
நம்முடைய உடல் எடை அதிகரிக்க ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே முக்கிய காரணமாகும். நம்மில் பெரும்பாலானோர் உடல் உழைப்பின்றி கணினி முன் அமர்ந்து எந்தவித செயல்பாடுமின்றி வேலை செய்கிறோம். இதனால் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பு சேர்ந்து எடை அதிகரிக்கிறது. இதன் பிறகும் சிலர் உடல் எடையைக் பற்றி கவலைப்படுவதில்லை. ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு நோய் பாதிப்புக்கு ஆளாகும் போதே எடை அதிகரிப்பை பற்றி சிந்திக்கிறோம். நீண்ட வேலை நேரத்தால் உடற்பயிற்சி செய்து உடல்எடையைக் குறைப்பது சாத்தியமற்றதாக தோன்றும் நபர்களுக்காக இந்த கட்டுரை...
எடையைக் குறைக்க நாம் ஜிம் சென்று பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியம் கிடையாது. வீட்டிற்கு வாங்கும் உணவுப் பொருட்களை கொண்டே எடையைக் குறைக்கலாம். உணவுமுறை மாற்றத்தால் கூட ஒரே வாரத்தில் மூன்று கிலோ எடையைக் குறைக்க முடியும்.
வெறும் வயிற்றில் கொழுப்பை குறைக்கும் டானிக்கை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கவும். கடைகளில் கிடைக்கும் இந்த கொழுப்பு கரைக்கும் டானிக் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. உடலில் கொழுப்பு கரைப்பை வேகப்படுத்தும் இந்த டானிக் செரிமானத்திற்கும் சிறந்தது.

உடல் ஆரோக்கியத்திற்கு மாவுச்சத்து கொண்ட உணவுகளை விட புரதச்சத்து, நார்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது. இதற்கு நாம் வேகவைத்த பருப்பு உருண்டை சாப்பிட வேண்டும்.
மேலும் படிங்க இரவு பணி செல்வோருக்கு ஏற்ற உணவுகள்!
ஆந்திராவின் மிகப் பிரபலமான பெசரட்டு இரவு நேரத்திற்கான சிறந்த உணவாகும். இதற்கு ஒரு கப் பாசி பருப்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும்.
இதனுடன் உங்களுக்கு பிடித்தமான அரை கட்டு கீரையை சேர்த்து மிக்ஸியில் போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். இதை தோசைக் கல்லில் ஊற்றி கொஞ்சம் எண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். பெசரட்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவும்.
தூங்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பாலுடன் கொஞ்சம் மஞ்சள், மிளகு, நட்சத்திர சோம்பு சேர்த்து கொதிக்க விட்டு அதன் சூடாறிய பிறகு சுத்தமான தேன் சேர்த்து குடிக்கவும். இது சிறந்த தூக்கத்திற்கு உதவும்.
இந்த உணவுமுறையை நீங்கள் ஒரு வாரத்திற்கு கடைபிடித்தால் நிச்சயம் மூன்று கிலோ எடையைக் குறைக்கலாம். மேலும் அரைமணி நேரம் நடைபயிற்சி செய்வது நல்லது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com