நம்முடைய முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக மருத்துவ பயன்களுக்கு பயன்படுத்திய தாவரங்களில் குப்பைமேனியும் ஒன்று. குப்பைமேனி செடியை அரிமஞ்சரி என்றும் அழைக்கின்றனர். இதன் பெயர் காரணமாகவோ என்னவோ குறைந்த அளவிலேயே குப்பைமேனி இலைகள் இக்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் ஆசிய கண்டத்தின் ஒரு சில பகுதிகளில் காணப்படும் இந்த மூலிகை தாவரம் அதன் மருத்துவ பண்புகளுக்காக பெயர் பெற்றது. சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் பல ஆண்டுகளாக குப்பை மேனி இலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வீட்டில் பாட்டியிடம் குப்பைமேனி பற்றி கேட்டுபாருங்கள். வரிசையாக அதன் மருத்துவ பயன்களை அடுக்குவார்கள்.
குப்பைமேனி இலைகளில் உடல் வெப்பத்தை தணிக்கும் பண்புகள் இருக்கின்றன. காய்ச்சல் அடித்தால் பாட்டியிடம் செல்லுங்கள். அவர்கள் முதற் காரியமாக குப்பைமேனி இலைகளை அரைத்து சிறிய சங்கில் வாயில் ஊற்றுவார்கள். இதை குடித்த சில மணி நேரங்களில் காய்ச்சல் குறையும். தலைவலி, உடல் வலி ஆகியவற்றுக்கும் குப்பைமேனி இலைகள் தீர்வு அளிக்கின்றன. சிலர் குப்பைமேனி இலைகளை டீயில் போட்டு குடிப்பதுண்டு.
காய்ச்சல் வந்தால் கூட மாத்திரை போட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடலாம். சளி பிடித்து கொண்டால் தும்மல் வரும், சாப்பிடுவதற்கும் சிரமமாக இருக்கும், சாப்பிடும் உணவின் சுவை தெரியாது. சளியை நீக்குவதற்கு குப்பைமேனி இலைகளை வெறும் வாயில் போட்டு மெல்லுங்கள். ஆவி பிடிக்கும் போது குப்பைமேனி இலைகளை பயன்படுத்தவும். சுவாசக் குழாயில் ஏற்பட்ட ஒரு விதமான நெரிசலில் இருந்து விடுபடலாம். ஆஸ்துமாவை குணப்படுத்துவதற்கும் குப்பைமேனி இலைகள் உதவுகின்றன.
ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த குப்பைமேனி இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளை கொண்டது. தொடர்ந்து குப்பைமேனி இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பல்வேறு விதமான தொற்றுகள், நோய்களில் இருந்தும் பாதுகாக்கப்படுவோம்.
குப்பைமேனி இலைகள் மிகச் சிறந்த வலி நிவாரணியாகும். உடலில் எங்காவது காயம் அல்லது வீக்கம் ஏற்பட்டு இருந்தால் அந்த இடத்தில் குப்பைமேனி இலை அரைத்து தேய்க்கவும், எண்ணெயில் குப்பைமேனி இலைகளை சூடுபடுத்தி ஆறவிட்டு ஒரு மணி நேரம் கழித்து காயம் உள்ள இடத்தில் தடவவும்.
மேலும் படிங்க வாய் கசப்புக்கான காரணங்களும், விரைவில் தீர்க்க உதவும் சிகிச்சை முறைகளும்
குப்பைமேனி இலைகள் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இதன் காரணமாக தோலழற்சி, சொரியாசிஸ், பரு போன்ற தோல் நோய்களை குணப்படுத்த முடியும்.
இதே போல மலச்சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக குப்பைமேனி இலைகள் கொண்டு டீ போட்டு குடிக்கவும். செரிமானப் பிரச்னைகளை தீர்க்கவும் குப்பைமேனி இலைகள் உதவும். உடலில் இரத்த சர்க்கரை அதிகமாக இருந்தால் கட்டாயம் குப்பைமேனி இலைகள் சாப்பிடவும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com