herzindagi
juices for immunity

immunity boosting juices : நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் பழச்சாறுகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழச்சாறுகள் மற்றும் காய்கறிசாருகளை பற்றி படித்தறியலாம் <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-02-24, 09:51 IST

உங்கள் உணவில் பழச்சாறுகள்,ஸ்மூத்திகள், மில்க் ஷேக்குகள் மற்றும் சாலடுகள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமாக இருக்க சிறந்த வழியாகும். இதனுடன் ஆளி விதைகள், சியா விதைகள் போன்ற சூப்பர்ஃபுட்களைச் சேர்ப்பதன் மூலம் அதிக நன்மைகளைப் பெறலாம்.

ஆரோக்கியமான உணவுடன், தினசரி உடற்பயிற்சி, நல்ல தூக்கம், யோகா, தியானம் போன்றவற்றையும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே சரியான மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்திக்கு நம்மை நாமே கவனித்துக்கொள்வது முக்கியம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள் மற்றும் காய்கறி சாறுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இதுவும் உதவலாம் :கொலஸ்ட்ராலை குறைக்கும் சட்னி ரெசிபி

தக்காளி மற்றும் புதினா சாறு

immunity boosting juices in tamil

தக்காளியில் வைட்டமின்-C , E மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற முக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இவை நம் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, நமது செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. தக்காளியில் நல்ல அளவு ஃபோலேட் உள்ளதால் தொற்று அபாயத்தைக் குறைக்க உதவும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, நெஞ்செரிச்சல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும். புதினா குளிர்விக்கும் பொருளாக செயல்பட்டு வயிற்றை குளிர்விக்கும்.

பச்சை ஆப்பிள், கேரட் மற்றும் ஆரஞ்சு சாறு

பச்சை ஆப்பிள், கேரட் மற்றும் ஆரஞ்சு சாறு ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். ஆப்பிள் மற்றும் ஆரஞ்சுகளில் வைட்டமின்-A மற்றும் வைட்டமின்-C போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு இவை முக்கியம். அதே நேரத்தில், கேரட்டில் வைட்டமின்-பி6 உள்ளது, இது ஆன்டிபாடிகளின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த பழச்சாரு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

தர்பூசணி மற்றும் புதினா சாறு

healthy juice varieties

தர்பூசணி மற்றும் புதினா இரண்டும் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. தர்பூசணியில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் நீரேற்றத்துடன் இருப்பீர்கள். தர்பூசணி அழற்சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை குறைக்க உதவுகிறது, ஏனெனில் இது அழற்சி எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்ற லைகோபீன் மற்றும் வைட்டமின்-சி ஆகியவற்றில் நிறைந்துள்ளது. காய்ச்சலுக்குப் பிறகு தசைகளில் வரும் பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். இதில் எலுமிச்சை சாறு சேர்த்தும் அருந்தலாம்.

பீட்ரூட் மற்றும் கேரட் சாறு

இந்த காய்கறிகளில் உள்ள பைட்டோநியூட்ரியன்ட்ஸ் செரிமான அமைப்பை அதிகரிக்க உதவுகிறது. இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின்-A, C, E நிறைந்த இந்த சாறு உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்மை பயக்கும். பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படும் வயிற்று எரிச்சல் மற்றும் அழற்சி பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த சாற்றை உட்கொள்ள வேண்டும்.

இதுவும் உதவலாம் :நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் சமையலறை மசாலாக்கள்

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com