
அன்றாட வேலை களைப்பிற்கு பிறகு, உங்களுக்கான சில தனிப்பட்ட நேரத்தை நீங்கள் செலவிட விரும்பலாம். அப்படி ஓய்வெடுக்கும்போது பல உடல் பிரச்சனைகளை உணருகிறீர்களா? இதற்கான காரணம் புலப்படவில்லையா? பெரும்பாலான பிரச்சனைகள் வயது முதிர்வால் ஏற்படுகின்றன. வயது கூடும்பொழுது நம் உடலில் ஏற்படும் பல மாற்றங்களை புரிந்துகொள்ளலாம்.
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் மாதவிடாய், கர்ப்பம், வெள்ளைப்படுதல், பாலியல் பிரச்சனைகள், மாதவிடாய் நிறுத்தம் போன்றவை அடங்கும். இதில் பாலியல் பிரச்சினைகள் போன்ற தனிப்பட்ட பிரச்சனைகளும் சேர்க்கப்பட்டுள்ளது. சுமார் 45% பெண்களுக்கு இந்தப் பிரச்சனை இருப்பதாகவும், சில வகையான பாலியல் செயல்பாடுகளால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் ஒரு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

30 வயதிற்குப் பிறகு, பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளால் பாலியல் ஆரோக்கியம் சார்ந்த நோய்களை அவர்கள் சந்திக்க நேரிடலாம். இது குறித்த தகவல்களுக்கு நொய்டா மதர்ஹூட் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் தன்வீர் அவுஜ்லா மற்றும் டாக்டர் மஞ்சு குப்தா அவர்களிடம் பேசினோம். இந்த பதிவில் இவ்விரண்டு மருத்துவர்களின் தகவல்களுடன் பல்வேறு சுகாதார ஆராய்ச்சிகளின் தகவல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
சில காலங்களுக்குப் பிறகு, பல பெண்களுக்கு உடலுறவில் விருப்பம் குறைய தொடங்குகிறது. இதற்கு அதிகரிக்கும் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று டாக்டர் தன்வீர் ஔஜ்லா அவர்கள் கூறுகிறார். ஹார்மோன் பிரச்சனைகளாலும் இந்த நிலை ஏற்படலாம். இதைத் தவிர்த்து உடல் மாற்றங்கள், மாதவிடாய் நிறுத்தம், கர்ப்பகால பிரச்சனைகள், மனநிலை மாற்றங்கள் போன்ற காரணங்களாலும் விருப்பம் குறையலாம். இத்தகைய சூழலில் உங்கள் பிரச்சனையை நீங்கள் புரிந்துகொள்வது நல்லது. உடலுறவின்போது வலி இருந்தால் முதலில் மருத்துவரிடம் பேசுங்கள். பின் அவரின் ஆலோசனைப்படி லூப்ரிகேஷன் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
வயது கூடும்போது, அதிகரிக்கும் உடல் எடையால் PCOS போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உடலில் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். பெண்களைப் பொறுத்தவரை உடலில் அதிகபடியான முடி வளர்ச்சியை அவர்கள் விரும்புவதில்லை. இந்த சூழலில் வாழ்க்கைமுறையில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் டாக்டர் மஞ்சு அவர்கள். வாழ்க்கை முறையைச் சரியாக மாற்றி அமைக்காவிட்டால் PCOS பிரச்சனை அதிகமாகி அதை கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும்.

இவை இளம் பெண்களுக்கும் ஏற்படலாம். இருப்பினும் வயது கூடும்போது இந்தப் பிரச்சனைகளும் அதிகரிக்கின்றன. UTI பற்றிப் பேசுகையில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த சூழலில் ஹார்மோன் பிரச்சனைகளால் பிறப்புறுப்பில் வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படலாம்.
இந்நிலையில் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். இது போன்ற பிரச்சனைகளுக்கு முறையான சிகிச்சை அவசியம்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
டாக்டர் மஞ்சு அவர்களின் அறிவுரைப்படி, முழுமையான பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் நம் உடலைக் கவனிக்க மறந்துவிடுகிறோம். சிறிய கட்டிகள், அடிவயிற்றில் வலி, வலியுடன் கூடிய மாதவிடாய் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
சில நேரங்களில் வெள்ளைப்படுதல் உங்கள் உடலில் உள்ள ஒரு பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகள் பற்றி சிந்தித்து அதிக மன அழுத்தத்துடன் இருப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே மன அழுத்தத்தை தவிரத்திடுங்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். உடல் நலம் தொடர்பான உங்கள் சந்தேகங்களை மருத்துவரிடன் பேசித் தெளிவு பெறுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: இடைப்பட்ட நாட்களில் உதிரக் கசிவு ஏற்படுகிறதா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com