இருத்தல்:

காய்ச்சல் வந்தாலே குழந்தைகளை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். வியர்வை அதிகளவில் வெளிவராது என்றாலும் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடல் சோர்வு அதிமாகும். மேலும் உடல் சூடும் அதிகரிக்கும். இவற்றைக் குறைக்க வேண்டும் என்பதால் எப்போதும் உடலை நீரேற்றத்துடன் வைப்பது நல்லது.

மேலும் படிக்க:தினமும் இரவு ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் மகத்தான நன்மைகள்!

ஆடைகளில் கவனம்:

குழந்தைகளுக்கு கனமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இவை காய்ச்சல் நேரத்தில் அவர்களை சங்கடப்படுத்தும். முடிந்தவரை காட்டன் ஆடைகளை அணிய வேண்டும். இதோடு குளிருக்கு இதமாக ஸ்வெட்டர், ஜர்கின் போன்றவற்றை அணிவிப்பது நல்லது.

அடிக்கடி மருந்துகள் கொடுத்தல்:

மேற்கூறிய முறைகளைப் பின்பற்றிய பின்னதாகவும் உடல் சூடு இரவு முழுவதும் குறையவில்லையென்றால் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கு ஒருமுறை காய்ச்சல் மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

fever

குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சலைக் குணப்படுத்த வேண்டும் என்றால், மேற்கூறிய முறைகளைப் பின்பற்ற வேண்டும். குழந்தைகள் தூங்குகிறார்கள் என்பதற்காக அப்படியே கண்டுக்கொள்ளாமல் இருக்கக்கூடாது. மாறாக அடிக்கடி குழந்தைகளைக் கண்காணித்துக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது நல்லது.

Image source - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP