நம் உணவில் பெருங்காயம் என்பது பெரும் பங்கு வகிக்கிறது. பெருங்காயத்தின் மணம் அனைவராலும் விரும்பப்படுவது. பெரும்பாலானோர் பெருங்காயத்தை குளிர் காலத்தில் சாப்பிடும் பொருள் என்று நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. பெருங்காயம் எல்லா காலத்திலும் உட்கொள்ள ஏற்ற பொருள். பெருங்காயத்தை முறையாக நாம் உணவில் எப்படி சேர்ப்பது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். கைரலி ஆயுர்வேதத்தின் மேனேஜர் கீதா ரமேஷ் அவர்களிடம் பெருங்காயத்தின் நன்மைகள் மற்றும் பயன்களை பற்றி நாம் பேசினோம். அவர் பெருங்காயத்தை உட்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றியும், அதை உட்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றியும் கூறினார்.
இதுவும் உதவலாம்:சுரைக்காய் நன்மைகளுக்கு இணையாக தீமைகளும் செய்யும்
பெருங்காயம் சிறிய அளவில் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். வெயில் காலத்தில், அதை சிறிது எண்ணெய் ஊற்றி லேசாக வறுத்து, அதை மோரில் கலந்து சாப்பிட வேண்டும். எப்போதும் சமைத்து தான் சாப்பிட வேண்டும் நேரடியாக கலந்து சாப்பிட கூடாது.
நீங்கள் பெருங்காயம் கொஞ்சமாக சாப்பிடுவதில் சிறிதும் தவறில்லை. ஆனால் அதிகமாக அதை சாப்பிட்டால் அது உடலுக்கு கெடுதல் ஆகி விடும். ஒரு நாளைக்கு 1/4 ஸ்பூன்க்கு மேல் பெருங்காயத்தை உண்ணக்கூடாது என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். பெருங்காயத்தை அதிகம் உட்கொண்டால் ஏற்படும் பிரச்சனைகள்
மேலும் உங்களுக்கு இரத்த அழுத்தம் இருந்தால், நீங்கள் பெருங்காயத்தை மருத்துவர் ஆலோசனை பெற்று சாப்பிட வேண்டும். ஏனெனில் இது இரத்தத்தை மெல்லியதாக மாற்றி விடும் தன்மை கொண்டது. உங்களுக்கு வயிற்றில் புண் இருந்தாலும் பெருங்காயம் சாப்பிட கூடாது. நீங்கள் இதுவரை எப்படி கொஞ்சமாக பெருங்காயம் உணவில் சேர்த்து வந்தீர்களோ, அதே போல் எப்போதும் மிக குறைந்த அளவில் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு வேறு வியாதி அல்லது வயிறு சம்பந்தமான உபாதைகள் இருந்தால், பெருங்காயம் சாப்பிடும் முன் மருத்துவரை அணுக வேண்டும். பலருக்கு பெருங்காய வாடை பிடிக்காது. அவர்கள் பெருங்காயத்தை தவிர்த்து விடலாம்.
இதுவும் உதவலாம்:சர்க்கரை நோய்க்கு சியா விதைகள் நல்லதா?
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com