
வியர்வை என்பது உடலில் இருந்து தோல் வழியாக வெளியேறும் திரவமாகும். உடல் அதிகப்படியாக உழைக்கும் போது வியர்ப்பது நல்லது தான். ஆனால் அதிகப்படியான வியர்வை மற்றும் வியர்த்துக் கொண்டே இருப்பது நல்லதல்ல. ஆண்கள் இதை எளிதாக எடுத்துக் கொள்வர். பெண்களுக்கு அப்படியல்ல. பிளவுஸ் அணிந்த பிறகு அதிகமாக வியர்த்தால் அது பார்ப்பதற்கு நன்றாக இருக்காது.
எனவே இது பெண்களுக்கு மிகவும் முக்கியமான விஷயமாகும். திருமண நிகழ்வு, கொண்டாட்டங்கள் உட்பட எந்த வகையான நிகழ்வுகளுக்குச் சென்றாலும் நாம் சில்க் சேலைகள் அணிவதை விரும்புவோம். அதற்கு மேட்சிங்காக பிளவுஸும் அணிவோம். அப்படி இருக்கும் போது குளிர்காலமாக இருந்தாலும் கோடை காலமாக இருந்தாலும் நமக்கு அதிகமாக வியர்க்கும் போக்கு இருந்தால் அணிந்திருக்கும் பிளவுஸ் மொத்தமும் ஈரமாகி விடும்.

அப்போது கையை தூக்குவதற்கே கஷ்டமாக இருக்கும், அசெளகரியமான ஃபீல் இருக்கும். பார்ப்பதற்கும் விரும்பத்தகாத வகையில் தெரியும். அதன் பிறகு நிகழ்வு முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பிளவுஸை துவைக்க முயற்சித்தால் அதன் தரமே மாறிவிடும். சலவை செய்தாலும் அது பிளவுஸின் தரத்தை மாற்றிவிடும். ஒரு சில சமயங்களில் பிளவுஸை உலர் செய்த பிறகும் வியர்வை தடம் கோடு போல தெரியும். அடுத்த முறை பயன்படுத்த நினைக்கும் போது பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. அந்த வியர்வையின் தடம் நமக்கு எரிச்சலூட்டும்.
மேலும் படிங்க குறட்டை பிரச்சினையை சரிசெய்ய இதை செய்யுங்க
அப்படி இருக்கும் பட்சத்தில் வியர்வை உறிஞ்சும் பேட் எனும் Sweat Pad ரொம்பவும் உதவிகரமாக இருக்கும். பிளவுஸ் சுத்தமாகவும் தெரியும். அக்குளில் கறை இல்லாமல் நல்லாருக்கும். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் பிளவுஸை உட்புறமாக திருப்பிக் கொள்ளுங்கள். வியர்வை உறிஞ்சும் பேட் ஒரு புறம் மென்மையாகவும் மறுபுறம் ஸ்டிக்கியாக ஒட்டிக் கொள்வது போலவும் இருக்கும். வியர்வை பேட் அளவு மெல்லியதாகும். இது லேசான எடை கொண்டதால் பிளவுஸில் இருப்பதே தெரியாது. தற்போது ஸ்டிக்கரை பீல் செய்து பிளவுஸின் தையலில் ஒட்டவும்.
பிளவுஸை திருப்பி பார்த்தால் வியர்வை உறிஞ்சும் பேட் இருப்பதே தெரியாது. எளிதாக அணியவும் முடியும். இந்த பேட் நன்றாக ஒட்டிக் கொள்வதால் கீழே விழாது. இது வியர்வையை நன்றாக உறிஞ்சி விடும். வியர்வையின் வாசனை வெளியே வராது, வியர்த்த அடையாளமும் தெரியாது.
மேலும் படிங்க பல் சிதைவை தடுப்பதற்கான வீட்டு வைத்தியம்
இதை பெண்கள் தங்கள்து ஹேண்ட் பேக்கில் எளிதாக எடுத்தும் செல்லலாம், அடிக்கடி பயன்படுத்தலாம். இது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் Use and throw பொருளாகும். வியர்வை உறிஞ்சும் பேட் வீடுகளுக்கு அருகில் உள்ள ஃபேன்ஸி ஸ்டோரிலேயே கிடைக்கும்.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com