வெறும் வயிற்றில் இஞ்சி சேர்த்துக்கொள்பவரா? எனில், இது போன்ற மோசமான விளைவுகள் உண்டாகலாம்!

நீங்கள் வெறும் வயிற்றில் இஞ்சியினை சாப்பிட்டால், இப்பிரச்சனைகளை சந்திக்கலாம். அவை என்னவென்பதை படித்தறிந்து பயன் பெறலாம்.

ginger on empty stomach big
ginger on empty stomach big

கோடைக்காலமோ அல்லது குளிர்காலமோ, எதுவாக இருந்தாலும் நம் வீட்டில் இஞ்சி இல்லாமல் இருக்காது. இந்த இஞ்சியை நம் பெரும்பாலான உணவில் பார்க்கலாம். அதே சிலசமயம், டீ போன்றவற்றில் பார்க்கலாம். சில சமயம் காய்கறியில் சேர்ப்பதையும் பார்க்க முடியும். இவற்றை தவிர, பல பெண்கள் வெறும் வயிற்றில் இஞ்சி டீயினை காலையில் குடிப்பதையும் பார்ப்போம். ஏனெனில், இது சுவையோடு சேர்த்து ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. இந்த ஸ்ட்ராங் டீ, இதயத்தையும், மனதையும் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. இதோடு, பல பெண்கள் தங்களின் உடல் எடையை குறைப்பதற்காக காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி கசாயம் வைத்து குடிப்பர்.

ஏனெனில், இஞ்சி டீயில் வைட்டமின் C, மெக்னீசியம் மற்றும் பல தாதுக்கள் இருப்பதால், பலவிதமான உடல்நல பிரச்சனைக்கு இது உதவுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக இஞ்சியை வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது, பலவிதமான உடல் பிரச்சனைகள் வரும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இஞ்சி உஷ்ணத்தன்மை உடையது. இது கேட்பதற்கு வித்தியாசமாக தெரியலாம். ஆனால், அது தான் உண்மை. வெறும் வயிற்றில் அளவுக்கு அதிகமாக இஞ்சியை எடுத்துக்கொண்டால், அதனால் உடல் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.

இது குறித்து மருத்துவ நிபுணர்சமீர் அகமது அன்சாரி (குரு தேஹ் பகதூர் மருத்துவமனையின் ஆரோக்கியநல மருத்துவர்) கூறுவது என்னவென்றால், ‘இஞ்சி எண்ணற்ற நன்மைகளை கொண்டது தான். ஆனால் வெறும் வயிற்றில் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது, அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் வரலாம். பல ஆய்வுகளின் கூற்றுப்படி, இஞ்சியை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது, அதிக அளவில் செரிமான நீர் உருவாகும். இதனால் பிரச்சனைகள் உண்டாகும். எனினும், எல்லோருக்கும் ஒரே மாதிரியாக பிரச்சனைகள் இருப்பதுமில்லை.’ என்கிறார்.

அசிடிட்டி

ginger on empty stomach

இஞ்சியை சரியான அளவில் எடுத்துக்கொண்டால் நன்மை அளிக்கும். ஆனால், அதிகம் எடுத்துக்கொள்ளும்போது அமிலமாக உருவாகிறது. இதன் காரணமாக இரைப்பை சம்பந்தபட்ட நோய்களான நெஞ்செரிச்சல், ஏப்பம் அதிகம் வருதல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனை வரலாம். இஞ்சி டீ, வயிற்றில் அமிலத்தன்மையை அதிகப்படுத்தும். இதனால் அசிடிட்டி பிரச்சனை உண்டாகும்.

அளவுக்கு அதிகமாக எடை குறைதல்

ginger on empty stomach

உடல் எடையை குறைக்க பெண்கள் வெறும் வயிற்றில் இஞ்சியை உட்கொள்வர். ஏனெனில், வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீரை தொடர்ந்து குடித்து வர, உடல் எடை குறையும். இதனில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்பு, உடல் எடை குறைய உதவுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக நீங்கள் இஞ்சியை எடுத்துக்கொண்டால், விரைவில் அதிகமான எடையை இழந்து விடுவீர்கள். நார்மல் எடையை விட, மிகவும் எடை குறைவாக இருக்கும் போது, உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம்.

நெஞ்செரிச்சல்

ginger on empty stomach

அன்றைய நாட்களில், இஞ்சியை உணவு முதல் டீ வரை என பல வழிகளில் நீங்கள் பயன்படுத்தி வந்தீர்கள். எவ்வாறாயினும், இஞ்சியை கொண்டு டீ குடிப்பது அல்லது சாப்பிடுவது சுவையை அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். மேலும், செரிமானத்துக்கும் நமக்கு உதவுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக இஞ்சியை சேர்த்துக்கொள்ளும்போது, அது தீங்கு விளைவிக்கும். ஆம், இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம். சில பெண்கள் வயிற்றில் எரிச்சல் உணர்வு இருப்பதாகவும், மூச்சு பிரச்சனை உள்ளதாகவும் கூறுகின்றனர். இதனால் அவர்களின் செரிமானமும் மோசமடைகிறது.

இரத்த அழுத்தத்தை பாதிக்கும்

ginger on empty stomach

உயர் இரத்தம் அழுத்தம் உள்ளவர்கள், சரியான அளவில் இஞ்சியை எடுத்துக்கொள்ளும்போது நல்ல பலனை அடைகிறார்கள். ஆனால், இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள், சிறிதளவு இஞ்சியை எடுத்துக்கொண்டால் கூட அது தீங்கு விளைவிக்கும். ஏனெனில், இஞ்சியில் இரத்தத்தை மெலிதாக்கும் கூறுகள் உள்ளது. இது போன்ற சூழலில், வெறும் வயிற்றில் தேவைக்கு அப்பாற்பட்ட இஞ்சியை நீங்கள் எடுத்துக்கொண்டால், குறைவாக இருக்கும் இரத்த அழுத்தம் மேலும் குறைந்து மோசமான சூழலை உருவாக்கலாம்.

மாதவிடாய் பிரச்சனை

ginger on empty stomach

இஞ்சி உஷ்ணத்தன்மை கொண்டது. இதனில் உள்ள கூறுகள் இரத்தத்தை மெலிதாக்கும். எனவே, மாதவிடாய் சமயத்தில் அதிகமான சங்கடங்களை நீங்கள் அனுபவித்தால், இஞ்சியை அதிகம் எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். ஏனெனில், இஞ்சியை அளவுக்கு அதிகம் எடுத்துக்கொண்டால், உதிரப்போக்கை மேலும் மோசமாக்கும். அதனால், இஞ்சியை வரம்புடன் எடுத்துக்கொள்வது நல்லது.

வயிற்றுப்போக்கு

வழக்கமாக இஞ்சியை எடுத்துக்கொள்ளும்போது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும் என்பது உண்மை தான். இதனால் பல பெண்களும் வெறும் வயிற்றில் இஞ்சியை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், அளவுக்கு அதிகமாக இஞ்சியை சேர்த்துக்கொள்ளும்போது வயிற்றுப்போக்கு பிரச்சனை வரலாம். ஏனெனில், இஞ்சி உஷ்ணத்தன்மை உடையது. இதன் உஷ்ணம் வயிற்றில் ஒருவித அசவுகரியத்தை உண்டாக்கி வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது. மேலும் வாந்தி பிரச்சனையும் உங்களுக்கு வரலாம்.

இஞ்சி, சருமம் தொடர்பான பல பிரச்சனைக்கு காரணமாக உள்ளது. சருமத்தில் சொறி போன்ற பிரச்சனை சிலருக்கு இருக்கலாம். ஒரு சிலருக்கு சருமம் சிவந்து போகுதல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். இதற்கு காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் அமையலாம். ஆனால், சருமம் தொடர்பான பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கும் எனில், இஞ்சியை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது குறித்து மருத்துவரின் ஆலோசனையை கட்டாயம் பெற வேண்டும்.

எவ்வளவு இஞ்சி எடுத்துக்கொள்ள வேண்டும்?

இஞ்சியை நாம் எடுத்துக்கொள்ளும் அளவு என்பது அவரவர் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தே உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், சாதாரண மனிதர் ஒருவர் ஒரு நாளைக்கு 5 கிராம் மட்டுமே எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 2.5 கிராமுக்கும் அதிகமாக இஞ்சியை எடுத்துக்கொள்ள கூடாது. உங்களுடைய செரிமானம் மிக மோசமாக இருந்தால், 1.2 கிராமுக்கும் அதிகமாக இஞ்சியை எடுத்துக்கொள்ள கூடாது. உங்கள் உடல் எடை குறைவாக இருப்பின், 1 கிராம் இஞ்சிக்கு மேல் எடுத்துக்கொள்ள கூடாது.

உங்களுக்கும் இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமெனில், வெறும் வயிற்றில் அதிகம் இஞ்சி உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: shutterstock, unsplash, pexels

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP