
வாழ்க்கையில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி என்று கேள்வி நம்மில் பலருக்கும் உண்டு. ஒவ்வொரு நாளும் நாம் அன்றாட வாழ்வில் எதிர்மறை எண்ணங்கள் முதல் நேர்மறை எண்ணங்கள் வரை அனைத்தையும் சந்திக்கிறோம். சில சமயங்களில் அவற்றை நிர்வகிப்பது பெரும் சவாலாக மாறிவிடுகிறது. பல நேரங்களில் தீர்வுகளை தேடவோ அல்லது நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவோ சூழ்நிலை இல்லாமல் போகலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் நமது உணர்ச்சிகளை உடனே அந்த தருணத்தில் எப்படி கட்டுப்படுத்துவது என்பதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
நீங்கள் உடனடியாக உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த விரும்பினால் நம்பிக்கையான ஒருவருடன் உங்கள் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்வது நல்லது. இதன் மூலம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் மற்ற நபரின் ஆதரவை பெறவும் முடிகிறது.

ஒரு சில நேரங்களில் நீங்கள் பலவிதமான உணர்ச்சிகளை உணரும்போது கண்களை மூடி ஆழ்ந்த சுவாச பயிற்சி செய்வது பெரிதும் உதவும். தியானம் செய்வது இது போன்ற சூழல்களில் உங்கள் எண்ணங்களை மற்றும் உணர்ச்சிகளை சரிசெய்ய உதவுகிறது. நீங்கள் உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்தும் போது உங்கள் உடல் மற்றும் மனநிலை அமைதியாக உணர்கிறது. இதனால் உங்கள் உடலில் நேர்மறை ஆற்றல் உருவாகுவதை நீங்கள் உணர முடியும். குறிப்பாக உங்கள் மனதை நிதானப்படுத்தி மனதில் சுமந்து கொண்டிருந்த பாரத்தை தூக்கி எறிந்தது போன்று தோணும்.
உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் அல்லது எதிர்மறை உணர்ச்சிகள் இருந்தால் உங்கள் வாழ்க்கையை இது மோசமாக பாதிக்கக்கூடும். சோகம், கவலை, பயம், கோபம், குற்ற உணர்ச்சி, அவமானம், சங்கடம் போன்ற உணர்ச்சிகள் எல்லாமே எதிர்மறை உணர்ச்சிகள் என்று கூறப்படுகிறது. மனநிலை மாற்றங்கள் மற்றும் தீவிர உணர்ச்சிகளின் பக்க விளைவாக நம்பிக்கையின்மை அல்லது விரக்தியின் உணர்வு ஏற்படுகிறது.
ஒரு சில நேரங்களில் உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும் போது ஒரு மனநல மருத்துவரை சந்தித்து உணர்வுகளை எதிர்கொள்வதே சிறந்த தீர்வு ஆகும். ஏனென்றால் இந்த உணர்ச்சிகள் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் நம் வாழ்வில் பல நன்மைகள் கிடைக்கும். இதனால் தெளிவாக முடிவெடுக்கும் திறன், அன்றாட வாழ்வில் தொடர்புகள் மேம்படும், மன ஆரோக்கியம் மற்றும் நேர்மறை உணர்ச்சிகள் வலுவடையும், இது மட்டுமில்லாமல் சுய பாதுகாப்பு அதிகரிக்கும்.
ஒரு தனிப்பட்ட உரையாடலில் உங்களிடம் கூறப்பட்ட உணர்ச்சியை முதலில் அடையாளம் காண வேண்டும். இது மகிழ்ச்சியா, சோகமா, உற்சாகமா இல்லை தூண்டுதலா என்று நீங்கள் கண்டறிந்து பதிலளிக்க வேண்டும். இதன் மூலம் எதிர்வினையை குறைக்கலாம். எதிர்வினைகளை தவிர்ப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு படி பின்வாங்கி அமைதியாக உங்கள் பதிலை கூற வேண்டும்.

உங்களுக்குள் ஏற்படும் உணர்ச்சிகளின் காரணத்தை நீங்கள் புரிந்து கொண்ட பிறகு அடுத்த கட்டமாக அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். எதிர்மறை உணர்ச்சிகளை தூண்டக்கூடிய செயல்களை முதலில் கட்டுப்படுத்துங்கள். இது போன்ற சிக்கல்களை தீர்ப்பதன் மூலம் உங்களை பாதிக்கும் உணர்ச்சிகள் காணாமல் போய்விடும். ஒருவேளை உங்களால் மாற்ற முடியாத உணர்ச்சிகளில் கவனம் செலுத்தாமல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்கள் மீது மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
மேலும் படிக்க: ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!
இந்த சமூகத்துடன் இணைந்திருங்கள் அதிக மகிழ்ச்சியான நண்பர்களுடன் பேசி பழகுங்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம் இது உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது நீங்கள் உங்கள் வாழ்வில் உணர்ச்சிகளை கற்றுக்கொள் வைக்க தொடங்கி விட்டால் வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக மாறிவிடும்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com