மிக்ஜாம் புயலால் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தத்தளித்து கொண்டிருக்கின்றன. மழை நின்ற பிறகு இரண்டு நாட்களுக்கு நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பிவிடும். ஆனால் மழைக்கால நோய்களால் பாதிப்படைவதை தவிர்க்க நாம் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். மழைக்காலத்தில் உடல்நலக்குறைவு ஏற்படுத்தும் நோய்கள் பற்றி தற்போது தெரிந்து கொள்ளுங்கள்.
மலேரியா என்பது கொசுக்களால் பரவும் இரத்த நோயாகும். பிளாஸ்மோடியம் எனப்படும் ஒட்டுண்ணியால் மலேரியா ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சைகள் இருந்தாலும் மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மிகவும் கடுமையானது. காய்ச்சல், நடுக்கம், தலைவலி ஆகியவை மலேரியாவின் அறிகுறிகளாகும். கொசுக்கடியிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலம் மலேரியாவில் இருந்து தப்பிக்கலாம்.
இது கொசு மூலம் பரவும் மற்றொரு நோய்த்தொற்று ஆகும். AEDES எனப்படும் கொசுவின் கடியால் டெங்கு பரவுகிறது. டெங்குவினால் காய்ச்சல், கடுமையான குளிர், தலைவலி மற்றும் உடல்வலி ஏற்படும். உடலில் உள்ள இரத்த தட்டுக்களில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். நீரிழப்பு அபாயமும் உண்டு. பாராசிட்டமால் எடுத்துக் கொண்டாலும் காய்ச்சல் சற்று குறைந்தாலும் அது தொடரும். டெங்கு தடுப்பு மலேரியாவைப் போலவே உள்ளது. எனினும் டெங்கு கொசுக்கள் தேங்கி நிற்கும் நன்னீருக்கு முன்னுரிமை அளிக்கிறது. அதனால் தண்ணீர் சேமிக்கும் கொள்கலன்களை நன்றாக மூடி வைக்க வேண்டும்.
எலி காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் ஒருவகையான பாக்டீரியா தொற்றாகும். எலிகளின் கழிவுகளிலிருந்து வெளியேறும் பாக்டீரியா தண்ணீரில் கலக்கும் போது இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. கடுமையான தலைவலி, வாந்தி, இரத்தப்போக்கு, மஞ்சள் காமாலை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
மேலும் படிங்க பாட்டி வைத்தியம் : இருமலை விரட்டியடிக்கும் இஞ்சி தண்ணீர்!
ஈரமான காலநிலை காரணமாக காய்ச்சல் மற்றும் பிற சுவாச வைரஸ் தொற்றுகள் எளிதாக ஏற்படும். சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இது பொதுவாக ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்
அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர், உணவில் நிறைய ஈக்கள் மொய்ப்பதால் இரைப்பை குடல் தொற்றுகள் ஏற்படலாம். ஹெபடைடிஸ் ஏ & ஈ போன்ற மஞ்சள் காமாலையை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களே இதற்கு முக்கிய காரணமாகும்.
மேலும் படிங்க சளி, இருமல் தொல்லைக்கு உடனடி தீர்வளிக்கும் பாட்டி வைத்தியம்!
இந்த நோய்களுக்கு நீங்கள் உரிய தற்காப்பு நடவடிக்கை மேற்கொண்டால் உடல்நலம் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com