
காலை நேரத்தில் ஆணின் விந்தணு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்ற நேரங்களிலும் பெரியளவு மாற்றமில்லை. கருத்தரித்தல் வாய்ப்பினை இது எந்த வகையிலும் குறைத்திடாது. ஆண்களின் விந்தணு எண்ணிக்கை மாலையில் 87 மில்லியனில் இருந்து காலையில் 88 மில்லியனால அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு மில்லியன் என்ற எண்ணிக்கை பெரிதாக தெரியலாம். ஆனால் ஒரே ஒரு விந்தணு மட்டுமே கருத்தரித்தல் வேலையை செய்துவிடும். செக்ஸ் வைக்கும் நேரம் மட்டுமல்ல கருத்தரித்தலில் பல்வேறு இதர விஷயங்களும் அடங்கி இருக்கின்றன. அண்டவிடுப்பு மற்றும் பெண்ணின் ஆரோக்கியம் இதில் முக்கியமானது.

அண்டவிடுப்பின் போது செக்ஸ் வைத்தால் கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ளது. இது பெண்ணின் கருவகத்தில் இருந்து கருமுட்டை வெளியே வரும் வேரமாகும். கருவகத்தில் இருந்து வெளிவந்த கருமுட்டை 12-24 மணி நேரம் உயிர்ப்புடன் இருக்கும். இந்த நேரத்தில் ஆணின் விந்தணு சரியாக செயல்பட்டால் கருவுற முடியும்.
ஆணின் விந்தணு பெண்ணின் உடலில் 7 நாட்களுக்கு உயிர்ப்புடன் இருக்கும். கருவகத்தில் இருந்து கருமுட்டை வெளியேறும் சில நாட்களுக்கு முன்பாக செக்ஸ் வைத்தால் விந்தணு கருமுட்டைக்காக காத்திருந்து தன் வேலையை செய்யும்.
மாதத்தின் எந்த நாளில் வேண்டுமானாலும் செக்ஸ் செய்யலாம். 2-3 நாட்களுக்கு ஒரு முறை செக்ஸ் செய்வது பெண் கர்ப்பமடையும் வாய்ப்பை அதிகரிக்கும். 10ல் 9 தம்பதிகளுக்கு இது சாத்தியப்படுகிறது. அடிக்கடி செக்ஸ் செய்ய விருப்பமில்லை என்றால் அண்டவிடுப்புக்கு முன்பாக செக்ஸ் செய்து கருத்தரிக்க முயற்சிக்கலாம்.
எந்த நிலையிலும் செக்ஸ் செய்யலாம். கருப்பை வாய் பகுதியில் விந்தணு நிரம்பி இருக்க வேண்டும். செக்ஸ் செய்து முடித்த பிறகு பெண்கள் அடி வயிற்று பகுதியில் தலையணை வைக்கலாம். இதனால் விந்தணு எளிதில் உள்ளே செல்லும்.
மேலும் படிங்க ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுகோங்க
குழந்தைக்காக செக்ஸ் முயற்சிப்பது சில நேரங்களில் மன அழுத்தத்தை உண்டாகும். கருத்தரிக்க தவறினால் நீங்கள் வருத்தம் அடைய வாய்ப்புண்டு. குழந்தையை பற்றி மட்டுமே நினைத்தால் செக்ஸ் வாழ்க்கை ஆரோக்கியமானதாக அமைந்துவிடாது. உறவில் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு இன்பமாக செய்ய வேண்டிய விஷயம் செக்ஸ் ஆகும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com