சருமம் பிரகாசமாகவும் மென்மையாகவும் பெண்கள் பலரும் சந்தனம் பயன்படுத்துவது வழக்கம். முகத்தில் சந்தனம் பூசுவதற்கும், உடலுக்கு வாசனைப் பொருளாகவும் மட்டுமல்லாமல், ஆயுர்வேதத்தில் இந்த சந்தனம் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, முகப்பருவைக் குணப்படுத்துவதில் இதற்கு முக்கியப் பங்கு உண்டு. நம் சருமத்திற்கு மட்டும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நீங்கள் சந்தனம் பயன்படுத்தலாம். அந்த வரிசையில் சந்தனத்தின் மருத்துவ குணங்கள் என்ன என்று இங்கு பார்க்கலாம்.
முகப்பரு பிரச்சினையால் அவதிப்படும் இளம் பெண்களுக்கு சந்தனம் ஒரு சிறந்த தீர்வு. சந்தனத்தையும் மஞ்சளையும் கலந்து பேஸ்ட் செய்து, இரவில் தூங்கும் முன் முகத்தில் பூசினால், 14 நாட்களில் பருக்கள் குறையும். இதை பால் அல்லது தண்ணீரில் கலந்து பூசலாம். மேலும் உங்கள் முகம் பிரகாசமாகவும், உடல் நோய்க்கிருமிகளும் அழியும்.
சருமத்திற்கு சந்தனம்
சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் சொறி மற்றும் சிவப்பு பருக்களுக்கு, சந்தனத்தையும் துளசி சாற்றையும் கலந்து பூசி வந்தால் மூன்று நாட்களில் சொறி பிரச்சனை குணமாகும்.
பெண்கள் பலருக்கும் சிறுநீரை அடக்கி வைப்பதால் சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படும். சந்தனம் கிருமிகளைக் கொல்லும் குளிர்ச்சித் தன்மை கொண்டது. சிறுநீர் பாதை தொற்று மற்றும் வலிக்கு சந்தன சர்பத் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இது சந்தனப் பொடி, சர்க்கரை, வெட்டிவேர் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது.
மேலும் படிக்க: ஆளிவிதைகளை இந்த முறைகளில் உடலுக்கு எடுத்துக்கொண்டால் பல நன்மைகள் சேரும்
சந்தன சர்பத் குடிப்பது கோடை வெப்பத்தைக் குறைக்கும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் உள்ள எரிச்சல், புண்கள் மற்றும் முகப்பருவைத் தடுக்கும். மேலும், இது இதயம், மூளை மற்றும் கல்லீரலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.
முகத்தின் தழும்புகள் மற்றும் வெயில் கருமையைக் குறைக்க, சந்தனத்தை பால் அல்லது ரோஸ் வாட்டருடன் கலந்து தினமும் இரவில் முகத்திற்கு பூச வேண்டும். இது 10 நிமிடம் உலர்ந்த பிறகு உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
சந்தனம் உடலுக்கு குளிர்ச்சி தருவதால், குளிர் உணர்வுள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையுடன் இந்த சந்தனத்தை பயன்படுத்த வேண்டும். அதே போல இந்த சந்தனத்தை அதிகம் உட்கொண்டால் இரைப்பைப் பிரச்சனைகள் ஏற்படலாம். சந்தனம் பல நலன்களைத் தரும் இயற்கை மருந்தாக இருந்தாலும், மிதமான அளவு பயன்படுத்துவது நல்லது.
Image source: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com