சோடியம் நமது உடலுக்கு மிகவும் முக்கியமானது. சோடியம் உடல் திரவ சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இது மட்டுமின்றி நரம்புகள் மற்றும் தசைகள் சரியாக செயல்பட உதவுகிறது. ஆனால் அதை நீங்கள் அதிகமாக உட்கொண்டால் கடுமையான உடல் சேதத்தை சந்திக்க நேரிடும். இதன் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இதய நோயை ஊக்குவிக்கிறது. அதிக அளவு சோடியம் உள்ள உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க: தினமும் இந்த ஸ்பெஷல் டீ குடித்தால் மழைக்காலத்தில் நோய்களை எதிர்த்து போராடும் சக்தி கிடைக்கும்
இப்போதெல்லாம் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்லாத பன்றி இறைச்சி, கொத்திறைச்சி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சியை மக்கள் உண்ணத் தொடங்கியுள்ளனர். இதில் அதிக சோடியம் உள்ளதால் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற அபாயத்தை ஏற்படுத்தும்.
நேரமின்மையால் இந்த காலகட்டத்தில் மக்கள் டின்னில் அடைக்கப்பட்ட உணவை சாப்பிட வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். இது போன்று வாங்கி பயன்படுத்தப்படும் காய்கறிகள், சூப்கள், பழங்கள் மற்றும் தின்பண்டங்கள் போன்றவையில் சோடியம் நிறைந்துள்ளது. இது புதிய காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களைப் போல நன்மை பயக்காது, இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதில் டிரான்ஸ் கொழுப்பு மற்றும் சோடியம் உள்ளடக்கம் மிக அதிகமாக உள்ளது. டின்னில் பதப்படுத்தப்பட்ட இந்த உணவுகளில் உப்பு சேர்ப்பதால் சோடியம் அதிகமாக இருக்கிறது.
ஆரோக்கியமானது என்று நீங்கள் கருதும் சீஸ் உண்மையில் நல்ல அளவு கால்சியம் மற்றும் புரதத்தைக் கொண்டுள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் இவை இருந்தபோதிலும், இது இதயத்திற்கு நல்லதல்ல ஏனெனில் இதில் அதிக அளவு சோடியமும் காணப்படுகிறது. இது தவிர சந்தையில் கிடைக்கும் சாஸ்களிலும் சோடியம் நிறைந்துள்ளது, இவற்றை அதிக அளவில் தினமும் எடுத்து வந்தால் இதய நோய் வரும்.
மேலும் படிக்க: ஆரோக்கியமான தூக்கத்தை பெற குங்குமப்பூ, திராட்சையை சாப்பிடுங்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com