மொட்டை அடித்து, காது குத்துவதை இன்றைய தலைமுறையினர் ஆன்மிக விஷயமாகவும், மூட நம்பிக்கையாகவும் பார்க்கின்றனர். முந்தைய தலைமுறை அல்லது பெற்றோரிடம் இருந்து மொட்டை அடித்து காது குத்துவதன் முக்கியத்துவத்தை கேட்டு தெரிந்து கொள்ளாததால் இத்தகைய மடத்தனமான கேள்விகள் எழுகின்றன. குழந்தை பிறந்து ஒரு வருடத்தை நிறைவு செய்தவுடன் மொட்டை அடிப்பதும் காது குத்துவதும் சமய சடங்குகளுடன் தொடர்புடைதா என தெரியாமலேயே குல தெய்வ கோயிலில் உறவுகளை கூட்டி விழா கொண்டாடுகிறோம். அறிவியல் ரீதியாகவும், வழிபாட்டு ரீதியாகவும் அக்காலத்தில் பெரியர்கள் நமக்கு சில விஷயங்களை கடமை எனக் கூறி சென்றுவிட்டனர். அக்கடமையில் ஒன்றாக குழந்தை பிறந்து ஒரு வருடம் நிறைவடைந்தவுடன் மொட்டை அடித்து காது குத்தும் வழக்கம் இருக்கிறது. குல தெய்வ வழிபாட்டை பொறுத்து இந்த வழக்கத்தை பின்பற்றும் காலம் மாறும்.
குழந்தையின் தலை ஆடாமல் உச்சி குழி மூடிய பிறகு சிலர் மொட்டை அடிப்பார்கள், ஒரு வருடம் நிறைந்தவடைந்தவுடன் மொட்டை அடிப்பார்கள், குல தெய்வக் கோயில் திருவிழாவின் போது மட்டும் மொட்டை அடிப்பார்கள். எப்படியாக இருந்தாலும் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துவது அவசியமாகும். ஆண், பெண் என யாராக இருந்தாலும் ஏன் இந்த வழக்கத்தை பின்பற்ற வேண்டும் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
நம்முடைய உடல் தாயின் கருவறையில் வளரத் தொடங்கும் நாள் முதல் ஒரு விதமான திரவத்தில் ஊறிக் கொண்டு இருக்கும். கரு முட்டையில் இருந்து போதுமான வளர்ச்சி பெற்ற குழந்தையாகும் கருவறையில் 9 மாதங்கள் இருக்கிறோம். தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு சென்ற பிறகு ஜீரணித்து வெளியேறிய கழிவுகளுக்கு மத்தியில் வளர்கிறோம்.
தாய் பிரசவித்தவுடன் குழந்தையை பார்த்தால் நமக்கு இந்த விஷயம் எளிதாக புரியும். கழிவுகள் மற்றும் இரத்த கரையில் ஊறி குழந்தை காணப்படும். அதனால் தான் குழந்தையை வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வைப்பார்கள். குழந்தையின் உடல் உலகின் வெப்பநிலைக்கு ஒத்துப்போன பிறகு நம்மிடம் காட்டுவார்கள். தாயின் கருவறையில் இருந்த குழந்தைக்குள் திரவம், கழிவு அனைத்துமே சென்றிருக்கும். இவை குழந்தை பிறந்த பிறகு சிறுநீராகவும், மலமாகவும் வெளியேறும்.
தலையில் இருக்கும் கழிவுகள் நீங்காது. உச்சி குழி மூடிய பிறகு மண்டை ஓடு கனமாக மாறி மூளை வளர்ச்சி ஆரம்பிக்கும். இதற்கு ஒரு வருடம் ஆன பிறகு மொட்டை அடிக்கும் போது மயிர்க்கால்கள் வழியாக கழிவுகள் வெளியேறும். வைட்டமின் டி தலை வழியாக கிடைக்கும். இவ்வளவு விளக்கமாக சொல்லுவதற்கு பதிலாக கடமையாக பின்பற்ற சொல்லிச் சென்றுவிட்டனர்.
இதை கர்ண பூஷண விழா என்றழைக்கின்றனர். நம்முடைய காதுகள் ஓம் வடிவத்தை பெற்றவை. ஓம் வடிவம் எப்போது பூர்த்தி பெறும் என்றால் புள்ளி வைத்தால் மட்டுமே. ஓம்காரத்தின் வெளிப்பாடான காதில் ஆணவம் வெளிப்படும் என்பதால் அதை குறைப்பதற்கே வாத்தியார்கள் காதை திருகுவார்கள். இதில் ஓட்டை போடும் போது நரம்பு மண்டலம் சீராக செயல்படும். அதே போல ஞாபக சக்தி அதிகரிக்கும். மேல் காது குத்தும் பழக்கம் கிராமத்தில் உள்ளது. காதில் கடுக்கன் போடுவதும் நல்லது.
மூத்தோரின் சொற்கள் முதுநெல்லிக்கணி போன்றது. முதலில் கசக்கும். அதன் பிறகு இனிக்கும். எனவே இவற்றை மூட நம்பிக்கை என தவிர்க்க கூடாது. இவை முற்றிலும் நம் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com