தினமும் இரவு ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் மகத்தான நன்மைகள்!

இயற்கை அன்னை நமக்கு கொடுத்த மகத்தான பூண்டை இரவு நேரத்தில் சாப்பிட்டு வாருங்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் கண்டிப்பாக மேம்படும்.

eat  clove of garlic at night
eat  clove of garlic at night

எந்தவொரு மந்திரமும், மாயாஜாலமும் இன்றி உடல்நலனை மேம்படுத்த விருப்பமா ? அதற்கு மிகவும் எளிதான வழி ஒன்று உள்ளது. தினமும் இரவு நேரத்தில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வாருங்கள். பூண்டு சமையல் அறையில் பயன்படுத்தம் பொருள் மட்டுமல்ல அதன் மருத்துவ குணங்கள் நமக்கு பெருமளவில் நன்மை பயக்ககூடியவை. தினமும் இரவு நேரத்தில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்பட்டு மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி பயணிப்போம். பூண்டை ஏன் நாம் ஒதுக்கி வைக்கக் கூடாது என்பதற்கான காரணங்களையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

eating garlic at night

பூண்டின் ஊட்டச்சத்து

பூண்டின் சுவையை நாம் விரும்புவதில்லை என்றாலும் அது ஊட்டச்சத்து நிறைந்ததாகும். ஒரு பல் பூண்டின் எடை மூன்று கிராம் மட்டுமே. அதில் 4.5 கலோரி, 0.2 கிராம் புரதம், ஒரு கிராம் கார்போஹைட்ரேட், 0.1 கிராம் நார்ச்சத்து அடங்கியுள்ளது. பூண்டின் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு, ஆண்டிமைக்ரோபியல் மற்றும் இருதய நலன்களுக்காக நாம் கட்டாயம் சாப்பிட வேண்டும். இரவு நேரத்தில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் பத்துக்கும் அதிகமான நன்மைகள் கிடைக்கின்றனர்.

இதய நலன்

இரத்த அழுத்தம் மற்றும் உடலில் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து இதய நலனுக்கு பூண்டு பங்களிக்கிறது.

வளர்சிதை மாற்றம்

இரவு நேரத்தில் பூண்டு சாப்பிடுவதால் அதில் உள்ள சல்பர், அல்லிசின் கலவைகள் உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன. இதனால் உடலில் உள்ள கொழுப்பு எளிதில் உடைக்கப்படும். கலோரி எரிப்பை அதிகப்படுத்துவதால் உடல் எடையும் குறையும். உடலில் ஆற்றல் அதிகரிக்கும், நல்ல தூக்கம் கிடைக்கும்.

நச்சு நீக்கம்

இரவு நேரத்தில் பூண்டு சாப்பிடுவது உடலில் நச்சு நீக்கத்தை உறுதி செய்கிறது. உடலுக்குள் எந்தத் தீங்கு விளைவிக்கும் பொருள் இருந்தாலும் அதை நீக்க உதவுவது பூண்டு தான்.

கொழுப்பு எரிப்பு

அல்லிசின் உள்ளடக்கம் காரணமாக பூண்டு நம் உடலில் கொழுப்பு எரிப்பை தூண்டிவிடுகிறது. எனவே பூண்டை இரவு நேரத்தில் மட்டுமல்ல காலை, மதிய உணவுகளில் தவறாமல் சேர்த்துக் கொள்ளவும்.

நல்ல தூக்கம்

இரவு நேரத்தில் பூண்டு சாப்பிடுவதால் நம் நரம்பு மண்டலம் அமைதிபடுத்தப்பட்டு நல்ல தூக்கம் கிடைக்கிறது. அதேபோல பூண்டு மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றை குறைக்கிறது.

ஜீரண மேம்பாடு

பூண்டு நம் உடலில் ஜீரண பிரச்னைகளை தவிர்க்க உதவுகிறது. இரவு நேரத்தில் பூண்டு சாப்பிட்டால் வயிறு உப்புசம், ஜீரண கோளாறு தவிர்க்கப்படும். வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் வளரவும் பூண்டு உதவுகிறது.

சரும ஆரோக்கியம்

பூண்டு நம் உடலில் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி அனைத்து சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்கிறது.

புற்றுநோய்க்கு சிறந்த தடுப்பு

உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் பரவலையும் பூண்டு தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP