
அனைவரும் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்கிறோம். வேலை அழுத்தம், மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஆகியவை பல பொதுவான சரும கவலைகளுக்கு பங்களிக்கிறது. இந்த சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு பலவிதமான சரும பராமரிப்பு தயாரிப்புகளை பரிசோதிக்கிறோம். ஆனாலும் முடிய சாதகமானதாக இருப்பதில்லை.
நம் ஒட்டுமொத்த சருமத்தின் ஆரோக்கியத்தில் உணவு பெரும் பங்கு வகிக்கிறது. இந்த உணவுகளை தினமும் காலையில் சரியாகப் பின்பற்றினால் சருமத்தை முற்றிலும் மாற்றலாம். அதுபோன்ற 3 உணவுகளை பற்றி இன்று பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: நோய்கள் இல்ல வாழ்க்கையை வாழ ஆயுர்வேத குறிப்புகள்

அத்திப்பழம் சுவையானவை அவற்றின் நடுவில் சில மிருதுவான விதைகள் உள்ளன. அத்திப்பழத்தில் நார்ச்சத்து உள்ளதால் குடல் இயக்கத்தை பராமரிக்க உதவுகிறது. மலச்சிக்கலுடன் போராடுபவர்கள் அத்திப்பழத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் குடல் சார்ந்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடல் எடையைக் குறைக்க டயட்டைப் பின்பற்றினால் அத்திப்பழத்தையும் உணவு அட்டவணையில் சேர்த்துக்கொள்ளலாம். எடை இழப்புக்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம் மற்றும் அத்திப்பழம் உடலுக்கு நல்ல அளவு நார்ச்சத்தை வழங்குகிறது.
அத்திப்பழம் நல்ல அளவு கால்சியத்தை வழங்குவதன் மூலம் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நம் உடல் கால்சியத்தை சொந்தமாக உற்பத்தி செய்யாது. எனவே பால், சோயா, கீரைகள், காய்கறிகள் மற்றும் அத்திப்பழங்கள் போன்ற வெளிப்புற மூலங்களைச் சார்ந்து இருக்கிறது.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை மற்றும் தேனை உட்கொள்வது சருமத்தில் பல அதிசய மாற்றங்களை செய்யும். பொடுகு/டெர்மடோபைட் பூஞ்சையைக் குணப்படுத்த எலுமிச்சை சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கூடுதலாக இதில் வைட்டமின்-சி உள்ளதால் சருமத்தை புதுப்பிக்க உதவுகிறது மற்றும் சரும செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் சருமத்தில் இருந்து அதிகப்படியான எண்ணெயை அகற்றுவது மட்டுமல்லாமல், முகப்பருவாள் ஏற்படும் துளைகளை நீக்குகிறது. ஒரு கிளாஸ் எலுமிச்சை தண்ணீர் மற்றும் தேன் செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், பரு இல்லாத சருமத்தை தருகிறது.

மஞ்சள் பால் ஏராளமான ஆரோக்கியம் மற்றும் தோல் நன்மைகளை வழங்குகிறது. இது ஒரு பாரம்பரிய மற்றும் ஆயுர்வேத மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது ஆன்டிபயாடிக் மற்றும் வைரஸ் தடுப்பு முகவராக செயல்படுகிறது. மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது, அதே நேரத்தில் பால் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது வயதான செயல்முறையை மெதுவாக்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: சரும ஆரோக்கியத்தை பராமரிக்க இதோ 10 வகையான சூப்பர்ஃபுட்!!
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com