இன்றைக்கு யாரைப் பார்த்தாலும் ரொம்ப ஸ்ட்ரஸ் ஆக இருக்கும். மனச ரொம்ப கஷ்டமாக இருக்கு, நிம்மதியே இல்லை என்ற வார்த்தைகளை அதிகளவில் பயன்படுத்துவார்கள். உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வு கொடுத்தால் மட்டுமே சோர்வின்றி இருக்கு முடியும். ஆம் உடல் மற்றும் மனதில் அதிகரிக்கும் சோர்வைக் குறைக்க வேண்டும் என்றால், வாழ்க்கை முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உடனே மனதிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக தூக்கம் மற்றும் தியானம் போன்றவற்றைப் பின்பற்ற ஆரம்பிப்போம். இது மட்டும் மனதிற்கு ஒய்வு தராது. இதோடு பல விஷயங்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதோ அவற்றில் சில உங்களுக்காக..
மனதிற்கு ஓய்வு தருவதற்கான வழிமுறைகள்:
தூக்கம்/ ஓய்வு:
ஒரு நாளில் 24 மணி நேரமும் அயராது ஓடி உழைக்கும் அனைவருக்கும் ஓய்வு என்பது கட்டாயம் தேவை. உடல் ஓய்வு பெறக்கூடிய நேரத்தில் உடலின் வளர்சிதை மாற்றம் சீராவதோடு இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தமும் சரியாக இருக்கும். இதனால் உடலுக்குத் தேவையான ஆற்றலை பெறுவதற்கு உதவியாக இருக்கும். சோர்வு, தசைப்பிடிப்பு மற்றும் பிற உடல் உபாதைகள் ஏற்படுவதைத் தடுக்கவும் ஓய்வு கட்டாயம் தேவை. தூங்குவது மட்டும் ஓய்வில்லை, மனதை அமைதிப்படுத்த யோகா, லேசான உடற்செயற்பாடுகளை மேற்கொள்ளவும்.
மன ஒய்வு:
மனதிற்கு ஒய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக, தூங்கினால் மட்டும் போதாது. மனதிற்கு கொஞ்சம் ரிலாஸ் அளிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். குறிப்பாக பரபரப்பான வாழ்க்கையிலிருந்து மனதிற்கு ஓய்வு கொடுக்க புத்தகம் படிப்பது, நிதானமாக நடப்பது மற்றும் போன்ற உங்களுக்குப் பிடிதத வழிமுறைகளைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.
உணர்ச்சி ஓய்வு:
மனதை ஒருநிலைப்படுத்தவும், ஓய்வு கொடுக்கவும் உணர்ச்சி ஓய்வு அவசியம். ஆம் யாராவது நம்மை திட்டினாலும், கோபமாக பேசினாலும் மனதை நிச்சயம் அதிகளவில் பாதிக்கும். இது உடலின் நல்வாழ்வை பாதிப்பதோடு உடல் சோர்விற்கு வழிவகுக்கும். எனவே உங்களின் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். உணர்வுகளுக்கு மதிப்பளித்து மனதை அமைதியாக்க முயற்சி செய்யுங்கள்.
மேலும் படிக்க:இரவில் தூக்கம் வரலயா? அப்ப கட்டாயம் இதை பின்பற்றுங்கள்.!
சமூக ஓய்வு:
இன்றைய மக்களிடம் மொபைல் போன் பயன்பாடுகள் அதிகளவில் உள்ளது. நாள் முழுவதும் சோசியல் மீடியாக்களிலும் நேரத்தை செலவிடுகின்றனர். இந்த செயற்பாடுகள் மனதை ஒருநிலைப்படுத்தும், சில செயல்பாடுகளை மனதை ரணமாக்கி பல பிரச்சனைகளை நாம் சந்திக்கும் அளவிற்குத் தள்ளிவிடும். எனவே எப்போதும் மனதை அமைதியாக்க கொஞ்சம் சோசியல் மீடியாக்களின் பயன்பாடுகளிலிருந்து விலகி இருப்பது நல்லது. இதோடு மட்டுமின்றி மனதிற்கு அமைதிக்கொடுக்க பாடல்களை கேட்பது, பிடித்த நண்பர்களுடன் பேசி மகிழ்வது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது நல்லது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation