herzindagi
early morning wakeup

காலையில் லேட்டாக எழுந்திருக்கிறீர்களா? அப்ப இந்த நன்மைகளெல்லாம் மிஸ் பண்ணிடீங்க!

<span style="text-align: justify;">தாமதமாக தூங்கி எழுபவர்களுக்கு ஏற்படும் மன நோய் பாதிப்பு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் அதிகாலையில் சீக்கிரம் எழுவது நல்லது.</span>
Updated:- 2024-08-14, 10:22 IST

அதிகாலை துயில்வது உடலுக்கும், மனதிற்கும் பல்வேறு நன்மைகளை வழங்கும். நமது வீட்டில் உள்ள முன்னோர்கள் அனைவருக்கும் ஐந்து மணிக்கு எழுவதை எப்போதும் வாடிக்கையாக கொண்டிருப்பார்கள். ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினால் என்ன? என சில நேரங்களில் நாம் அவர்களிடம் செல்லுவோம். ஆனாலும் அதிகாலையில் சீக்கிரம் எழுந்து பழகியவர்கள் அவர்களின் குணாதிசயங்களை மாற்ற மாட்டார்கள். அப்படி என்னென்ன நன்மைகள் உள்ளது என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

early wakeup

மேலும் படிக்க: அடிக்கிற குளிருக்கு உடலை சூடாக வைத்திருக்க வேண்டுமா? இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்க!

அதிகாலை சீக்கிரம் எழுவதால் கிடைக்கும் நன்மைகள்:

உங்களுக்கான நேரம்:  

அதிகாலையில் அலாரம் அடிப்பதற்கு முன்னதாக எழும் போது உங்களுக்கான நேரத்தை அமைத்துக் கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.  காலையில் ரசனையோடு காபி அல்லது டீ குடிப்பது தொடங்கி உடற்பயிற்சிகள் ஏதாவது செய்வது முதல் நேரம் ஒதுக்கி மெதுவாக செய்யலாம். பொதுவாக தூங்கி எழுந்திருந்த இரண்டு - நான்கு மணி நேரத்திற்கு நம்முடைய மூளை உடனே அனைத்து வேலைகளையும் செய்யாது. ஒருவேளை நீங்கள் தாமதாக எழுந்திருக்கும் போது உடனே அலுவலக வேலைகள் உள்பட எந்த வேலையையும் முறையாக செய்ய முடியாது.

விரைவாக தூங்குதல்:

காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்தாலும் பலரால் விரைவாக எழுந்திருக்க முடியாது. எனவே இரவு 12 மணி வரை மொபைல் பயன்பாடு, டிவி பார்ப்பதை நிறுத்தி விட வேண்டும். சீக்கிரம் தூங்க செல்லும் போது அதிகாலையில் அலாரத்திற்கு முன்னதாகவே எழுந்திருக்க முடியும். மேலும் சீக்கிரம் தூங்கும் பழக்கம் இருப்பவர்களின் செயல்திறனும், மனநிலையையும் மேன்மை அடையும்.

walking tips

 

சருமத்திற்கு சிறந்தது:

அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருப்பதால் உடலும், மனமும் எப்படி ஆரோக்கியமாக இருக்குமோ? அந்தளவிற்கு சருமமும் ஆரோக்கியத்துடன் இருக்கும். சீக்கிரம் தூங்கி அதிகாலையில் விரைவாக எழுந்திருக்கும் போது, முகத்தில் சுருக்கங்கள், கருவளைங்கள் மற்றும் முகப்பரு பாதிப்பை குறைக்க உதவியாக இருக்கும்.

சமச்சீரான உணவு:

அதிகாலையில் எழுந்திருக்கும் போது அதிக நேரம் உங்களுக்கு கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை தயார் செய்வதற்கான நேரமும் கிடைக்கும். காலையில் எந்தளவிற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுகிறீர்களோ? நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருக்க முடியும். சுறுசுறுப்பாகவும் அனைத்து பணிகளையும் செய்ய முடியும்.

 மேலும் படிக்க: சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் எக்கச்சக்க நன்மைகளை உள்ளடக்கி வைத்திருக்கும் சிவப்பு பேரிக்காய்

stress ()

காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் போது பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் செல்ல முடியும். மேலும் ஒவ்வொருவரின் மீதான தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  இதோடு தாமதமாக தூங்கி எழுபவர்களுக்கு ஏற்படும் மன நோய் பாதிப்பு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் அதிகாலையில் சீக்கிரம் எழுவது நல்லது.

Image source - Google 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com