எந்த வயதினராக இருந்தாலும் கண்களுக்கு கீழ் கருவளையங்கள் உருவாக பல காரணங்கள் இருக்கலாம். குடும்ப மரபியல், முதுமை மற்றும் வாழ்க்கை முறை ஆகிய காரணிகள் கண்களுக்கு கீழ் கருவளையங்கள் உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வாமை, ஊட்டச்சத்து குறைபாடு அல்லது அடிப்படை சுகாதாரம் இல்லாமை கூட கருவளையங்கள் ஏற்படும் என்பதை அறிந்து இருப்பீர்கள்.
கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையம் மருத்துவ பிரச்சினையின் அறிகுறி அல்ல. எனினும் நீங்கள் அதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வயது அதிகரிக்கும் போது கண்களுக்குக் கீழே உள்ள தோல் தளர்வாகவும் மெல்லியதாகவும் மாறுகிறது. இதனால் தோலின் கீழ் உள்ள இரத்த நாளங்கள் அதிகமாகத் தெரியும். எனவே கண்களின் கீழ் கருமையான தோற்றம் ஏற்படும்
மரபியல்
கண்களுக்குக் கீழே கருவளையங்கள் உருவாக குடும்பங்க மரபியலும் காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கண்களை அடிக்கடி தேய்ப்பது
உங்கள் கண்களைத் அடிக்கடி தேய்ப்பது மற்றும் கண் பகுதியில் காயம் ஏற்பட்டால் சொறிவதால் கண்களுக்கு கீழே இரத்த நாளங்கள் உடைந்துவிடும்.
தூக்கமின்மை
மோசமான தூக்கப் பழக்கம் கண்களுக்குக் கீழே உள்ள தோலை வெளிர் நிறமாகத் மாற்றும்.
நீரேற்றம்
போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது கண்களுக்குக் கீழே உள்ள தோல் மந்தமாகத் தோன்றலாம்.
வாழ்க்கை முறை
மன அழுத்தம், அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் போன்ற பிற காரணிகளும் கண்களுக்குக் கீழே கருவளையங்களை ஏற்படுத்தும்.
மேலும் படிங்கSleeping Tips : தினமும் நல்லா தூங்கனுமா ? இந்த எளிய வழிகளை பின்பற்றுங்க
கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை சரிசெய்ய வீட்டிலேயே என்ன செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
போதுமான தூக்கம்
கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுவதை தடுக்க ஒவ்வொரு இரவும் குறைந்தது எட்டு முதல் ஒன்பது மணிநேரம் தூங்க முயற்சிக்கவும்.
வெள்ளரிக்காய்
தூங்கும் முன்பாக கண்கள் மீது வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கவும். வெள்ளரிக்காயின் நீர் மற்றும் வைட்டமின் சி கண்களுக்கு மருந்தாகச் செயல்படுகிறது
தேநீர் பை
தேநீர் பையை தண்ணீரில் மூழ்கி கண்களுக்கு கீழே வைக்கவும். தேநீரில் இருக்கும் காஃபின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நேரடியாக கண்களுக்கு நன்மை பயக்கும்.
ஃபேஷியல்
கண் பகுதியைச் சுற்றி மசாஜ் செய்வது, ஃபேஷியல் போன்றவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.
அலங்காரம்
கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்களை மறைப்பதற்கு உங்கள் தோலின் நிறத்தை மாற்றுங்கள். இதற்கு கிரீம் பயன்படுத்தி அலங்காரம் செய்யலாம்.
சன்ஸ்கீரின் பயன்பாடு
எப்போதும் கண்களைச் சுற்றி சன்ஸ்கிரீன் வைக்க மறக்காதீர்கள். அதேநேரம் சன்கிளாஸ் அணியுங்கள். UV பாதுகாப்பு சன்கிளாஸ்களை அணிவது மற்றும் கண்களைச் சுற்றி சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது கருவளையங்களைத் தடுக்க அல்லது குறைக்க உதவும்.
மேலும் படிங்கSunscreen Benefits : குளிர்காலத்திலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்க! ஏன் தெரியுமா ?
மன அழுத்தத்தைக் குறைக்கவும்
உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்க ஆரோக்கியமான வழிகளைக் கண்டறிந்து அதை செயல்படுத்தவும்
குடி பழக்கத்தை நிறுத்துங்கள்
அதிகமாக மது அருந்துவது இரத்த ஓட்டத்தைக் குறைக்கும். புகைபிடித்தல் மற்றும் புகையிலை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். புகைபிடிப்பதால் சருமத்தின் வயதடையும் செயல்முறையைத் துரிதப்படுத்துகிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation