ஆண்கள், பெண்கள் என யாராக இருந்தாலும் அழகை விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். குறிப்பாக பெண்கள் தங்களுக்குத் தெரிந்த சில அழகுக்குறிப்புகளைப் பயன்படுத்தி முகத்தைப் பளபளப்பாக வைத்திருக்க முயற்சி செய்வார்கள். ஆனால் இவை அனைத்துக் காலக்கட்டங்களிலும் எடுபடாது. 30 வயதிற்குப் பிறகு சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். தோலின் துளைகள் பெரிதாகத் தொடங்கும் என்பதால் சருமம் தளர்வான தோற்றத்துடன் இருக்கும். இதை அப்படியே விட்டுவிடும் பட்சத்தில் முகத்தில் அதிக சுருக்கங்கள் வர ஆரம்பித்து வயதான தோற்றத்தைப் பெறக்கூடும். முகம் பளபளப்பு தன்மையை இழக்க நேரிடும்.
எனவே முறையான சரும பராமரிப்புகளைப் பின்பற்றினாலே பெண்கள் எப்போதும் தங்களுடைய முகத்தைப் பளபளப்பாக வைத்திருக்க உதவியாக இருக்கும். இதோ உங்களுக்கான டிப்ஸ் இங்கே…
எந்த பருவக்காலங்களிலும் உங்களது சருமம் வறண்டு போகாமல் இருக்க வேண்டும் என்றால், சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். நமது உடலில் 70 சதவீதம் வரை நீர் தேவை என்பதால் அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும். இது தவிர உங்களது சருமத்திற்கு கற்றாழை ஜெல், ரோஸ் வாட்டர் போன்றவற்றையும் பயன்படுத்தவும்.
மேலும் படிக்க: பாட்டி வைத்தியம் : இருமலை விரட்டியடிக்கும் இஞ்சி தண்ணீர்!
பெண்கள் தங்களுடைய சருமம் எப்போதும் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் சருமம் வறண்டு விடுவதோ, பல சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதற்கு மாய்ஸ்சரைசர் சிறந்த தீர்வாக அமையும். இது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைத்து முக சுருக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
முதுமைக்கு எதிராக பெண்களுடன் போராடுவதில் வைட்டமின் சி முக்கியமான ஒன்றாக உள்ளது. இரவில் நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்னர் வைட்டமின் சி உள்ள சீரம், ஜெல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இது சருமத்தை எப்போதும் இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும் படிக்க: ஒரே மாதத்தில் 5 கிலோ வரை உடல் எடையைக் குறைப்பதற்கான டிப்ஸ்!
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com