கை, உடல் பாகங்களில் சிறு மாற்றங்கள் அல்லது நகர்வு ஏற்படும் போது எல்லோருக்கும் நடுக்கம் உண்டாகும். இதை உடலியல் நடுக்கம் என்கின்றனர். இது இயல்பானதும் கூட. மன அழுத்தம், பதட்டம், காஃபின் பயன்பாடு, தூக்கமின்மை ஆகியவற்றை நடுக்கத்தை அதிகரிக்கும். கை அதிகமாக நடுங்குவதற்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரையின் பக்க விளைவாகவும் இருக்கலாம். இவை எதுவும் இன்றி எதிர்பாராதவிதமாக நடுக்கம் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். கை நடுக்கத்தை தடுக்க நரம்பியல் நிபுணர்களிடம் இருந்து மருத்துவ ஆலோசனையை பெற்று முறையான சிகிச்சை எடுக்க வேண்டும். இந்த பதிவில் சாதாரண கை நடுக்க பிரச்னைக்கு இயற்கையான வழிகளில் எப்படி தீர்வு காண முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆம். கை நடுக்கம் வழக்கமான விஷயனே. மன அழுத்தம், கவலை மற்றும் போதுமான நேரம் தூங்காத நபர்களுக்கு நடுக்கம் ஏற்படும். ஒரு நபரின் வழக்கமான செயல்பாடுகளில் கை நடுக்கம் ஏற்படாதவரை அதை பெரும் பாதிப்புக்குரிய விஷயமாக கருத தேவையில்லை. எனினும் அன்றாட செயல்களின் போது கை நடுக்கம் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
அன்றாட செயல்பாடுகளுக்கே கை நடுங்கினால் நாம் அசெளகரியமாக உணர்வோம். வாழ்க்கை முறை மாற்றம், சில சிகிச்சைகள், உணவுமுறையில் மாற்றம், அறுவசை சிகிச்சை செய்தால் கை நடுக்கத்தை தடுக்கலாம். சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றியும் கை நடுக்கத்தை குறைக்க முடியும்.
நரம்பு சிதைவு, அல்சைமர் நோயை தடுக்கும் வகையில் பழங்கள், காய்கறிகள் நிறைந்த உணவுமுறைக்கு மாறுங்கள். இதோடு பருப்பு வகைகள், முழு தானியங்கள் மற்றும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் கொண்ட உணவுகளை சாப்பிடவும். மீன் சாப்பிடுவதில் கவனம் தேவை. ஏனெனில் பாதரசம் நடுக்கத்தை அதிகரிக்கும். பால் பொருட்கள், இறைச்சி ஆகியவற்றை உணவுமுறையில் குறைக்கவும்.
கை நடுக்கத்திற்கு முக்கியமான மருந்து தண்ணீர் குடிப்பது. தினமும் 3.5 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடித்தால் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றலாம். சில நச்சுகள் கை நடுக்கத்திற்கு காரணமாக அமைகின்றன.
உணவுமுறையில் இருந்து காஃபின் நீக்கினால் கை நடுக்கம் குறையும். சாக்லேட், காபி, டீ, சோடா மற்றும் இதர பானங்களில் காஃபின் உள்ளது. பல நாட்களாக காஃபின் குடித்து வந்து திடீரென நிறுத்தினால் கூட நடுக்கம் ஏற்படலாம். 10 நாட்களுக்கு பிறகு அந்த நடுக்கம் குறைய ஆரம்பிக்கும்.
நரம்பு மண்டலத்தின் நன்மைக்கு பி 12 வைட்டமின் மிகவும் முக்கியமானது. உடலில் பி 12 வைட்டமின், பி 6, பி 1 தட்டுப்பாடின் போது கை நடுக்கம் ஏற்படும். பி 12 வைட்டமின் கிடைக்க இறைச்சி, முட்டை, பால் சாப்பிடவும்.
மேலும் படிங்க கருத்தரிப்பதற்கு செக்ஸ் செய்ய வேண்டிய சரியான நேரம்; தம்பதிகள் கவனத்திற்கு
தினமும் 8 மணி நேரம் நன்றாக தூங்கினால் கை நடுக்கம் தவிர்க்கலாம். நன்றாக தூங்கும் போது இதய துடிப்பு, இரத்த அழுத்தம், நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் சீராக இருக்கும். இதன் மூலம் நடுக்கம் தவிர்க்கப்படும். உங்கள் தூக்கத்தை தடுக்கும் எந்த விஷயத்திலும் ஈடுபாடு காட்டாதீர்கள்.
கை நடுக்கத்தை தவிர்க்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளை தெரிந்து கொண்டு தினமும் செய்யவும். மஞ்சள் நிற பந்தை எப்போதும் உடன் வைத்திருங்கள். நடுக்கத்தை தவிர்க்க தசைகளும் வலுவாக இருப்பது அவசியம்.
கை நடுக்கத்திற்கு மிகவும் முக்கியமான காரணங்களாக மன அழுத்தம், கவலை மற்றும் மனநல பாதிப்பை பார்க்க வேண்டும். மன அழுத்தம் காரணமாக நடுக்கம் ஏற்பட்டால் யோகா, தியானம், மூச்சு பயிற்சி செய்யவும். அமைதியான சூழலை உருவாக்கிடுங்கள். பதட்டத்தை தவிர்க்க மசாஜிங் செல்லுங்கள். கடுமையான உடல் சோர்வு நடுக்கத்தை உண்டாக்கும். உடல் சோர்வில் இருந்து விடுபட 9 மணி நேரம் தூங்கவும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com