மன அழுத்தம் என்பது ஒருவரின் வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப்போட்டு விடும். ஆண்,பெண்,குழந்தைகள், முதியவர்கள் என அனைவரையும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்படைய செய்கிறது மன அழுத்தம். கொரோன தொற்றைக் கண்டு மக்கள் எந்தளவிற்கு பயத்தில் இருந்தார்களோ? அதை விட அதிக அச்சத்தை ஏற்படுத்துகிறது மன அழுத்தம். புதிய தொற்று நோயாகவே உருவெடுக்கிறது என்று கூறலாம்.
தேர்வில் மதிப்பெண் குறைந்தாலும், தேர்விற்கு படிக்காவிட்டாலும் குழந்தைகள் மன ரீதியாக பாதிக்கப்படுவது போன்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான காரணங்கள் உள்ளன. இதுப்போன்ற பிரச்சனைகளிலிருந்து வெளியே வர முடியாத போது தான் நிலைமைக் கட்டுப்பாட்டை இழக்கிறது. சோகம், பதட்டம், எரிச்சல், மன உளைச்சல், உடல் நலப்பாதிப்பு என மன அழுத்தத்தால் ஏற்படும் எதிர்வினைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
உடல்நலப்பிரச்சனைகளை ஏற்படுத்தும் மன அழுத்தம்:
- ஏழை, பணக்காரர் என எவ்வித வித்தியாசமும் இன்றி அனைவரையும் பாதிக்கிறது மன அழுத்தம். தனிப்பட்ட வாழ்க்கைத் தொடர்பான சில மாற்றங்கள் மன அழுத்தத்தை உருவாக்குகிறது. பிரச்சனையிலிருந்து எப்படி வெளிவருவது? என நினைத்துக் கொண்டிருப்பது மனதை மட்டுமில்லாமல் உடல் நலத்திலும் பாதிப்பை நமக்கு ஏற்படுகிறது.
- குறிப்பாக அதிக மன அழுத்தம் ஏற்படும் நபருக்கு உயர் இரத்த அழுத்தம், இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு நிலைகளை ஏற்படுத்துகிறது.
- நீரழிவு, தலைவலி, முறையற்ற மாதவிடாய், கணவன் - மனைவிக்கிடையே தாம்பத்ய உறவில் ஆர்வமின்மை ( லிபிடோ பாதிப்பு) போன்ற பல்வேறு உடல் நலப்பாதிப்புகள் ஏற்படுகிறது.
- இதுப்போன்ற பிரச்சனைகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நிம்மதியை இழக்கச் செய்கிறது. இவற்றை முறையாகக் கண்டுகொள்ளாத போதும் தொற்று நோய்களை விட அதிக பாதிப்பை நமக்கு ஏற்படுத்துகிறது.
மன அழுத்தத்திலிருந்து தப்பிக்கும் முறை:
- மன அழுத்தம் என்பது கண்ணுக்குத் தெரியாத வைரஸ் போன்று உருவெடுக்கும் ஆள்கொல்லி நோயாகும். முறையான கண்காணிப்பு மற்றும் மருத்துவர்களின் அறிவுரைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மன அழுத்தம் அதிகரித்து தற்கொலை எண்ணம் கூட பலருக்கு ஏற்படும்.
- தனிமையில் இருப்பதும் மன அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே கோபம் மற்றும் விரக்தி ஏற்படும் தனிமையில் இருப்பதைத் தவிர்த்துவிட்டு, பிடித்த நபர்களுடன் உரையாடுவது நல்லது. புத்தகங்கள் படிப்பது, பாடல்கள் கேட்பது, நண்பர்களுடன் வெளியில் செல்வது போன்ற உங்களுக்குப் பிடித்த விஷயங்களை மேற்கொள்ளுங்கள்.
- கணவன் - மனைவிக்கிடையே பிரச்சனைகள் ஏற்பட்டால், இருவரும் தனிமையில் அமர்ந்து பேசினாலே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். இந்த நேரத்தில் நான் பெரிதா? நீ பெரிதா? என்ற ஈகோவை விட்டுவிட வேண்டும்.

- தேர்வைக்கண்டு பயம், தேர்வில் குறைவான மதிப்பெண்கள் இருந்தால் குழந்தைகளை பெற்றோர்கள் கடுமையாகத் திட்டாதீர்கள். என்ன காரணம்? எதுவும் பிரச்சனை உள்ளதா? என கேட்டறிய வேண்டும். பெற்றோராகிய நாங்கள் இருக்கிறோம் என ஆறுதல் கூறினாலே குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து அவர்களை எளிதில் மீட்டெடுக்க முடியும்.
- யோகா, தியானம் மற்றும் நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளும் போது மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க முடியும்.
இதுப்போன்ற வழிமுறைகளை நீங்கள் கையாண்டாலே மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும்.ஒருவேளை எவ்வித முன்னேற்றம் உங்களுக்கு ஏற்படவில்லையா? உடனடியாக மன நல ஆலோசகர்களிடம் பரிந்துரைகள் கேட்பது நல்லது. இது எதிர்காலத்தில் பெரிய பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதற்கு உங்களுக்கு உதவியாக அமையும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation