
இன்றைய காலகட்டத்தில் பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதில் உயிர் இரத்த அழுத்தமும் ஒன்று. இதை ஆங்கிலத்தில் ஹைபர்டென்ஷன் என்று அழைக்கிறார்கள். உயர் இரத்தத்தால் இதயத் தமனிகளில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இந்த அழுத்தத்தால், தமனிகளில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள இதயம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
தவறான உணவு பழக்க வழக்கங்கள், மன அழுத்தம், தூக்கமின்மை, உடலில் உள்ள அதிகமான சோடியம் போன்ற முக்கிய காரணங்களினால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் தலைவலி, மயக்கம், சோர்வு, இதய படபடப்பு போன்ற அறிகுறிகளை உணரலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் ஏன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் தெரியுமா?
உயர் இரத்த அழுத்தத்தை பலரும் லேசாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் உயர் இரத்த அழுத்தம் ஒரு தீவிரமான உடல் நல பிரச்சனையாகும். இதனால் மாரடைப்பு முதல் சிறுநீரக செயலிழப்பு வரை பல்வேறு மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும். இந்நிலையில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பூண்டை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பூண்டு எவ்வாறு உதவும்? இது குறித்த தகவல்களை ஊட்டச்சத்து நிபுணரான பாருள் பட்னி அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம். நிபுணரின் கருத்துப்படி உயர் இரத்த அழுத்தம் தொடர்ந்தால் தமனிகளில் வீக்கம், தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதுபோன்ற நிலைகளை தடுக்க பூண்டு உதவுவதாக நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் காலையில் வெறும் வயிற்றில் 2 பல் பூண்டை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும். இந்த செயல்முறையில் பூண்டை பச்சையாக சாப்பிட வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: இயற்கையான முறையில் தொப்பை மற்றும் எடையை குறைப்பதற்கான ஆயுர்வேத தீர்வு!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com